இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏன்? ஜெபிக்க முடியவில்லை?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
ஏன்? ஜெபிக்க முடியவில்லை?
Permalink  
 


ஏன்? ஜெபிக்க முடியவில்லை?

 

கடந்த நாட்களில் ஜெபிக்கவோ வேதத்தை தியானிக்கவோ முடியவில்லை அண்ணா?

 

சோர்த்து போனவளாக உணருகிறேன்.. 

 

சிலநேரங்களில் சகஜமாக தேவனோடு உரையாடுகிறேன்.. 

 

ஆனால் அவருக்காக நேரம் எடுத்து இந்த கொஞ்ச நாட்களாக ஜெபிக்க முடியவில்லை..  அவருக்கு கொடுத்த நேரங்கள் எல்லாம் குறைந்து கொண்டு செல்கிறது.. 

 

சில நேரம் நாளையில் இருந்து தொடர்ந்து செய்வேன் என தீர்மானம் எடுத்தாலும் ஒருநாள் இரண்டு நாள் செய்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறேன்.. 

 

இதட்கு தீர்வு சொல்லுங்கள் 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அண்ணா தொடர்ந்து தளத்திட்கு வந்து பதிவுகளை இடுங்கள் .. ஒருநாளைக்கு ஒரு முறையாவது வாருங்கள்.. உங்கள் பதில்களை எதிர்பார்த்து இருக்கிறேன்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

ஏன்? ஜெபிக்க முடியவில்லை?

 கடந்த நாட்களில் ஜெபிக்கவோ வேதத்தை தியானிக்கவோ முடியவில்லை அண்ணா?

 சோர்த்து போனவளாக உணருகிறேன்.. 

 சிலநேரங்களில் சகஜமாக தேவனோடு உரையாடுகிறேன்.. 

 ஆனால் அவருக்காக நேரம் எடுத்து இந்த கொஞ்ச நாட்களாக ஜெபிக்க முடியவில்லை..  அவருக்கு கொடுத்த நேரங்கள் எல்லாம் குறைந்து கொண்டு செல்கிறது.. 

 சில நேரம் நாளையில் இருந்து தொடர்ந்து செய்வேன் என தீர்மானம் எடுத்தாலும் ஒருநாள் இரண்டு நாள் செய்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறேன்.. 

 இதட்கு தீர்வு சொல்லுங்கள் 

 


 
இது போன்றதொரு  நிலைமை நானும் பலமுறை  அறிந்திருக்கிறேன். 
 
தேவன் என்னை முழுமையாக அபிஷேகித்திருந்த தொடக்க நாடகளில் கூட,  சில நேரங்களில் திடீர் என அவரின் பிரசன்னம் முற்றிலும் ஏடுபட்டு நான் மிக சாதாரண மனுஷனாக ஆகிவிடுவேன்.  அவர்  என்னை 1200 கி மீ  நடத்தி சென்று பின்னர் நடு தெருவில் விட்டுவிட்டு போனதுபோல் இருக்கும். எங்கு இருக்கிறேன் என்பதே தெரியாது அழுகை வந்துவிடும்   
 
அனால் சில மணி துளிகளுக்கு பிறகு அவர் மீண்டும் வந்து என்னுள் தங்குவார் தேற்றுவார் நடத்துவார் 
 
ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்
 
இப்படி பலமுறை நான் அனுபவித்திருப்பதால்  தேவனின் பிரசன்னம் நம்மைவிட்டு விலகும் நேரம் நமக்கு சோதனை காலம் என்று நிர்ணயித்து கொண்டுள்ளேன். அக்காலங்களில் அதிகம் ஜெபிக்க முடியாது.நாம் மிகுந்த முயற்சியெடுத்தால்கூட அந்த பிரசன்னம் கிடைக்காது.
 
எனவே ஜெபிக்க தடை வருவது சகஜமான ஒன்றுதான் அந்நேரங்களில் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
 

 

 

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

OK Thanks anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard