இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை சாத்தானால் அறிய முடியுமா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை சாத்தானால் அறிய முடியுமா?
Permalink  
 


நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை  சாத்தானால் அறிய முடியுமா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தருக



-- Edited by Debora on Thursday 10th of October 2019 06:35:37 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை  சாத்தானால் அறிய முடியுமா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தருக



-- Edited by Debora on Thursday 10th of October 2019 06:35:37 PM


 மனுஷன் எப்பொழுது சாத்தானின் சொல்லை கேட்டு தேவன் புசிக்கதே என்று சொன்ன கனியை புசித்தானோ அன்றே மனுஷனின் எண்ணம் மற்றும் இதயத்துக்குள் சாத்தான் புகுந்துவிடடான். பிறகு நாம் நினைப்பதை அவன் அறியாது இருப்பது எப்படி?

 
இது நடக்கும் வரை அவனுக்கு தெரியாது! எனவே அவன் வெளியில் இருந்து "தேவன் இப்படி சொன்னாரோ? அப்படி சொன்னாரோ? என்று கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தான்  
 
ஆதியாகமம் 8:21  மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது;  
 
பொல்லாத எண்ணங்கள் சாத்தனுடையது.  தேவனால் உண்டான மனுஷன் சுபாவப்படி பொல்லாதவன் அல்ல. மனுஷ மனசுக்குள் உண்டாகும் ஒவ்வொரு பொல்லாத தீய எண்ணமும் சாத்தானால் உண்டானதே சாத்தான்  சிந்தனையைத்தான் மனுஷன் செய்கிறான் செயல்படுத்துகிறான்.
 
மனுஷ இருதயத்தில் தோன்றும் ஒவ்வொரு நினைவுகளையும் எப்படி தேவனால் அறிய முடியுமோ அதேபோல் சாத்தனாலும் அறிய முடியும்.  காரணம் சாத்தானின் சொல்லை கேட்டு கனியை புசித்த மனுஷன் சாத்தானின் அடிமை ஆகிவிட்டான்.
 
ஆகினும் ஒரு மனுஷன்  தேவனை பற்றிய நினைவில் அவர் வார்த்தைகளில் கவனமாக இருக்கும்போது தேவ தூதர்கள் நம்மோடு இருப்பார்கள் தேவ உதவி நமக்கு இருக்கும் 
 
தாவீதை போல உப்பரிகையில் நின்று பிற ஸ்திரீயை நோக்கும் எண்ணம் வந்தவுடன்  சாத்தான் வந்துவிடுவான் தேவ தூதர்கள் விலகிவிடுவார்கள் இறுதியில் கொலை செய்யும் அளவுக்கு கொண்டுபோய் நிறுத்திவிடுவான். 
 
தேவனின் சிந்தனையை மட்டுமே சாத்தானால் அறிய முடியாது!
 
மற்றபடி உலகத்தில் மனுஷனாக பிறந்துவிடடால் நம் சிந்தனைகள் எல்லாமே சாத்தானின் அறிதலில்தான் இருக்கும்.
 
உதாரணமாக 
தாவீது பிறன் மனைவியை மனதில் இச்சித்த உடன் அவன் சிந்தனை சாத்தானுக்கு தெரிந்து அவளை அடைவதற்கான வழியை உண்டாக்கி கொடுத்தான் 
 
யுதாஸுக்கோ பணத்தின் மீது இருதயத்தில் ஆசை இருந்தது அதை அறிந்த சாத்தான் இயேசுவை பணத்துக்காக காட்டிக்கொடுக்கும் வழியை உண்டாக்கினான்.
 
யோபுவின் இருந்தயத்தில் எல்லா சம்பத்தும் போய்விடுமோ என்ற பயம் இருந்தது அதை அறிந்த சாத்தான் அவனை அனைத்தையும்  
இழக்க வைத்து சோதித்தான் 
 
சுருங்க சொல்லின் 
 
ஒருவன் தேவன் சிந்தனையிலேயே இருந்தால் அது சாத்தானுக்கு தெரியும் ஆனால் சாத்தானால் அங்கு எந்த கிரியையும் செய்யமுடியாது.
 
