சிறகும் செதிளும் இல்லாத பிராணிகளுக்கு உதாரணம் சொல்லுங்கள் அண்ணா ஜலத்தில் இருக்கிறவைகளில் சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்க கூடாதா? இல்லாவிட்டால் பொதுவாகவே அப்படியா? சிறகும் செதிளும் இல்லாதது என்றால் எது என்று எனக்கு தெரியாது அதன் உதாரண கேட்டேன்

நண்டு - சிறகு செதில் கிடையாது
கெளுத்தி மீன் - செதில் கிடையாது
ஆமை கரி - சிறகு செதில் கிடையாது
எறா - செதில் கிடையாது
விலாங்கு மீன் - செதில் கிடையாது
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இதுவரை இறால் நண்டு போன்றவற்றை நான் சாப்பிட்டுள்ளேன் .
இதுவரை அவைகளை சாப்பிட கூடாதென்று எனக்கு தெரியாது.
பழைய ஏட்பாட்டில் கூறப்பட்ட யாவற்றையும் நாம் கடைபிடிக்க வேண்டும் என்பது தான் சரியானதா?
சிஸ்ட்டர் நாம் பதிவிடுவது "மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல" என்ற திரியில்
மரணத்தை ஜெயிக்கும் வழி வேதாகமத்தில் உள்ளது என்று விளக்கி, "சாகவே சாவாய்" என்ற சாபத்தில் இருந்து விடுபட்டு எப்படி பிழைக்கவே பிழைக்க முடியும் என்பதையே இங்கு விளக்குகிறேன்.
அதற்க்கான வழிமுறைகளில் சொல்லப்பட்ட்துதான்
என் கட்டளைகளின் படி நடந்து
என் நியாயங்களை கை கொண்டு
என்பது.
வழியை சொல்வது எனது கடமை. இதை கைக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆண்டவராகிய இயேசுவின் நமக்காக மரித்ததின் மூலம் நமது ஆவியானது இந்த பாவ பிரமானத்தில் இருந்து விடுதலை அடைகிறது ஆனால் மாம்சமோ என்றென்றும் நியாயப்பிரமானத்துக்கு உட்பட்டது.
எனவே
மாசத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை நான் ஆவியில் பிழைத்து ஆண்டவரை சேர்ந்தால் போதும் என்று எண்ணுபவர்கள் ஆவியில் நடத்தப்பட்டு நியாயப்பிரமானத்துக்கு அடிமையானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் சரீர உபத்திரவங்களை தாங்கிக்கொள்ள வேண்டும்.
இல்லை நான் சரீரத்திலும் விடுதலை வேண்டும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள் தேவன் சொன்ன நியாயப்பிரமாணத்தையும்
முடிந்தவரை கைக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவையானதை நீங்கள் தெரிவு செய்துகொள்ளுங்கள்.
இதுதான் என்னுடைய பதில். இதை பல இடங்களில் நான் எழுதிவிடடேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)