இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிமான்கள் சீக்கிரம் எடுத்துக்கொள்ளப்படுகிறார்களா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
நீதிமான்கள் சீக்கிரம் எடுத்துக்கொள்ளப்படுகிறார்களா?
Permalink  
 


ஏசாயா

57 அதிகாரம்


    1. 1. நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.



    1. 2. நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.


நீதிமான்கள் சீக்கிரம் எடுத்துக்கொள்ளப்படுகிறார்களா? அவர்கள் மரித்து சமானதானத்துடன் இளைப்பாறுகிறார்களா? தேவனின் நியாய தீர்ப்புக்கு முன் இவ்வாறு நடைபெறுகிறதா?
இவ்வசனங்களின் சரியான விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கவும். 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
RE: நீதிமான்கள் சீக்கிரம் எடுத்துக்கொள்ளப்படுகிறார்களா?
Permalink  
 


வேத ஆதாரத்தோடு விளக்கவும் அண்ணா



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
நீதிமான்கள் சீக்கிரம் எடுத்துக்கொள்ளப்படுகிறார்களா?
Permalink  
 


வேத ஆதாரத்தோடு விளக்கவும் அண்ணா

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இந்த வசனம் நேரடியான ஒரு பொருளை தருவதாகவே இருக்கிறது.

 
நீதிமான்கள் சீக்கிரம் எடுத்துகொள்ள படுகிறார்கள் என்று வசனம் சொல்லவில்லை.  மாறாக "தீங்குவாராதற்கு முன்னே  நீதிமான்கள் எடுத்துகொள்ளப்படுகிறார்கள்" என்றுதான்  சொல்கிறது 
 
இந்த உலகில் அநேக நலலவர்கள் சீக்கிரம் மரித்துவிடுகிறார்கள். 
 
"ரொம்ப நல்ல மனுஷன் இவ்வளவு சீக்கிரமா இறந்துட்டாரு" என்று நாம் பல நேரம் பரிதபிக்கிறோம்.   
 
அதற்க்கு காரணம் என்னவென்று வசனம் சொல்கிறது 
 
தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான்   
 
அதாவது தீங்கில் விழுந்துவிடாதபடிக்கு நீதிமான்கள் சீக்கிரம்  எடுத்துகொள்ளப்படுகிரார்கள் எனபதை நாம் சிந்திக்க வேண்டும் 
என்பதே வசனம் சொல்கிறது.
 
இதற்க்கு ஒரு உதாரணம் சொல்லலாம் என்றால்  எசேக்கியா ராஜாவை சொல்லலாம்.
 
அவன் மிகவும் நல்லவனாக இருந்தான் ஆனால் அவனுக்கு நோய் வந்திருக்கும்போது ஏசாயா வந்து "நீர் மரித்து போவீர் என்று கர்த்தர் சொல்கிறார்" என்று சொல்கிறான்.  
 
II இராஜாக்கள் 20:1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.  
 
ஆனால் எசேக்கியாவோ நான் எவ்வளவு நீதிமானாக நடந்தேன் என்று சொல்லி கர்த்தரிடத்தில் அழுகிறான் 
 
2. அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, 
கர்த்தரை நோக்கி: 3. ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
 
அவன் அழுவதை பார்த்து இரங்கிய கர்த்தர் தன முடிவை மாற்றி 
அவன் ஆயுசு நாளில் 15 வருடம் கூட்டி கொடுக்கிறார் . 
 
5. நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
 
ஆனால் நடந்தது என்ன?
II நாளாகமம் 32:25 எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.  
 
என்று வசனம் சொல்கிறது!
 
இவன் இப்படி மேட்டிமையாகி கர்த்தரின் கடுங்கோபத்துக்கு  ஆளாகாமல் தடுக்கவே அவன் நீதிமானாக  இருக்கும்போதே   அவனை சீக்கிரம் எடுத்துகொள்ள தேவன் சித்தம் கொண்டார் என்று புரிகிறதாலல்லவா?
    
இந்த உலகமானது எந்த ஒரு நலலவனையம் பாவத்தில் விழவைக்கும் கொடிய நிலையில் இருப்பதால்,  ஒரு நீதிமான் தீங்கில் விழும் நிலை வந்தால் அது வருவதற்கு முன்னர் சீக்கிரம் அவர்  எடுத்துகொள்ளப்படுகிரார்கள் என்பதையே வசனம் சொல்கிறது. 


-- Edited by SUNDAR on Wednesday 7th of August 2019 05:11:02 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Ya understood anna.. Thanks

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard