இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு மரணத்தை குறித்தா துக்கப்பட்டார்? திகில் அடைந்தார் ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
இயேசு மரணத்தை குறித்தா துக்கப்பட்டார்? திகில் அடைந்தார் ?
Permalink  
 


இயேசு  மரணத்துக்கேதுவான துக்கம் கொண்டிருந்தார் என்று வேதம் சொல்கிறது அப்படியாயின் இயேசு மரணத்தை குறித்து துக்கப்பட்டாரா? 

 

மேலும் அவர் வியாகுலப்படவும் திகிலடையவும் தொடங்கினார் என்று மாற்கு 14 : 33 

 

பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

 

அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,

 

அப்படியாயின் இயேசு மரணத்தின் நிமித்தம் திகிலடைந்தார் என்பது ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது இவ்வார்த்தையில் எதோ சத்தியம் மறைந்திருக்கிறது என்று தோணுகிறது .. எனது கணிப்பு சரியா? 

 

தெரிந்தவர்கள் விளக்கவும் 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: இயேசு மரணத்தை குறித்தா துக்கப்பட்டார்? திகில் அடைந்தார் ?
Permalink  
 


Debora wrote:

இயேசு  மரணத்துக்கேதுவான துக்கம் கொண்டிருந்தார் என்று வேதம் சொல்கிறது அப்படியாயின் இயேசு மரணத்தை குறித்து துக்கப்பட்டாரா? 

 

மேலும் அவர் வியாகுலப்படவும் திகிலடையவும் தொடங்கினார் என்று மாற்கு 14 : 33 

 

பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

 

அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,

 

அப்படியாயின் இயேசு மரணத்தின் நிமித்தம் திகிலடைந்தார் என்பது ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது இவ்வார்த்தையில் எதோ சத்தியம் மறைந்திருக்கிறது என்று தோணுகிறது .. எனது கணிப்பு சரியா? 

 

தெரிந்தவர்கள் விளக்கவும் 

 


ஆம் சிஸ்ட்டர் அதை அவர் தன வாயாலேயே இவ்வாறு  சொல்கிறாரே!

 
மத்தேயு 26:38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது;  
 
காரணம் அவர் நம்மைப்போல மாம்சத்தில் இருந்தார். படவேண்டிய பாடு மிக கொடியதாகவும் வேதனை நிறைந்ததாகவும்  இருந்ததால் அவர் துக்கப்பட்டு வியாகுலப்பட்டு அதை நீக்கும்படி பிதாவிடம் வேண்டுகிறார். ஆகினும் பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறார் அதுவே அவர் வெற்றி சிறக்க ஏதுவாயிற்று.
 

மத்தேயு 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். .   
 
 
இந்த சம்பவம் நமக்கு சொல்லும் அருமையான பாடம்:
 

நம்முடைய எந்த ஒரு ஜெபமும் / விண்ணப்பமும்  பிதாவின் சித்தத்துக்கு விட்டுக்கொடுப்பட வேண்டும் என்பதே!   

 

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
இயேசு மரணத்தை குறித்தா துக்கப்பட்டார்? திகில் அடைந்தார் ?
Permalink  
 


Ok Anna .. Thnx

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: இயேசு மரணத்தை குறித்தா துக்கப்பட்டார்? திகில் அடைந்தார் ?
Permalink  
 


எப்படிபடட மரணத்தை அனுபவிக்க / சகிக்க வேண்டிய நிலை ஆண்டவராகிய இயேசு மீது சுமத்தப்பட்ட்து என்று சற்று பார்த்தால் அவர் அதை குறித்து திகில் அடைந்தார் என்ற வார்த்தையின் உண்மை புரியும்! 

ஆண்டவராகிய இயேசு  33 வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் சிலுவையில் அறையப்படுதல் “மோசமான” மரணமாகும். மிக மோசமான குற்றவாளிகள் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று தீர்ப்புச் செய்யப்பட்டனர். அது சிலுவை மரணத்தைத் தண்டனையாகப்பெற்று, மற்ற குற்றவாளிகளைப் பார்க்கிலும், இயேசுவுக்கு இன்னும் மிகவும் பயங்கரமாக்கப்பட்டது.

இயேசுவைச் சிலுவையில் ஆணிகளால் அறைந்து அந்த தண்டனையை நிறைவேற்றினர்.

ஒவ்வொரு ஆணியும் 6 முதல் 8 அங்குலம் வரை இருந்தது. ஆணிகள் பொதுவாகச் சித்தரிப்பது போன்று, அவரது உள்ளங்கைகளில் அல்ல, ஆனால் அவரது மணிக்கட்டுகளில் ஆணியடிக்கப்பட்டது.

மணிக்கட்டில் இருந்து தோள்பட்டை வரை ஒரு இரத்தநாளம் இருக்கும். அந்த இரத்த நாளத்தைக் கிழிக்க ஆணியை எவ்விடத்தில் அடித்து அறைய வேண்டும் என்பதை ரோமப்போர்ச்சேவகர்கள் அறிந்திருந்தனர். மிகச்சரியான இடத்தில் ஆணிகள் அறையப்பட்டபோது, அந்த இரத்தநாளம் கிழிக்கப்பட்டு முறிந்தது, அப்போது இயேசு தமது முதுகுத் தசைகளைக்கொண்டு தம்மை நிலைநிறுத்தி சுவாசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அவருடைய இரு பாதங்களும் ஒன்று சேர்த்து ஆணியால் அறையப்பட்டன. இவ்வாறு அவர், தமது இருபாதங்களையும் ஒன்றாக்கி அறையப்பட்ட ஒற்றை ஆணியில் தம்மை நிலைநிறுத்தும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டார். மிகுந்த வேதனையினால் அவர் தமது கால்களைக்கொண்டு தம்மை நிலைநிறுத்த அவரால் முடியவில்லை. எனவே அவர் தமது முதுகை வளைத்தும், அதன்பின்பு கால்கள்மீது தமது பாரத்தை வைத்தும் சுவாசிக்கத் தொடர வேண்டியதாயிற்று.

