தமிழ் மாதத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்றால் என்ன? நாம் வீட்டில் செய்கிற அநேக காரியங்களுக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்க்கும் தொடர்பு உண்டு. தமிழ் மாதத்தை பின்பற்ற வேண்டாமெனில் எவ்வாறு மாற்று மதத்தினரிடம் சுவிஷேசம் சொல்வது? அவர்கள் நம்முடைய பழக்க வழக்கங்களை கவனிக்கிறார்களே??
ஆண்டவர் செய்யாதே என்று சொல்லியிருக்கும் பட்சத்தில் நாம் எப்படி அவரிடம் கேள்வி கேட்க முடியாது.
ஆண்டவரின் வார்த்தையை மீறி நாம் மற்றவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல அவசியமில்லை என்பதே எனது கருத்து.
நம்மில் கிறிஸ்துவையும் அவரின் அன்பையும் கண்டாலே மற்றவர்கள் மனந்திரும்ப வாய்ப்புண்டு நமது கலாச்சாரத்தை பார்த்து தான் மற்றவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று இல்லை ..
pounds84 wrote //தமிழ் மாதத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்றால் என்ன? நாம் வீட்டில் செய்கிற அநேக காரியங்களுக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்க்கும் தொடர்பு உண்டு.///
பிரதர், நாம் தமிழ் நாட்டில் பிறந்ததால் நிச்சயம் தமிழ் கலாச்சரம் நம் செயல்பாட்டில் கலந்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இதுபோல் அந்தத்த நாட்டுகாரர்களுக்கு அவர்களுக்கென்று தனி தனி கலாச்சாரங்கள் உண்டு.
அதற்காக அவரவர் இஷ்டத்துக்கு அவரவர் கலாச்சாரத்தில் நடக்க நினைத்தால் வேத வாக்கியங்கள் எதற்கு.
தமிழுக்கு என்று தனி தெய்வம் இருக்கிறதே பிறகு ஏன் அதைவிட்டு நாம் ஆண்டவரின் கரத்துக்குள் வந்தோம்?
தமிழ் கலாச்சாரமானலும் சரி எந்த கலாச்சாரமானாலும் சரி அதில் முழுமை இல்லை என்பதாலேயே ஆண்டவர் நமக்காக மரித்து ஒரு புது வழியை கலாச்சாரத்தை வசனங்கள் அடிப்படையில் நமக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறார். அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
வசனத்துக்கு விரோதமாக இல்லாத எந்த கலாச்சாரத்தையும் நாம் அங்கீகரிக்கலாம் ஆனால் வசனத்துக்கு ஒத்துப்போகாத கலாச்சாரங்களை நாம் பின்பற்ற கூடாது.
அதில் ஒன்றுதான் தாங்கள் குறிப்பிடும் ஆடி மாதம் வீடு மாற கூடாது எனபது. தேவன் எந்த ஒரு காரியத்துக்கும் நாள் பார்க்க வேண்டாம் என்று சொல்லியிருக்க இந்த மாதம் இதை செய்ய கூடாது அந்த நாளில் அதை செய்யகூடாது என்ற கட்டுப்பாடுகள் தேவ வார்த்தைக்கு ஏற்றது அல்ல!
பொங்கல் எனபது தமிழர் திருநாள் அதை சூரியனுக்கென்று செய்யும்போது அது "என்னைபற்றி வேறு தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம்" என்ற ஆண்டவரின் வார்த்தைக்கு எதிராகிறது எனவே அதை விட்டுவிடுவதே ஏற்றது.
pounds84 wrote //தமிழ் மாதத்தை பின்பற்ற வேண்டாமெனில் எவ்வாறு மாற்று மதத்தினரிடம் சுவிஷேசம் சொல்வது?
ஆங்கில மாதம் அதாவது கிறிஸ்த்து பிறப்பின் அடிப்படையில் வந்த ஜனவரி - டிசம்பர் தான் அரசாங்க அங்கீகரிப்பில் இருக்கிறது.
திருடனோடு சேர்ந்து திருடிதான் அந்த திருடனுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்று அவசியம் இல்லை அல்லவா?
என்னதான் ஊரோடு ஒத்து போனாலும் தேவன் சொல்லியிருக்கும் வார்த்தைகளை கைக்கொண்டு நடப்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
///அவர்கள் நம்முடைய பழக்க வழக்கங்களை கவனிக்கிறார்களே??///
ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல் எங்கும் பொய் சொல்லாமல் "உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது என்றும்" மாத்திரம் சொல்லுங்கள். உங்கள் பெயர் பிறரிடம் எவ்வளவு வலிமை பெறுகிறது என்பதை அறிய முடியும்.
ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்படி வாழும் பழக்கம் இருந்தால் போதும் நம்மை கவனிப்பவர்கள் நிச்சயம் நம்மை போற்றுவார்கள் .
இன்று இயேசுவின் வார்த்தைகள் ஓரம் கடத்தப்பட்டு தேவையில்லாத காரியங்கள் கிறிஸ்த்தவத்துக்குள் புகுந்ததாலே பல இடங்களில் கிறிஸ்த்தவர்கள் தூற்றப்படுகிறார்கள்.
-- Edited by SUNDAR on Monday 5th of August 2019 04:35:12 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பிரதர் எனது கருத்து என்னவெனில் வானங்கள் நியமனங்கள்தான் பூமியை ஆள்கிறது என்பதை கீழேயுள்ள வேத வசனத்தின் அடிப்படையில் நம்புகிறேன்.
யோபு 38:33 வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அதுபூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
எனவே வானங்கள் நியமங்களைக் வைத்து சில உண்மைகளை கண்டறிய முடியும் என்பது உண்மை! அப்படிதான் இயேசுவின் பிறப்பை சாஸ்த்திரிகள் அறிந்து அவரை தொழுதுகொள்ள வந்தார்கள்.
எனவே தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் சில மாதங்களுக்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கலாம் அல்லது இருக்காமலும் போகலாம்
ஆனால் இந்த நியமனங்களை எல்லாம் உருவாக்கியவர் சொல்கிறார்:
ஏசாயா 51:1நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்
எரேமியா 10:2 வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
என்று திடமாய் சொல்கிறார்
பிறகு நாம் என் அதைக்குறித்து கலங்க வேண்டும்? தேவனுடைய வார்த்தைகளை நாம் சரியாக கைக்கொண்டு நடக்கும்போது நாம் செய்யவேண்டிய காரியங்களை சரியான நல்ல நேரத்தில் செய்ய வைத்து அதை வாய்க்கவும் அவரால் பண்ண முடியும்! என்பதே நமது விசுவாசம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
/////////////////
யோபு 38:33 வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
எனவே வானங்கள் நியமங்களைக் வைத்து சில உண்மைகளை கண்டறிய முடியும் என்பது உண்மை! அப்படிதான் இயேசுவின் பிறப்பை சாஸ்த்திரிகள் அறிந்து அவரை தொழுதுகொள்ள வந்தார்கள்./////////////