 
ஆனால் பொல்லாத சிந்தனையில் இருந்தால் அது சாத்தானுக்கு சாதகமாக இருப்பதால் அவனால் உள்ளே புகுந்து கிரியை செய்ய முடியும் தேவன் வெளியில் நின்றுதான் பிறர் மூலம் தடுக்க  நினைப்பாரேயன்றி வேறெதுவும் செய்ய முடியாது.  
 


-- Edited by SUNDAR on Saturday 12th of October 2019 12:09:17 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

சரி அண்ணா

தேவன் ஏன் வெளியில் நின்று மாத்திரமா தடுக்க நினைப்பார்? தேவனால் எல்லாம் கூடுமே..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

எனக்கு இப்படி கேள்வி தோன்ற காரணம் எமது வாய்களில் அவிசுவாசமான வார்த்தைகள் வர கூடாது என்று அநேகர் சொல்ல கேட்டிருக்கிறேன்.. ஏனெனின் அப்படி அவிசுவாசமாக பேசுனால் அதே நடக்கும் என்று.. அதே போல் மனதில் நினைத்தாலும் அப்படியா என்று?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை சாத்தானால் அறிய முடியுமா?
Permalink  
 


Debora wrote:

சரி அண்ணா

தேவன் ஏன் வெளியில் நின்று மாத்திரமா தடுக்க நினைப்பார்? தேவனால் எல்லாம் கூடுமே..


 

மனுஷன் பொல்லாத சிந்தனையில் இருந்தால் அது சாத்தானுக்கு சாதகமாக இருப்பதால் தேவனால்  உள்ளே புகுந்து கிரியை செய்ய விரும்புவது இல்லை.  (முடியாது என்று நான் குறிப்பிட காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பதால்)  
 
ஆதாம் ஏவாள் பிசாசால் தூண்டப்பட்டு பாவம் செய்தபோது தேவன் தடுக்கவில்லை 
 
தாவீது பாவம் செய்ய திடடம் தீட்டியபோது தேவன் தடுக்கைவில்லை 
 
பொதுவாக தேவன் மனுஷனின் ஆவியோடு போராடுவது இல்லை!  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

எனக்கு இப்படி கேள்வி தோன்ற காரணம் எமது வாய்களில் அவிசுவாசமான வார்த்தைகள் வர கூடாது என்று அநேகர் சொல்ல கேட்டிருக்கிறேன்.. ஏனெனின் அப்படி அவிசுவாசமாக பேசுனால் அதே நடக்கும் என்று.. அதே போல் மனதில் நினைத்தாலும் அப்படியா என்று?


 

மனதில் உண்டாகும் NEGATIVE எண்ணங்கள் அல்லது பயங்கள் என்பது சத்துருவுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கும் என்பது உண்மைதான்.
 
கர்த்தருக்குள் இருக்கும் நாம் ஏன் அப்படி எதிர்மறையான எண்ணங்களை நினைக்க வேண்டும்?
 
தேவன் நம் ஒவ்வொரு அசைவையும் அறிந்திருக்கிறார் அவர் நிச்சயம் நம்மை பாதுகாக்கிறார் என்று உறுதியான நம்பிக்கை ஏன் வரவில்லை.
 
இப்படி பாருங்கள். ஒருவேளை சத்துருவால் தேவ பிள்ளைகளை கொன்றுவிட முடியும் என்றால் இதற்குள் எல்லா பரிசுத்தவான்களையும் கொன்று போட்டிருப்பான் ஆனால் அவனால் தேவ பிள்ளைகளை ஒன்றுமே செய்துவிட முடியாது. கர்த்தர் நம்மை கண்மணி போல பாதுகாக்கிறார் எனவே இப்படி ஆகிவிடுமோ அப்படி ஆகிவிடுமோ என்ற பயமே வேணாம்.
 
அவர் நம்மை அவர் உள்ளங்கையில் வரைந்துள்ள தேவன் அல்லவா?


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை சாத்தானால் அறிய முடியுமா?
Permalink  
 


கண்டிப்பாக தேவன் தன இம்மட்டும் காத்தார் இனிமேலும் காப்பார்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard