இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியில் நிரம்பி ஜெபித்தல் என்றால் என்ன?


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
ஆவியில் நிரம்பி ஜெபித்தல் என்றால் என்ன?
Permalink  
 


ஆவியில் நிரம்பி ஜெபித்தல் என்றால் தேவனுடைய சித்ததின்படி( மற்றவர்களுக்காக சுய நலமின்றி)ஜெபிப்பதா இல்லை அந்நிய பாஷையில் ஜெபிப்பதா..

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 
 
ஆண்டவராகிய இயேசு சொல்லியிருக்கும் இந்த் வார்த்தையை விளக்குவது என்பது கொஞ்சம் அரிதான காரியம். அனுபவத்தால் மட்டுமே இதை அறிய முடியும்.
 
அநேகர் ஆவியில் நிரம்பி ஜெபிப்பது இல்லை. அந்த ஜெபங்கள் வல்லமை அற்றதாக போய்விடுகிறது. CSI ஜெபங்கள் யெகோவா சாட்சி ஜெபங்கள் போன்றவை ஆவியில் அபிஷேகம் இல்லாத ஜெபங்களாக இல்லமால் எதோ மனப்பாடம் செய்யப்படட ஜெபங்களாக இருக்கிறது.
 
நம்முடைய சித்தம் இல்லாமல் தேவ சித்தத்தின்படியே ஜெபிப்பதுதான் ஆவியில் நிறைந்து ஜெபிப்பது. 
 
ஆவியில் நிரம்பி ஜெபிக்கும்போது சுய சித்தம் அங்கு வேலை செய்யாது நாம் ஜெபிக்கும் காரியங்கள் நமக்கே புதிதாக இருக்கும் தேவ சிந்தை நம்மில் செயல்படும் அந்த இடத்தில் அந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அறிந்து தேவன் நம்மை ஜெபிக்க வைப்பார். அந்நேரத்தில் தானாக அந்நிய பாஷை வரலாம் அதுவும் தேவ சித்தமே.
 
எல்லா ஜெபத்தையுமே தேவன் கேடகிறார்!
 
ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது நம் ஜெபம் தேவ சித்தப்படி இருக்கும்.
 
சுயமாக ஜெபிக்கும்போது அது மனுஷ சித்தப்படி இருக்கும்.
 
இதுவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

ஆவியில் நிறைந்து ஜெபிப்பது எப்படி ?

அந்நிய பாஷை பேச விருப்பம் இருந்தும் அது வரவில்லை என்றால் அதட்கு காரணம் என்ன? தேவ சித்தம் இல்லையா?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

பதில் தரும்படி வேண்டுகிறேன்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

ஆவியில் நிறைந்து ஜெபிப்பது எப்படி ?

அந்நிய பாஷை பேச விருப்பம் இருந்தும் அது வரவில்லை என்றால் அதட்கு காரணம் என்ன? தேவ சித்தம் இல்லையா?


சிஸ்ட்டர் இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் தர என்பது தெரியாமல் இருக்கிறேன். அது ஒரு அனுபவம் அதை எப்படி விளக்குவது? அதை அனுபவித்தால்  மட்டுமே புரிய முடியும். நீங்கள் கேட்பதை பார்த்தல் அபிஷேகம் பெறவில்லையோ என்று எண்ண தோன்றுகிறது.   

 
எங்கள் சபையில் ஒவ்வொரு மூன்றாம் ஞாயிற்று கிழமையும் அபிஷேக ஆராதனை என்ற தனியான ஒரு ஆராதனை நடக்கும். அதில் இதுவரை அபிஷேகம் பெறாதவர்கள் அல்லது பெற்றிருக்கிறோமா என்று தெரியாத எல்லோரும் போய் கலந்து கொள்ளலாம். மூன்று நான்கு பாஸ்ட்டர்கள் சேர்ந்து ஜெபித்து ஒவ்வொருவராக தலைமேல் கைவைத்து அபிஷேகத்துக்காக ஜெபிப்பார்கள்.
 
அவ்வேளையில் அநேகர் புதிதாக அபிஷேகம் பெறுவதை பார்க்க முடியும். உணர்ச்சி வசப்பட்டு வேறு வேறு குரலில் பேசி அப்படியே துடிப்பதுபோல் ஆடி ஸ்தோத்தரிப்பதை பார்க்க முடியும். அபிஷகம் ஏற்க்கெனவே பெற்றவர்களையும் உடனே கண்டுகொள்ள முடியும். 
 
சிலபேர் அந்நிய பாஷை பேசுவார்கள் சிலபேர் வேறுவிதமான வித்யாசமான அனுபவத்துக்கும் கடந்து போவார்கள். அதை நாமே நமக்குள் அறிய முடியும்.
 
அந்த பரிசுத்த அபிஷேகத்தை பெற்றால் மட்டுமே ஆவியில் நிரம்பி ஜெபிக்க முடியும். 
 
இரண்டு மூன்றுபேர் கூடி அதற்காக ஜெபிக்க வேண்டும்.
 
அந்நிய பாஷை  என்பது ஒரு வரம் அது இல்லாமல்கூட  அபிஷேகம் பெற்றிருக்கலாம். ஆனால் அநேக நேரங்களில் ஆவியில் நிரம்பி ஜெபிக்கும்போது வேறு பாஷை வருவது இயல்பு. நாம் என்ன பேசுகிறோம் என்ன ஜெபிக்கிறோம் என்று அறியாமல் ஆவியானவர் நடத்துதலின்படி நமக்கும் தேவனுக்கு இடையே மாத்திரம் தெரியும்படி ஜெபிப்பாதே அந்நிய பாஷைஜ ஜெபம்  
 
ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது அந்த ஜெபம் வல்லமையாக இருக்கும்.  வார்த்தைகள் நம்மை அறியாமல் உள்ளியிருந்து புறப்பட்டு வரும். நாம் என்ன ஜெபிக்கப்போகிறோம் எப்படி ஜெபிக்க போகிறோம் என்பது நமக்கே தெரியாது தேவ வல்லமையால் ஆட்க்கொள்ளப்பட்டு ஜெபிப்பாதே ஆவியில் நிறைந்து ஜெபிப்பது.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

சில  நாட்களாக  நான் ஜெபிக்கும் போது தேவ பிரசன்னத்தை உணர முடியாமல் இருந்தது. எனவே  எனக்கு  வேதனையாகவும் இருந்தது நான் அபிஷேகம் பெற்றிருக்கேனா என்று கூட நானே நினைத்தேன்.. அந்நிய பாஷை என்பது அபிஷேகத்தின் அடையாளம் என்பதால் அது எனக்கு இல்லை எனவே நான் இன்னும் அபிஷேகப்படவில்லையோ  என்று நினைக்க தோன்றியது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பதாக கூட நான் ஜெபிக்கும் போது தேவ பிரசன்னம் இல்லாததால் ஜெப நேரங்களில் ஜெபிக்க கூட முடியாமல் அழுது கொண்டு மாத்திரமே இருந்தேன்.. 

 

ஆனால் மறுநாள் ஒரு போதகரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது அதில் ,, நீ அழுது இரவு மற்றும் பகல்களில் ஜெபிக்கிறாய் அனாலும் உனக்கு பதில் இல்லாமல் இருக்கிறதை பார்த்தேன் அத்தோடு 8 காரியங்களை தேவதூதர்கள் உன் கையில் தருவதை பார்த்தேன் என்று சொல்லி அனுப்பியிருந்தார்.. 

 

அதில் 

  The First Time I Saw You: I was traveling yesterday morning, and I began to see an Angel releasing eight (8) things into your open hands! I saw in the spiritual realm, the Angel of Answers will:

  • RELEASE Your Breakthrough Answers!
  • RELEASE Your Increase Answers !
  • RELEASE Your Miracle Answers!
  • RELEASE Your Blessing Answers!
  • RELEASE Your Victory Answers!
  • RELEASE Your Elevation Answers!
  • RELEASE Your Restoration Answers!
  • And, will RELEASE Your Prosperity Answers
  • For too long, you felt like you have been stuck in a life of no divine answers. I see the days and nights where you cried and prayed, but still you have received no answers. The Lord told me to tell you my friend, that He is releasing divine answers into your life with speed

 

அதேபோல் நான் அன்று மாலையும் போய் தேவ பாதத்தில் அமர்ந்து ஜெபித்த போது நான் எதிர்பாராதவாறு தேவ பிரசன்னத்தை உணர்தேன் .. அநேரத்தில் நாவு பிரண்டு வேறு எதோ வாயில் வர முட்படுவதையும் உணர்தேன் .. அவ்வாறு சில புரியாத வார்த்தைகளும் வாயில் இருந்து வந்தது. அப்பொழுது தேவன் என்னை பெலப்படுத்தினத்தை உணர்தேன். 

 

அது போலவே அவர் வேதத்தை தியானிக்கும் போது என்னோடு பேசினார் .. நான் கடந்த சில நாட்களாக  தேவ பிரசன்னத்தை உணராததால் தேவன் என்னை கைவிட்டதை போலவும் உணர்தேன் அவ்வேளையில் தேவன் சொன்னார் .. 

ஏசாயா 49: 

14. சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

 

 

15. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

பதில் இல்லாமல் தவித்த எனக்கு பதில் தந்த தேவனுக்கு நன்றிகள். அவருக்கு மகிமை. 

ஆனாலும் ஜெப நேரத்தில் நாவிலிருந்து வேறு புரியாத வார்த்தைகள் வர பார்க்கிறது அப்பொழுது அது என்னவென்று தெரியாமல் நானே என்னை கட்டுப்படுத்துவதுண்டு.. அது அந்நிய பாஷை இல்லை நானே எதோ புலம்புகிறேன் என்று என்ன தோன்றுகிறது. இது என்னுடைய தவறா? சாத்தான் என்னை அப்படி சிந்திக்க வைக்கிறானோ? 

தெரிந்தவர்கள் சொல்லவும் 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

ஆவியில் நிறைந்து ஜெபித்தல் என்பதை உணர்தேன் அண்ணா.. ஆனாலும் சிலநேரங்களில் தேவ பிரசன்னம் இல்லாத போது குழப்பங்கள் வருகிறது.

நான் ஒன்றை திட்டம் செய்துகொண்டு ஜெபிக்க செல்வேன் ஆனால் வேறு விதமாய் நடக்கும்.. அப்பொழுது ஆவியானவரின் நடத்துதல் என்பதை உணர்வேன்.

கடந்த நாட்களில் தேவ பிரசன்னத்தை உணர முடியாமல் இருந்ததால் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன்.. மற்றபடி எதுவுமில்லை,

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard