இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சரியான உண்மை அறியாமல் யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சரியான உண்மை அறியாமல் யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம்.
Permalink  
 


முன்பொரு காலத்தில் பத்மநாபர் என்ற பெயருடைய ஒரு செல்வந்தர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மிகவும் உயர்ந்த குணமுடையவர்கள். சுற்றுப்புறத்தில் வாழும் துறவிகளுக்கும் தவசிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கி வந்தனர். ஒருநாள், பத்மநாபரும் அவருடைய மனைவியாரும் வழக்கம் போல் உணவளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சற்று தூரத்தில் ஒரு வயதான துறவி பசியோடும் தாகத்தோடும் வருவதை பத்மநாபரின் மனைவி கண்டாள். அந்த துறவி வெகுதூரத்தில் இருந்து மிகவும் களைப்போடும் பசியோடும் வருவதை அவள் அறிந்தாள். கோடைக்காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் நீர்ப் பற்றாக்குறையால் அந்த துறவி மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார். உடனே பத்மநாபரின் மனைவி ஒரு பாத்திரத்தில் உணவையும் ஒரு கோப்பையில் பசும்பாலையும் நிரப்பி அந்த துறவியிடம் விரைந்து சென்றாள். "துறவியாரே, நீங்கள் மிகவும் களைப்பாகவும் பசியோடும் காணப்படுகிறீர்கள். உங்களுக்காக நான் உணவு கொண்டு வந்திருக்கிறேன். அதோ அங்கே ஒரு குளம் உள்ளது. அங்கு சென்று உங்கள் கைகால்களை கழுவிக் கொள்ளலாம்." என அந்த துறவியாரிடம் பத்மநாபரின் மனைவி கூறினாள்.

உணவு உண்பதற்கு முன், கண்டிப்பாக கைகால்களைக் கழுவ வேண்டியது ஆசாரமாகும். துறவியாரும் அந்த குளத்தருகே சென்று, உணவை ஒரு ஆலமரத்தடியில் வைத்து விட்டு கைகால்களைக் கழுவச் சென்றார். அப்போது அம்மரத்தின் மேல் ஒரு கழுகு ஒரு கடும்விஷம் கொண்ட நாகத்தை வேட்டையாடிக் கொண்டு வந்து அம்மரத்தில் அமர்ந்து கொத்தித் தின்று கொண்டிருந்தது. எதிர்ப்பாராத விதமாக, அந்த நாகத்தின் வாயில் இருந்து கசிந்த கடும்விஷம் அத்துறவி வைத்துச் சென்ற பாலில் விழுந்து, கலந்தது. அந்த துறவியும் கைகால்களை நன்கு கழுவிய பின், மரத்தடிக்கு வந்து அந்த ஆகாரங்களையும் பாலையும் உண்ண ஆரம்பித்தார். அவர் இல்லாத வேளையில் அங்கு நிகழ்ந்த சம்பவத்தை அவர் அறியவில்லை. உடனே, அவரின் வயிற்றில் கடுமையான எரிச்சலும் தாங்கமுடியாத வலியும் ஏற்பட்டது. அவர் உண்ட உணவில் நஞ்சு கலந்திருக்கலாம் என்பதை அவர் உடனே யூகித்தார். பத்மநாபரின் இல்லத்திற்கு விரைந்து சென்று உதவி உதவி என அலறினார்.

துறவியின் குரலைக் கேட்டு வெளியில் ஓடிவந்த பத்மநாபரின் மனைவி, துறவியின் மேனியெல்லாம் நிறம் மாறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். தாம் அளித்த உணவை உண்டப்பின்னர் தான் துறவி இந்நிலைக்கு ஆளாகினர் என்பதை துறவியிடம் இருந்து அறிந்து திடுக்கிட்டாள். உடனே விஷமுறிவு மருத்துவரை அழைத்து வந்தாள். ஆனால், மருத்துவர் சிகிச்சையைத் தொடங்கும் முன்னரே அத்துறவி மடிந்தார். இதை அறிந்த பத்மநாபர் மிகவும் மனம் நொந்துபோனார். துறவியைக் கொலை செய்த மஹா பாதகத்தை எண்ணி வருந்தினார். எந்தவொரு பாவமும் செய்யாவிடினும், அவரின் மனைவி மிகவும் மனம் உடைந்து போனாள். பாதகத்தை அவளே ஏற்றுக் கொண்டு, கணவனைப் பிரிந்து வனவாசம் சென்றாள். அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தின் பரிகாரமாக அவள் சந்நியாசத்தை எடுத்துக் கொண்டாள்.

இந்தச் சமயத்தில், யமலோகத்தில் பாவப் புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் குழம்பினான். துறவியைக் கொன்ற பாவத்தை யார் கணக்கில் எழுதுவது என வியந்தான். அதை யமதர்மனிடம் வினவினான். "பிரபுவே, பாம்பின் விஷம் கலந்த பாலை பருகி கொலையுண்ட துறவியின் பிரம்மஹத்ய பாவத்தை யார் கணக்கில் எழுதுவது? கண்டிப்பாக அந்தப் பாம்பு பாவியல்ல. கழுகின் பிடியில் சிக்கி இரையாகிக் கொண்டிருந்த அப்பாம்பின் மீது எந்தவொரு குற்றமுமில்லை. அந்தக் கழுகின் மீதும் எந்தவொரு பாதகமும் இல்லை. ஐந்தறிவு ஜீவனாகிய அது தன்னுடைய பசிக்காக இரையை வேட்டையாடித் தின்றது. பசித்தவருக்கு உணவளித்து உயர்வான புண்ணிய செயல்களை செய்த பத்மநாபரோ அவருடைய மனைவியோ கூட இந்த பாதகத்திற்குப் பொறுப்பல்ல. பிறகு யாருடைய கணக்கில் தான் இந்த மஹா பாதகத்தை எழுதுவது? தாங்களே அறிவிக்க வேண்டுகிறேன்." என சித்திரகுப்தன் எமனிடம் கேட்டான்.

சித்திரகுப்தன் கூறியது போலவே அந்த நாகமோ, கழுகோ, அல்லது பத்மநாபர் தம்பதியினரோ இந்த பிரம்மஹத்ய பாதகத்திற்குப் பொறுப்பல்ல. மாறாக, நடந்த உண்மை சம்பவத்தை அறியாமல் யாரெல்லாம் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி சாடுகிறார்களோ அவர்களுக்கே அந்த பாதகம் போய் சேரும் என எமதர்மன் விளக்கம் தந்தார். ஒருவர் தவறு செய்தார் என எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அவரை பாவி என சாடுவது, அந்த சாடுபவர்க்கே தீய கர்மவினையை ஏற்படுத்தும். அது எத்தகைய பாவத்துக்காக நாம் அவரை சாடுகிறோமோ அதை பொறுத்தே நமக்கும் அந்த தீயவினை ஏற்படும். இதையே இந்த கதையின் மூலம் புராணம் எடுத்துரைக்கின்றது. கர்மா பல விதங்களில் செயல்படுகிறது. “நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்த நிலை?” என நாம் புலம்பியிருப்போம்.

ஆனால், பாவம் என்பது செயலால் மட்டுமல்ல; மனதாலும் வார்த்தையாலும் கூட கர்மா உண்டாகின்றது. கர்மா எப்படி செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும் (குறள் எண்:186) நன்றி இந்து தளம்



-- Edited by SUNDAR on Wednesday 22nd of July 2020 10:47:33 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

அய்யா வணக்கம்
மேற்கண்ட பதிவினை படிக்க நேர்ந்தது. இந்த செய்திக்கும் கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: சரியான உண்மை அறியாமல் யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம்.
Permalink  
 


pounds84 wrote:

அய்யா வணக்கம்
மேற்கண்ட பதிவினை படிக்க நேர்ந்தது. இந்த செய்திக்கும் கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?


 I தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 

 
என்ற வசனத்தின் அடிப்படையில் இந்த பதிவில் சில அருமையான வழிகாட்டுதல்கள் அமைந்திருப்பதால் இதை பதிவிடடேன்.
 
முக்கியமாக இன்று ஆவிக்குரியவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் ஒருவரை பற்றி ஒருவரிடம் அதிகமாக கோள்மூட்டி விடுபவர்களாக இருக்கிறார்கள்.
 
தங்களுக்கு போதிக்கும் பாஸ்டர்கள் பற்றி  அவர்கள் குடும்பம் பற்றி அநேகர்  குறைகூறிக் கொண்டு திரிகிறார்கள்.
 
சக விசுவாசிகள் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி திரிகிறார்கள்    
 
எனவே சரியான உண்மையை அறியாமல் யாரையும் பற்றி குறை கூறிக்கொண்டு திரிந்தால் அதற்கும் தண்டனை உண்டு என்று 
பிரமதங்கள் சொல்லும்போது நம் வேதமும் கூட,
 
லேவியராகமம் 19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்
 
எனவே கோள்சொல்லி திரிபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்படிக்கு இந்த பதிவு இங்கு மீள்பதிவு செய்யப்பட்ட்து. 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard