நியாய தீர்ப்பின் நாளிலே நாம் உயிரோடு எழுப்பப்படும் போது எமது உறவுகள் இன்னார் என்று அறிய முடியுமா ?
வேதத்துடன் விளக்கம் தரவும்
நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும், தேவன் அனுமதித்தால்.
உலகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியையே வீடியோ படமாக எடுத்து 50-60 வருடங்களாக நாம் பார்த்துவரும்போது, தேவன் நமது வாழ்க்கை முழுவதையும் ஒரு படமாக நம்முன் காண்பிக்க வல்லவராக இருக்கிறார்.
நாம் விரும்பினால் தேவ அனுமதியுடன் நாம் உறவுகளை நிச்சயம் அறிந்துகொள்ள முடியும்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு இவ்வாறு சொல்கிறார்:
மத்தேயு 22:30உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்
பரலோகத்தில் உறவுமுறை இருக்காது. காரணம் நாம் உறவு என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் நடக்கும் நாடகத்துக்கு நம்மோடு சேர்ந்து நடிக்க வந்தவர்களே. நாடகம் முடிந்தவுடன் வேஷம் கலைப்பதுபோல் உலகம் முடியும்போது எல்லா வேஷமும் முடிவுக்கு வந்துவிடும் பிறகு அவர்கள் யாரோ நாம் யாரோ என்று ஆகிவிடும்.
மேலும் கீழேயுள்ள சம்பவம் ஒரு உவமைபோல இருந்தாலும்
மரித்தவன் ஆபிரகாமை அடையாளம் கண்டதாக சொல்கிறது
லுக் 16: 22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
எனவே நாம் விரும்பினால் தேவ அனுமதியுடன் நம் உறவுகளை நிச்சயம் அறிந்துகொள்ள முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)