கடந்த நாளில் பூந்தமல்யில் இருந்து குன்றத்தூர் போக ஒரு தனியார் பஸ்ஸில் ஏறினேன். ஓரிரு இருக்கைகள் காலியாக இருந்தது. அதில் ஒன்றில் போய் அமர்ந்தேன் சிறிது நேரத்தில் பார்த்தபோதுதான் தெரிந்தது என் பக்கத்தில் சீட்டில் இருந்த சுமார் 40 வயது மதிக்கதக்க அவர் சரியான குடிபோதையில் இருந்திருக்கிறார் என்பது.
நான் அமர்ந்ததும் சும்மா எதோ அலம்பிகொண்டு இருந்த அவர் சிறிது நேரத்தில் மிகவும் தூஷண வார்த்தைகள் சொல்லி தானாக புலம்பி திடட ஆரம்பித்துவிடடார். எங்கோ பார்த்துக்கொண்டு யாரையோ கெடட கெடட வார்த்தையால் திட்டி உளறிக்கொண்டு இருந்தார். பஸ் போகும் சத்தத்தில் மற்றவர்களுக்கு கேடடதோ இல்லையோ யாரும் கண்டு கொடுகொள்ளவில்லை ஆனால் என்னால் அவர் பக்கத்தில் இருக்க முடியவில்லை மிக மோசமான வார்த்தைகள் காதில் விழுந்தன.
கண்டக்ட்ரை கூப்பிட்டு சொல்லலாம் என்று நினைத்தபோது அவரே பக்கத்தில் வந்து அந்த குடிகாரர் பேசுவதை கேட்டும் கேடகாதவர்போல் போய்விடடார். வேறு வழியில்லை இடத்தை காலி செய்துவிடலாம் என்று பார்த்தால் வேறு எங்கும் ஸீட் காலியில்லை பஸ் நிரம்பியிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தபோதுதான் என் மனதில் ஒரு உத்வேகம் வந்து "ஆண்டவர் நம் பட்ச்சத்தில் இருக்கும்போது நாம் ஏன் இந்த குடிகாரனுக்கு பயந்து இடந்தை காலி செய்ய வேண்டும்? இவனை தேவன் பார்த்துகொள்வார்" என்ற எண்ணம் தோன்றியது.
உடனே அவர் பேச பேச நானும் "இயேசுவின் நாமத்தில் இந்த குடிகார ஆவியை கட்டுகிறேன் அது பேச முடியாமல் ஆண்டவர் நிறுத்துவராக என்று ஆவியில் ஜெபிக்க ஆரம்பித்தேன். ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் நடக்கவில்லை ஆகினும் சோர்ந்து போகாமல் இன்னும் அதிகமாக இயேசுவின் நாமத்தில் அவர் பேசுவது நிறுத்தப்படும்படிக்கு ஜெபித்தேன். என்ன ஆச்சர்யம் சிறிது நேரத்தில் எதோ உளறி அவர் அப்படியே சரிந்து தூங்கிவிடடார்.
நானும் ஜெபத்தை நிறுத்திவிட்டு நிம்மதியாக இருந்தேன் ஆனால் சுமார் 15 நிமிடம் கழித்து ஒரு ஸ்பீட் ப்ரேக்கரில் வண்டி தூக்கி போடவே மீண்டும் விழித்துக்கொண்ட அவர் மீண்டும் அதேபோல் தூஷணம் பேச ஆரம்பித்துவிடடார்.
நானும் மீண்டும் அவர் வாயை தூஷணம் பேசாதபடிக்கு கட்டும் படிக்கு ஜெபிக்க ஆரம்பித்தேன். சிறுது நேரத்தில் இருக்கையில் இருந்து எழுந்துவிடட அவர் "நீ கீழே இறங்கி வா உன்னை பார்த்துக்கொள்கிறேன்" என்று தானாக சொல்லிவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கிவிடடார்
கர்த்தர் ஜெபத்தை கேட்டு அவரை காலி செய்து அனுப்பிவிடடார்!
அவருக்கே சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக!
மாற்கு 4:40அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
என்ற வார்த்தை என்னை பார்த்து ஆண்டவர் சொன்னதுபோல் இருக்கிறது!
படகில் ஆண்டவராகிய இயேசுவே கூட இருந்தும் அதை மறந்து காற்றையும் அலையையும் பார்த்து பயந்த சீஷர்கள் போல நாமும் சில நேரங்களில் நமது பிரச்சனைகளை சொல்ல வேண்டியவராகிய தேவனிடத்தில் சொல்லி சகாயம் தேடாமல் அதில் இருந்து விலகி தப்பித்து ஓடிவிடவோ அல்லது யார் யாரோ மனுஷனிடம் சொல்லியோ அதற்க்கு ஒரு தீர்வை அல்லது ஆறுதலை எதிர்பார்க்கிறோம். அதுதான் நமது பெரிய தவறு!
நம் என்ன பிரச்சனை வந்தாலும் சரி அதாவது வீட்டில் ஒரு எந்திரம் பழுதானாலோ அல்லது யாரோ ஒருவர் பிரச்சனை பண்ணினாலோ அல்லது கொசு அதிகம் கடித்தாலும்கூட முதலில் அதை தேவனிடத்தில் தெரியப்படுத்துவோம். அதற்காக தேவனிடம் சகாயம் தேடுவோம் பின்னர் நம்மாலான முயற்சிகளை மேற்க்கொள்ளுஙவோம். . அவர் நிச்சயம் ஒரு நிரந்தர தீர்வை நமக்கு அருளுவார்!
சங்கீதம் 124:8 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)