இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒய்வு நாளில் செய்யக்கூடாதவை எவை?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
ஒய்வு நாளில் செய்யக்கூடாதவை எவை?
Permalink  
 


ஒய்வு நாட்களில் ஆலயத்திட்கு சென்று வந்ததன் பின்னர் வேலைக்கு செல்லல் மற்றும் வியாபார கடமைகளில் ஈடுபடல் தவறா? 

 

மேலும் திங்கட்கிழமை குரிய வியாபார நடவடிக்கைகளுக்கு ஓய்வுநாளில் அவைகளை செய்து வைத்தல் தவறா? 

 

சற்று விரிவாக விளக்கவும்?

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஏசாயா 58:13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

1. நமக்கு இஷடமானதை எதுவுமே செய்ய கூடாது:
TV பார்த்தல் / மொபைல் நெட் பார்த்தல் / பிடித்தமான game விளையாடுதல் மற்றும் நமக்கு பிடித்தது எதுவோ அதை செய்ய கூடாது.
 
2. நாம் வேலை நாடகளில் செய்யும் வேலை சம்பந்தமான காரியமோ எந்த ஒரு வேலையோ செய்யக்கூடாது .
 

 

3. நம் சொந்த வாழ்க்கை சம்பந்தமான பேச்சுகள் நாளை பற்றி  திடடமிடுதல் வேலை தேடுதல்  போன்ற எதுவும் செய்ய கூடாது.     
 
4. ஒய்வு நாளை கர்த்தரின் நாள், மன மகிழ்ச்சியான நாள் என்று எண்ண வேண்டும் 
 
எரேமியா 17:22 ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரேமியா 17:27 நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்;
 
வெளியில் பொருட்க்கள் வாங்கி வீட்டுக்குள் கொண்டுவருவதோ. வீட்டில் இருந்து சுமைகளை வெளியில் கொண்டுபோவதோ ஒய்வு நாளை பரிசுத்த குலைச்சல் ஆக்கும்.    
 
"கொலை செய்யாதிருப்பாயாக"  என்பது கடடளையானால் இன்னொருவரை கொலை செய்ய  தூண்டுவதும்  கடடளைக்கு எதிரான  காரியமே!  
 
அதுபோல் மேலேயுள்ள காரியங்களை நாமும் செய்ய கூடாது செய்பவர்களை ஊக்குவிக்கவும்  கூடாது.
 
அதாவது ஒய்வு  நாளில் வியாபாரம் செய்பவனிடம் பொருள் வாங்க கூடாது.
 
 
ஓய்வுநாள் கற்பனை என்பது கடினமாக தொன்றும் ஒரு காரியம் ஆனால் அந்த ஓய்வுநாள் கைக்கொள்வதில்தான் மாம்சம் சம்பந்தமான மொத்த காரியமும் அடங்கியிருக்கிறது 
 
நீங்கள் கேட்டதால் இதை எழுதுகிறேன். ஓரிரு காரியங்களை கைக்கொண்டு நடக்க தீர்மானியுங்கள் மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் அறிய முடியும்.  
 
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

நான் நீங்கள் ஏற்கனவே கூறிய அறிவுரைப்படி கடந்த நாட்களாக ஓய்வுநாளில் எனக்கு பிரியமான காரியங்களை செய்வதை தவிர்க்கிறேன்.

மேலும் ஒய்வு நாட்களில் செய்ய கூடாதவைகளை தெரிந்துகொள்ளவே இவைகளை கேட்டேன்..

நீங்கள் குறிப்பிட்ட காரியங்களையும் கடைபிடிக்க முயல்கிறேன்.

மேலும் ஒரு சந்தேகம் அண்ணா ஒய்வு நாள் கட்டளையில் மாம்ச சம்மந்தமான மொத்த காரியமும் அடங்கியிருக்கிறது என்பதை கூறும் வேத வசனத்தை கூற முடியுமா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

 
மேலும் ஒரு சந்தேகம் அண்ணா ஒய்வு நாள் கட்டளையில் மாம்ச சம்மந்தமான மொத்த காரியமும் அடங்கியிருக்கிறது என்பதை கூறும் வேத வசனத்தை கூற முடியுமா?


 

நான் அப்படி சொல்வதன் காரணம் என்னவெனில். 
 
நியாயப்பிரமாணம் மற்றும்  பத்து கற்பனைக்குள்தான்  இந்த உலக சம்பந்தமான அனைத்து காரியங்களும் அடங்கியிருக்கிறது 
 
கிறிஸ்த்துவின் இரத்தத்தால் கழுவப்படபின் இவற்றை கைக்கொண்டு நடப்பதால் நமது உலக வாழ்க்கையை சரியாக சீர்படுத்த முடியும்.    
 
நியாயபிரமாணத்தை கைக்கொள்வதால் வரும் ஆசீர்வாதங்களை படித்து பார்க்கவும் உபாகமம் 28 1 முதல் 12 வசனம்.
 
அந்த ஆசீர்வாதங்களை பெறுவதற்கு,  பத்து கற்பனையில் 9 கற்பனைகள் அநேக கிறிஸ்த்தவர்கள் சுலபமாக கைக்கொண்டு நடந்துவிடுகிறார்கள் இந்த ஒரே ஒரு கற்பனையை மட்டும் அநேகர் கண்டுகொள்வதே இல்லை.
 
இதையும் சேர்த்து கைக்கொள்ளும்போதுதான் மாம்ச சம்பந்தமான  மொத்த பலனும் நமக்கு கிடைக்கும் என்பதை அறியவே அவ்வாறு கூறினேன்.   
 
சாயா 56:1. கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள் என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. 2 இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.  
 
