அதேபோல கிருபையினால் தேவன் நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்..
ஏசாயா 60:10 அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.
ரோமர் 4:16 ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
II கொரிந்தியர் 1:12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
கலாத்தியர் 1:15 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
இவை இரண்டையும் சற்று விரிவாக விளக்க முடியுமா? இரண்டிற்கும் உள்ள தொடர்பு மற்றும் விரிவான விளக்கத்தை தரும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்..
கிருபை என்பது நம்மால் செய்யமுடியாத ஒரு காரியத்துக்கு தேவன் உதவி செய்வது
நம்மால் செய்ய முடிந்த ஒரு காரியத்தை தேவன் செய்ய சொல்வதும் அதை நாம் செய்வதும் கிரியை.
கிருபை என்பது எந்தவித விலையும் இல்லாமல் இலவசமாக கிடைப்பது
ஆனால் கிரியைக்கோ ஏற்ற பலன் நிச்சயமாக உண்டு!
நல்ல கிரியைக்கு நற்பலன்களும் தீய கிரியைக்கு தீய பலன்களும் நிச்சயம் உண்டு.
உதாரணமாக லோத்தின் சம்பவத்தை எடுத்துகொள்வோம்:
சோதோம் கோமரா படடணம் தீக்கிரையாக்க போவதை கர்த்தர் சொல்லி லோத்துவை ஓட சொல்கிறார் அவன் தாமதித்தபோது
ஆதி 19 16. அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
இதுதான் தேவனின் கிருபை.
ஆனால்
ஆதி 19:17 அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
"பின்னிட்டு பாராதே" என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை மீறி
கிரியை செய்த லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆனாள். அது அவள் கிரியைக்கு கிடைத்த பலன்