என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது . நான் டிப்ளோமா முடித்து பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு தீர்மானித்திருந்தேன் . எந்த கல்லூரியில் சேருவது என்று ஒரே குழப்பமாக இருந்தது. வீட்டில் கஷ்டமான சூழ்நிலையும் கூட. தூத்துக்குடி அருகாமையில் உள்ள கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு , தூத்துக்குடியில் உள்ள கல்லூரியை பார்ப்பதற்காக நானும் என்னுடைய தகப்பனாரும் தூத்துக்குடி சென்றோம் . ரயிலில் செல்லும்போது ஒரு தினத்தந்தி நாளிதழ் படித்துகொண்டிருந்தேன் . அதில் ஆன்மீக பகுதி ஒன்று இருந்தது அதில் ஒரு பகவத் கீதை வாக்கியமும் , ஒரு குரான் வசனமும் , ஒரு பைபிள் வசனமும் இருந்தது. அப்போது அந்த பைபிள் வசனம் என்னை ஈர்த்தது. " நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய் ; நானும் உன்னை சிநேகித்தேன். ஏசாயா 43.4 '' - இது தான் அந்த வசனம்! . இந்த வசனம் எதற்காக அந்த நாளிதழில் வைக்கப்பட்டது என்பது அந்த கல்லூரிக்கு சென்ற பின்பு தான் தெரிந்தது. நாங்கள் செல்ல வேண்டிய கல்லூரி தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் உள்ளது. அதனால் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி டிக்கெட் பெற்றுக்கொண்டு போய்க்கொண்டிருந்தோம். திடீரென கண்டக்டர் இன்ஜினியரிங் காலேஜ் லாம் இறங்குங்க என்றார். நாங்கள் இறங்கி பார்த்தால் அது வேறு ஒரு இன்ஜினியரிங் காலேஜ் . நாங்கள் செல்ல வேண்டிய கல்லூரி இன்னும் 13 கி.மீ. செல்ல வேண்டும். சரி, வந்தது தான் வந்துட்டோம் இந்த கல்லூரியையும் விசாரிச்சிட்டு போவோம் ன்னு உள்ளே போனோம் . முகப்பிலேயே ஒரு பெரிய இயேசு நாதர் சிலை , அட்மிஷன் ஹாலில் சென்று ஒரு பேராசிரியரிடம் கல்லூரி கட்டணம் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும் போது, நான் தற்செயலாய் சற்று மேலே பார்த்தேன் ஒரே ஆச்சர்யம்! நான் தினத்தந்தி பேப்பரில் பார்த்த அதே வசனம் அங்கே தொங்கிக்கொண்டிருந்தது. அடுத்த ஆச்சர்யம், எனக்கு கல்லூரி கட்டணம் வருடத்திற்க்கு வெறும் 20,000 மட்டும் தான் . எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு , அங்கிருந்து புறப்பட்டோம் .
நாங்கள் செல்ல வேண்டிய அந்த கல்லூரிக்கும் சென்று விசாரித்தோம் . அங்கே கல்லூரி கட்டணம் வருடத்திற்கு ரூபாய் 90,000 + பேருந்து கட்டணம் ரூபாய் 20,000 + இதர கட்டணம் ரூபாய் 15,000 , மொத்தம் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வருடத்திற்கு ! எங்களுக்கு தூக்கி வாரி போட்டது.
அப்போது தான் எனக்கு புரிந்தது , கர்த்தர் தற்செயலாய் அந்த கல்லூரிக்கு கொண்டு போகவில்லை தனது வார்த்தையை உறுதிபடுத்தி அவரது திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று !
///அப்போது தான் எனக்கு புரிந்தது , கர்த்தர் தற்செயலாய் அந்த கல்லூரிக்கு கொண்டு போகவில்லை தனது வார்த்தையை உறுதிபடுத்தி அவரது திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று !
கர்த்தர் அதிசயமாய் வழி நடத்துகிற தேவன்!///
அருமையான வழி நடத்துதல்! பகிர்ந்தமைக்கு நன்றி!
ஏசாயா 55:9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)