அந்தப் போராட்டத்தை, வேதனையை, உபத்திரவத்தை, தைரியத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! இயேசு இந்த உண்மை நிலையை 3 மணிநேரத்திற்கும் மேலாகச் சகித்தார். ஆம், 3 மணி நேரத்திற்கு மேலாக! நீங்கள் இந்த வகையான துன்பத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

அவர் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு, இயேசு இரத்தம் சிந்துதலை நிறுத்தினார். அவர் உடலின் காயங்களில் இருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தது. பொதுவான படங்களில் இருந்து அவருடைய கைகள் மற்றும் கால்கள் மற்றும் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்ட காயங்கள் ஆகியவற்றை நாம் காண்கிறோம்… ஆனால் அவருடைய காயங்கள் அவரது உடலில் உண்மையில் ஏற்படுத்தப்பட்டவை என்பதை நாம் உணருகிறோமா?

மணிக்கட்டுகள் மற்றும் ஒன்றின்மீது மற்றொன்று வைக்கப்பட்ட பாதங்கள் வழியாக, ஒரு சுத்தியல், பெரிய ஆணிகளைச் செலுத்திற்று, பின்பு ஒரு ரோமப்போர்ச்சேவகன் அவரது விலாவில் ஈட்டியால் குத்தினான். ஆனால் ஆணிகளும் ஈட்டியும் அவரது உடலைத் துளைப்பதற்கு முன்பாகவே அவர் சவுக்கால் அடிக்கப்பட்டிருந்தார். அந்த சவுக்கடி அவரது உடலின் சதையைக் கிழித்திருந்தது. அவரது முகம் சிதைக்கப்பட்டும், அவரது தாடி அவரது முகத்திலிருந்து பிய்க்கப்பட்டும் இருந்தது. முட்களால் ஆன கிரீடம் வைத்து இறுத்தப்பட்டதால் அவர் தலையில் கபால எலும்புகள் வரை ஆழமாக வெட்டப்பட்ட காயங்கள் உண்டாயின.

இந்த சித்திரவதையில் பெரும்பான்மையான மனிதர்கள் உயிர்பிழைப்பது கடினமாயிருந்தது. அவரிடத்தில் சிந்துவதற்கு இரத்தம் இனியும் இல்லை, எனவே அவரது காயங்களில் இருந்து தண்ணீர் வெளிவந்தது.

வளர்ந்த மனித உடலில் சுமார் 6.5 லிட்டர் இரத்தம் இருக்கும். இயேசு தமது 6.5 லிட்டர் இரத்தம் முழுவதையும் சிந்தினார். அவரது உடலில் மூன்று ஆணிகள் அடிக்கப்பட்டன; ஒரு முள்முடி அவரது தலையில் இறுத்தப்பட்டது. ரோமப்போர்ச்சேவகன் ஒருவன், இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தினான்.

இவைமாத்திரமின்றி, அவர் சுமார் இரண்டு கிலோமீட்டர்கள் தூரம் வரையில் தமது சிலுவையைச் சுமந்து சென்றார். அப்போது கூட்டம் அவரது முகத்தில் துப்பி, அவர் மீது கற்களை எறிந்தது.

சிலுவையின் குறுக்குச் சட்டத்தை மட்டுமே அவர் சுமந்து சென்றார். அது ஏறக்குறைய 70 கிலோ எடை கொண்டிருந்தது. கல்வாரி சென்றதும் அவர் கைகள் அந்தச் சட்டத்தில் வைத்து, ஆணிகளால் துளைக்கப்பட்டு சட்டத்துடன் பிணைக்கப்பட்டபின்பு
ஏற்கனவே அங்கு நட்டுவைக்கப்பட்டிருந்த மரச்சட்டம் ஒன்றில் இந்தக் குறுக்குச் சட்டம் பிணைக்கப்பட்டு, இவ்வாறு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இயேசு இந்த உபாதையை அனுபவித்து, உலக மக்கள் யாவரும் பரலோகம் செல்ல வழியைத் திறந்து வைத்தார்! அதனால் நீங்களும் நானும் மற்றும் அவரை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, உண்மையான கிறிஸ்தவ வாழ்வை வாழும் ஒவ்வொருவரும்
தேவனுடைய பிள்ளைகளாக வழி அவரால் திறக்கப்பட்டது.

நமது பாவங்கள் யாவும் கழுவப்பட சிலுவை ஒரு வழியைத் திறந்து வைத்தது. அதைத் தயவுசெய்து புறக்கணிக்காதீர்கள்.

இயேசு நமக்காக மரித்தார். அவர் உங்களுக்காக மரித்தார். 

நம் பாவங்களுக்காக அவர் மரித்தார்!  நம்மை மரணத்தில் இருந்து மீட்க்க அவர் மரித்தார்!  

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
இயேசு மரணத்தை குறித்தா துக்கப்பட்டார்? திகில் அடைந்தார் ?
Permalink  
 


இயேசு வின் பாடுகள் மெய் சிலிர்க்க வைக்கிறது..

எமக்காக அத்தனை பாடுகளையும் சகித்த இயேசு சுவாமிக்கு நன்றி பலிகள் செலுத்துகிறேன்..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard