பிறவிக்குணம் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். நல்லதோ கெட்டதோ, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிறவிக்குணம் என்பது உண்டு. அது பொதுவாக தாய் தந்தையரிடம் இருந்து குரோமசோம்கள் மூலம் பிள்ளைகளுக்கு கடந்து வருகிறதாக படித்த ஞாபகம். அந்த குணத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல!
என் மனைவிக்கு பொதுவாக யாருக்கும் எதையும் எளிதில் எடுத்து கொடுக்கும் ஒரு நல்ல குணம் கிடையாது. அது பணமானாலும் சரி பொருளானாலும் சரி வேறு எந்த உணவு பதார்த்தமானாலும் சரி எதையும் யாருக்கும் கொடுப்பது கிடையாது.யாருக்கும் எந்த உதவியும் செய்யும் மனநிலை அவளுக்கு இல்லாமல் இருந்தது.அது அவளுக்கு ஒரு பிறவி குணமாகவே இருந்தது.
நான் எதையாவது கொடுக்க வேண்டும் என்றால் அவளுக்கு தெரியாமலேயேதான் கொடுக்க வேண்டும் அவர்களுக்கு தெரிந்துவிடடால் "அது நமக்கு எப்போதாவது தேவைப்படும் அதை ஏன் கொடுத்தீர்கள்" என்று திட்டிவிடுவாள்.
நான் என் அண்ணனுக்கு வீட்டில் தேவையில்லாமல் கிடந்த ஒரு ஒரு CD பிளேயரை கொடுத்ததற்கு கூட பல நாடகள் திட்டி தீர்த்தாள்.
இந்நிலையில் இந்து குடும்பத்தில் இருந்து ஆண்டவரை ஏற்றுக் கொண்ட அவள் ஊழியத்தினிமித்தம் பல வீடுகளுக்கு ஜெப கூட்டத்துக்கு செல்வது வழக்கம். அவ்வாறு எந்த வீட்டுக்கு போனாலும் அவர்கள் காபி தரமாடடார்களா ஏதாவது ஸ்னாக்ஸ் தர மாடடார்களா என்று எதிர்பாப்பது வழக்கமாம்.
இப்படி ஒருநாள் ஒரு வீட்டுக்கு ஜெபத்துக்கு போனபோது அந்த விசுவாசி வீட்டில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கூட கொடுக்க வில்லையாம். மிகுந்த வேதனையோடு நான் காபி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன் ஒரு நல்ல தண்ணீர்கூட கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் திரும்பி வீட்டுக்குள் நுழைந்தபோது
ஆவியானவர் மிகத்தெளிவாக "நீ எதை பிறரிடம் எதிர்பார்க்கிறாயோ அதை முதலில் உன் வீட்டுக்கு வருபவர்களுக்கு நீ செய்" என்று கடிந்து சொன்னாராம்.
அதை கேட்டு அப்படியே ஆடிப்போனாளாம்!
மத்தேயு 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
ஆம் அன்பானவர்களே! நம்மில் அநேகர் அப்படி இருக்கிறோம் நம் என் வீட்டுக்கு வரும் எவருக்கும் குடிக்க தண்ணீர்கூட கொடுப்பது இல்லை, ஆனால் அடுத்த வீட்டுக்கு போகும்பொதுமட்டும் அவர்கள் அதை தர மாடார்களா இதில் கொஞ்சம் எடுத்து தந்துவிட மாடடார்களா அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது நமக்கு கொஞ்சம் தர மாடடார்களா என்று எதிர்பார்க்கிறேன் அது எவ்வளவு பெரிய தவறு. முதலில் நீங்கள் கொடுத்து பழகுங்கள் பின்னர் உங்களுக்கு கொடுக்கப்படும். அதையே வசனமும் நமக்கு சொல்கிறது.
லூக்கா 6:38கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்;
தற்போது என் மனைவி முற்றிலும் மாறிவிடடாள். வீட்டுக்கு வருபவர்களுக்கு வீட்டில் என்ன இருக்கிறதோ அதை முதலில் அவர்களுக்கு கொடுத்து உபசரிப்பதோடு எந்த பொருளையும் நமக்கு வேண்டும் என்று வைத்துக்கொள்ளாமல் கொடுத்து உபசரிக்கும் நல்ல பண்பை கற்றுக்கொண்டாள்
தேவன் ஒருவரே நிரந்தரமான மாற்றத்தை நமக்குள் கொண்டுவர முடியும்!
-- Edited by SUNDAR on Wednesday 28th of April 2021 01:05:41 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)