இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நோய்கள் / மற்றும் வேதனைகள் வரும் பொது சோர்வு ஏற்படுகிறது


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
நோய்கள் / மற்றும் வேதனைகள் வரும் பொது சோர்வு ஏற்படுகிறது
Permalink  
 


நோய்கள் / மற்றும் வேதனைகள் வரும் பொது சோர்வு ஏற்படுகிறது 

 

என்னை பொறுத்தமட்டில் நான் அநேக நாட்களாக நோயில்லா வாழ்க்கைக்காக ஜெபிப்பது உண்டு அதட்கான வழிமுறைகளையும்,வேதத்தில் இருந்து கடைபிடிப்பதுண்டு.,  

 

அநேக வியாதிகள் சுகமாகியுள்ளது ஆனால் ஒரு சில வியாதிகள் இன்னும் சரீரத்தில் இருந்துகொண்டே தான் இருக்கிறது.. அதட்காக நான் தொடந்து ஜெபித்தும் பலன் கிடைக்காததால் நான் சோர்ந்து போகிறேன் தேவன் என் ஜெபத்தை கேட்கவில்லையா என்று உடைந்து போகிறேன் இப்படியாக நான் நினைக்கும் போதெல்லாம் தேவன் எதாவது வார்த்தை மூலமோ செய்தி மூலமோ சொல்கிறார் "பயப்படாதே எனது நேரம் இன்னும் வரவில்லை நான் உனக்கு நன்மை செய்வேன்" என்று ஆனால் அவர் அப்படியாக பெலப்படுத்தி என்னோடு பேசினாலும் எனக்கு சோர்வு தொடர்கிறது.. தேவன்  அப்படி சொல்லவில்லை நானே தான் அவர் சொல்வதாக நினைக்கிறேன் என் வியாதிகள் சுகமாகுமா? இப்படி சந்தேகப்படுகிறேன் இதன் நிமித்தம் மன அழுத்தத்திட்கும் ஆளாகுறேன்... சில நேரம் பயப்படுகிறேன் வியாதிகளை குறித்து 

 

அண்ணா நான் என்னையும் பல வழிகளில் நீங்கள் சொன்னது போல ஆராய்ந்து திருத்திக்கொண்டிருக்கிறேன் முடிந்தளவு ஒய்வு நாளையும் அனுசரிக்கிறேன்.. 

 

சில நேரங்களில் தவறிவிட்டால் மன்னிப்பு கேட்டு தேவன் பக்கம் வந்துவிடுகிறேன் ஏனென்றால் எனக்கு தெரியும் தேவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது நாட்களையும் கழிக்க முடியாது என்று.. 

 

அது தவிர சில நேரங்களில் ஆண்டவரே நீர் சுகமாக்கினாலும் சுகமாக்காவிட்டாலும் நீரே என் தேவன் உம்மை விட்டு போக மாட்டேன் என்றும் தேவனிடம் சொல்லி இருக்கிறேன்.. 

 

ஆனால் சில நேரங்களில் மனமுடைந்து போகிறேன்.. நான் என்ன செய்வது ஆலோசனை சொல்லுங்கள் ? தேவனிடம் என்னை குறித்து விசாரித்து தேவன் வெளிப்படுத்துவதை கூறுங்கள்..



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: நோய்கள் / மற்றும் வேதனைகள் வரும் பொது சோர்வு ஏற்படுகிறது
Permalink  
 


உண்மைதான் சிஸ்ட்டர்  நோய் வந்தால் மிகுந்த சோர்வும் வெறுப்பும் வருவது  எல்லோர்க்கும் சகஜம்தான்.
 
ஆகினும் நோய் வருவதற்கான ஆவிக்குரிய காரியம் எதாவது மீறுதலே. அதனை கண்டறிந்து கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடி விடுதலை பெறுவதை தவிர வேறு வழி ஏதும் இல்லை.
 
இந்த உலகில் நன்மை செய்வதற்கு ஏற்ற பலன் கிடைக்கிறதோ  இல்லையோ  மீறுதலுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க சத்துரு தயாராக இருக்கிறான். அதுவம் ஆண்டவரின் வழியில் நடக்கும் பிள்ளைகளுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே நடக்கிறது.  
 
எனவே மிகுந்த விழிப்புடன் இருப்போம். ஆண்டவரின் பெலத்தால் சந்துருவை வெல்லுவோம்.
 
 
என் மகளை பற்றிய ஒரு சிறிய சாட்சியை சொல்கிறேன்:
 
அவளுக்கு நீண்டநாளாக தலையின் பின்புறம் வலி இருந்தது. கொஞ்சம் கான்செண்ட்ரசன் பண்ணி படித்தாலே அந்த வலி வந்துவிடும் அதனால் அவள் BSC டிகிரி படிக்க ரொம்ப சிரமப்பட்டு முடியாமல் அரியர்ஸ் எல்லாம் வைத்து பின்னர் பாஸ் ஆகினாள்.  பல மருத்துவரிடம் காட்டி பார்த்தோம் மாத்திரை சாப்பிடும் நேரம் சரியாகும் ஆனால் பின்னர் வந்துவிடும்.
 
இறுதியாக ஒரே ஒரு காரியத்தை அவளிடம் சொன்னேன். நீ ஒய்வு நாள் அன்று செல்போன் பயன்படுத்துவதை கேம் விளையாடுவதை முற்றிலும் நிறுத்து என்று சொன்னேன். அவள் அதை நிறுத்திய அடுத்த வாரத்தில் இருந்து இன்று வரை சுமார் 2 வருடமாக அந்த தலைவலி போயே போய்விட்ட்து.
 
இது எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
 
ஏசாயா 58:13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,  
 
 14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
   
 
 
இப்படி கர்த்தர் சொன்ன எதோ ஒரு வசனத்தை நாம் அறியாமல் தொடர்ந்து மீறிக்கொண்டு இருப்பதாலேயே பலவிதமான தீராத நோய்கள் இருந்துகொண்டே இருக்கிறது என்பது நான் அறிந்த உண்மை.    
 

 

   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
நோய்கள் / மற்றும் வேதனைகள் வரும் பொது சோர்வு ஏற்படுகிறது
Permalink  
 


ஒய்வு நாள் கட்பனைகளை கடைப்பிடித்தும் இப்படி நடக்க காரணம் என்ன அண்ணா?

சில விடயங்கள் நான் ஏற்கனவே சொன்னது போல என்னால் முடியவில்லை எங்கள் வீட்டில் சமைப்பார்கள் நானும் கூட தீ மூட்டியிருக்கிறேன் .. இவைகளும் அதட்கு காரணமாக இருக்குமோ?

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

https://lord.activeboard.com/t62698056/topic-62698056/

read this also

 



-- Edited by t dinesh on Monday 4th of May 2020 04:24:27 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard