ஆண்டவரால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டு இந்த தளத்தில் எழுதப்பட்டுள்ள மேலான காரியங்களை அறியின்படிக்கு தங்கள் இருதயத்தை திறந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக
இங்கு எழுதப்படட காரியங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட இரண்டு சகோதரர்கள் ஏற்க்கெனவே என்னோடு இருக்கிறார்கள் நாங்கள் வாரம் ஒருமுறை கூடி ஜெபித்து ஆண்டவரை பற்றி தியானித்து வருகிறோம்.
அடுத்து நீண்ட நாள் கழித்து இந்த காரியங்களை முழு மனதோடு விசுவாசித்த தங்களுக்கு ஆண்டவர் ஏற்ற பலனை தருவாராக.
தங்களுக்கு என்னுடைய ஆலோசனை என்னவெனில்
நீங்கள் ஆண்டவராகிய இயேசுவோடு கூட "கர்த்தர்" என்ற நாமத்தில் இருக்கும் "யெகோவா தேவனை" முழு உள்ளத்தோடு அதிகம் தேடுங்கள் உங்களுக்கு "கர்த்தரின் ஆவியின் அபிஷேகம்" என்ற விசேஷித்த அபிஷேகம் கிடைக்கும் அது மிகவும் வல்லமையாக இருக்கும் கண்கள் இருதயம் திறக்கப்படலாம் இன்னும் மேலான உண்மைகளை வேதத்தில் அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம்.
பிசாசின் தந்திரத்தால் இந்த காரியங்கள் அநேகருக்கு மறைக்கப்பட்டுள்ளது.
மாற்கு 12:30உன்தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
ஆண்டவராகியா இயேசுவுக்கு கீழ்ப்படிய நினைத்தால் மேலே அவர் சொன்னதுபோல் முழு இருதயத்தோடு கர்த்தரை தேடுங்கள்.
மோஸ் 5:6கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்;
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை படித்து பார்த்தால் தேவன் என்னை எப்படியெல்லாம் நடத்தியுள்ளார் என்ற உண்மையை அறிய முடியும்.
வேதத்தை படித்தோ அல்லது யார் சொல்லியும் கேட்டொ நான் அறிந்தது அல்ல!
இயற்க்கைக்கு அப்பார்பப்ட்தை என் கண்களே கண்டது. என் காதுகள் கேட்ட்து.
என் இருதயம் உணர்ந்தது!
சுமார் 6 நாடகள் அவர் என்னோடு பேசினார் என்னை நடத்தினார் உணவு உறக்கம் இன்றி அவர் காட்டிய திக்கெல்லாம் சென்று அவர் சொன்னதை நிறைவேற்றினேன்.
நான் அறிந்ததை வசன ஆதாரத்தோடு பதிவிடடாலும் பலர் எதிர்ப்பினிமித்ததம் இன்னும் அநேக உண்மைகளை சொல்ல முடியாமல் விட்டுவிடடேன்.
திறந்த மனத்து உண்மையை அறியவேண்டும் என்ற நோக்கத்தோடு தேடுபவர்களுக்கு இந்த தளம் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லும்.
தேவன் யாரை தேர்ந்தெடுத்தாரோ அவர்கள் இருதயம் நிச்சயம் திறக்கப்படும் அவர்கள் நான் சொல்லும் உண்மையை அறிந்துகொள்வார்கள்
மற்றபடி
"நான் அனைத்தையும் சரியாக அறிந்துகொண்டுள்ளேன் எனக்கு யார் சொல்வதும் தேவையில்லை" "நான் பாஸ்ட்டர்" "நான் 40 வருட விசுவாசி எனக்கு தெரியாதது இல்லை" எனது போன்ற எண்ணம் உள்ளவர்கள் நான் சொல்வதை புரிய முடியாது
அதற்ககன் நானும் கவலைப்படவில்லை நீங்களும் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இதோ ஒரு நாள் வரும் அப்போது அனைவருக்கும் நான் எழுதியதில் உள்ள உண்மை புரியவரும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கர்த்தருக்கே மகிமை!
நான் தற்செயலாய் கூகுளில் '' ஜீவ விருட்சம் '' பற்றி தேடிய போது சுந்தர் ஐயா அவர்களின் karthar.blogspot.com ஐ காண நேர்ந்தது. அதில் அவர்களின் ஆச்சர்யமான சாட்சியை படித்து அதன் மூலம் இந்த தளத்திற்கு வந்தேன்.
கர்த்தருக்கே மகிமை! நான் தற்செயலாய் கூகுளில் '' ஜீவ விருட்சம் '' பற்றி தேடிய போது சுந்தர் ஐயா அவர்களின் karthar.blogspot.com ஐ காண நேர்ந்தது. அதில் அவர்களின் ஆச்சர்யமான சாட்சியை படித்து அதன் மூலம் இந்த தளத்திற்கு வந்தேன்.
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ. Augustin அவர்களே
இந்த தளத்தில் எழுதப்பட்டுள்ளது அநேகம் உண்மையான சம்பவங்கள் அடிப்படையில் எழுதியது.
சிலவன்றை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கலாம் ஆனால் உண்மை இதுதான்.
நான் என் கண்களாலே கண்டதை என் காதுகளாலே கேட்டதை
என் இருதயத்தாலே உணர்ந்த இயற்க்கைக்கு அப்பாற்படத்தை அதன் அடிப்படையில் தேவன் எனக்கு சொன்னதை இங்கு எழுதி வைத்துள்ளேன்.
திறந்த மனதோடு படியுங்கள்
படிப்பதை புரிந்துகொள்ளும்படி கர்த்தர் தாமே தங்களுக்கு கிருபை பாராட்டுவாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//சிலவன்றை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கலாம் ஆனால் உண்மை இதுதான்//
ஆம். ஆவிக்குறிய அனுபவங்களை புரிந்து கொள்ளுவது கடினம் தான். எனக்கும் அதே போன்ற ஆவிக்குறிய அனுபவங்கள் சில வருடங்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. கர்த்தர் ஒவ்வொருவரையும் அவர்களது சூழ்நிலைகளுக்கு தக்க அதிசயமாய் வழி நடத்துகிறார். ☺️ பொதுவாக ஆவிக்குறிய அனுபவங்களை மற்றவர்கள் ஏதாவது தவறாக புரிந்து கொள்வார்கள் என்ற பயத்தில் வெளியே சொல்வதில்லை. உங்களது சாட்சியை படித்த போது என் வாழ்க்கையில் கர்த்தர் செய்த காரியங்கள் நினைவுக்கு வந்தது. கர்த்தருக்கே மகிமை! ☺️

நன்றி சகோதரர் அவர்களே,
தங்கள் அனுபவங்களை தனியாக ஓரிடத்தில் பகிர்ந்துகொண்டால் எங்களுக்கும் இந்த தளத்துக்கு வருவோருக்கும் ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன்.
தேவன் அனுமதித்தால் அவர் வெளிப்படுத்தியதை எழுதுவதற்கு தயங்க வேண்டாம்.