22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்..
கானானிய ஸ்திரி இயேசுவிடம் வந்து உதவும் என சொல்லும் போது இயேசு இந்த உவமையயை சொல்ல காரணம் என்ன ? சற்று தெளிவாக விளக்கவும்
ஆண்டவரிடம் தங்கள் கேள்வி குறித்து விசாரித்தபோது எனக்கு நினைப்பூடடபடட இரண்டு வசனங்கள்
யாத் 17: 16. அமலேக்கின் கை கர்த்தருடையசிங்காசனத்துக்குவிரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
மல்கியா 1:4 ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன்; அவர்கள் துன்மார்க்கத்தின்எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
சில ஜனங்கள்மேல் கர்த்தர் என்றென்றைக்கும் சினம் வைக்க காரணம் என்னவென்றால் அவர்கள் தேவனுடைய திடடத்துக்கு எதிராக செயல்பட்டு தேவன் செய்ய நினைக்கும் நன்மைகளை யாரும் அடையவிடாமல் கெடுக்கிறார்கள்.
எனவே தேவன் அவர்ககளை தலைமுறை தலைமுறைக்கும் வெறுக்கிறார் அப்படித்தானே இந்த சமாரிய ஸ்திரியும் ஆண்டவரால் வெறுக்கப்படுகிறாள்.
மேலும் இன்னொற்றையும் நியாபகப்படுத்தினார்
அதாவது இயேசுவோடு கூடவே இருந்த பேதுரு ஒரே ஒரு சிறிய விஷயத்தில் தேவனின் திடடத்துக்கு எதிரியாரை பேசியபோது ஆண்டவர் அவனை பார்த்து
மத்தேயு 16:23 திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
இப்படி பேதுருவை பார்த்து "சாத்தானே" அதாவது "பிசாசே" என்று சொல்வதைவிட நாய்க்குட்டி என்ற வார்த்தை பெரிய வார்த்தை அல்ல என்பதே. காரணம்
நாய் குட்டிகள் பிள்ளைகளோடு சேர்ந்து வளருவதுதான் ஆனால் பிசாசு என்ற வார்த்தையோ மிக கொடுமையான வார்த்தை அதை பேதுருவை பார்த்து பயன்படுத்தியுள்ளார்.
சுருக்கமாக, தேவனின் திடடத்துக்கு எதிராக செயல்படு தானும் பயனடையாமல் பிராமனுஷர்களையும் பயனடையவிடாமல் தடுக்கும் எந்த மனுஷன்னும் / ஜாதியரும் தேவன் சினம் வைக்கிற ஜனம், அவர்களை தேவன் எப்படி வேண்டுமாமாலும் அழைக்கலாம் என்பதுதான்.
எனவே தேவனுடைய திடடத்துக்கு ஒப்புக்கொடுத்து செயல்படுவோமாக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நன்றி அண்ணா நான் நாய்க்குட்டி என்று அவர் அழைத்ததை பற்றி கூறவில்லை இரக்கமுள்ள தெய்வம் ஏன் கானானிய ஸ்த்ரீக்கு இரண்டு தடவை பதில்கள் மட்டுமே சொல்கிறார் மூன்றாவது முறை அவள் கேட்கும் போது தான் விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்று சொல்கிறார் இயேசு அதை தாமதிக்கவும் அப்படி பதில்கள் சொல்லவும் காரணம் என்ன ?
நன்றி அண்ணா நான் நாய்க்குட்டி என்று அவர் அழைத்ததை பற்றி கூறவில்லை இரக்கமுள்ள தெய்வம் ஏன் கானானிய ஸ்த்ரீக்கு இரண்டு தடவை பதில்கள் மட்டுமே சொல்கிறார் மூன்றாவது முறை அவள் கேட்கும் போது தான் விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்று சொல்கிறார் இயேசு அதை தாமதிக்கவும் அப்படி பதில்கள் சொல்லவும் காரணம் என்ன ?
இயேசு இஸ்ரவேலருக்காக மட்டுமே அனுப்பப்பட்டார் ?
சகோதரி உங்கள் முதல் கேள்விக்கு என்னுடைய பதிவில் பதில் இருக்கிறது அதாவது தேவ திடடத்துக்கு எதிராக செயல்படும் எந்த ஜாதியம் இயேசுவுக்கும் பிடிக்காதவர்களே.
நமக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவர் நம்மிடம் பேச வந்தால் எப்படி நாம் கவனிப்பது இல்லையோ அதேபோல் இயேசுவும் கவனிக்கவில்லை பின்னர் அந்த ஸ்திரியின் தாழ்மையான பதிலை கேட்டு வியந்து அற்புதம் செய்தார்.
இரண்டாவது
இயேசுவே இவ்வாறு சொல்கிறார்
24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
பிறகு இதில் நாம் ஏன் மாற்று கருத்து கண்டுபிடிக்க முயலவேண்டும்?
அதாவது இயேசு மாம்சத்தில் வந்தது இஸ்ரவேல் தேசத்தில்தான் அங்கேதான் சுற்றி திரிந்தார்.
ஆனால் அவர் மரித்ததோ சர்வலோக பாவத்துக்காகவும்
I யோவான் 2:2நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)