 
நீதி நியாயத்தையு  பற்றிக் கொண்டு ஓய்வுநாளையம் பரிசுத்தமாய்க் ஆசாரிப்பவர்கள் பாக்கியவான்கள்.    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Ok na.. Thanks anna..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அண்ணா ஒய்வு நாளன்று ஆலயத்தின் சிற்றுண்டி சாலைக்கு சில சாப்பாடுகளை செய்து கொடுத்தல் பிழையா? ஒய்வு நாளன்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடல் கூடாதா? ஒய்வு நாளன்று தீ மூட்டாமல் முதல் நாள் செய்து வைத்து கொடுக்கலாமா?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

மேலும் அண்ணா எங்கள் வீட்டில் இந்த கட்பனையை யாரும் கண்டுகொள்வதில்லை எனவே அவர்கள் வீட்டில் சமைப்பார்கள் ஆனால் நான் ஒய்வு நாள் கட்பனையை கைக்கொள்ள மிகுந்த முயட்சி எடுக்குறேன் .. எனவே நான் அவர்கள் சமைப்பதை உண்ணலாமா? அல்லது கூடாதா ?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சிஸ்ட்டர் முக்கியமாக ஒய்வு நாளில் வேலை செய்ய கூடாது  மற்றும் நமக்கு இஷடமானதை செய்யக்கூடாது.  
 
அதை தவிர மற்ற எல்லா காரியங்கழும் கத்தரின் உணர்த்துதல் அடிப்படையில் செய்வதே சிறந்ததது.
 
என்னை பொறுத்தவரை முதலில் நீங்கள் சொல்லும் சில காரியங்களை  செய்தேன் ஆனால் தற்போது நீங்கள் மேலே கேட்பது  எதையுமே நான் செய்வது கிடையாது.
 
ஆகினும் நீங்கள் இப்போதுதான் துவக்க நிலையில் இருப்பதால் மிக முக்கியமானதை  கைக்கொள்ளுங்கள் மற்றதை ஆண்டவர் உணர்த்துதல் அடிப்படையில் செய்யுங்கள்   
 

///அண்ணா ஒய்வு நாளன்று ஆலயத்தின் சிற்றுண்டி சாலைக்கு சில சாப்பாடுகளை செய்து கொடுத்தல் பிழையா?///
 
ஆலயத்தில் வேலை செய்தால் அது தவறு இல்லை என்று வசன சொல்கிறது. ஆனால் வீட்டில் இருந்து செய்து எடுத்துப்போவதை நான் அனுமதிப்பது கிடையாது.  ஆவியானவர்  உணர்த்தி அனுமதித்தால் செய்யலாம். 
 
//ஒய்வு நாளன்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடல் கூடாதா?//
 
கண்டிப்பாக கூடாது 
 
//ஒய்வு நாளன்று தீ மூட்டாமல் முதல் நாள் செய்து வைத்து கொடுக்கலாமா?//
 
அவ்வாறு செய்யலாம்.  ஆனால் வீடுகளில் இருந்து  சுமைகளை தூக்கிக்கொண்டு வெளியில்  செல்வதுகூடாது என்று வசனம் சொல்கிறது அதை மீறாமல் செய்ய வேண்டும். 
 
///மேலும் அண்ணா எங்கள் வீட்டில் இந்த கட்பனையை யாரும் கண்டுகொள்வதில்லை எனவே அவர்கள் வீட்டில் சமைப்பார்கள் ஆனால் நான் ஒய்வு நாள் கட்பனையை கைக்கொள்ள மிகுந்த முயட்சி எடுக்குறேன் .. எனவே நான் அவர்கள் சமைப்பதை உண்ணலாமா? அல்லது கூடாதா ?///   
 
நான் அப்படி செய்வது கிடையாது. ஆனால் நீங்கள் வீட்டின் தலைவராக  இல்லாத காரணத்தால்  உங்களால் முடிந்ததை செய்யுங்கள் ஆண்டவர் உணர்த்தினால் விட்டுவிடுங்கள்.  
 
வாஞ்சிப்பவர்களும் கர்த்தர் நிச்சயம் வழி காட்டுவார். 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

/ஒய்வு நாளன்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடல் கூடாதா?//

கண்டிப்பாக கூடாது

என்பதட்கு வசன ஆதாரம் இருந்தால் தாங்கள் அண்ணா

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

வியாபாரம் என்பது ஒரு தொழில்.  தொழில் என்றால் வேலை தானே?  
 
ஒருவேலையம்  செய்யக்கூடாது என்பதுதான் கற்பனையே!  
 
அடுத்து "உன் வழிகளில் நடக்க கூடாது" என்று சொல்கிறார்
 
வியாபாரம் செய்வது நமது வழியா கர்த்தரின் வழியா?  
 
கீழேயுள்ள வசனத்தில் ஆண்டவர் வியாபாரிகளை எச்சரிக்கிறார்.   என்ன சொல்லி எச்சரிக்கிறார் தெரியுமா?
 
அந்த காலத்தில் வியாபாரிகள் எப்பொழுது ஓய்வுநாள் முடியும் நாம் எப்பொழுது பண்டக சாலைகளைக் திறந்து வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்று காத்து இருந்தார்களாம். 
   
அப்படி ஓய்வுநாள் எப்போது முடியும் நாம் எப்போது வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்று காத்திருக்க கூடாது என்று சொல்லி கண்டிக்கிறார். 
 
இந்நிலையில் ஓய்வுநாளிலேயே வியாபாரம் செய்யலாமா என்ற கேழ்வி எழ வாய்ப்பே இல்லை. 

 

ஆமோஸ் 8:5. ...... தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,6 நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள். 
 
7. அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும்மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
 
8. இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Thanks

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard