ரூத் 2:20 அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்;
இந்த கேள்விக்கான என்னுடைய புரிதலை நான் இங்கு தர வாஞ்சிக்கிறேன் சகோதரி.
தேவனின் பார்வையில் இந்த உலகத்தில் உள்ளவர்கள் இரண்டாக பிரிக்கப்படுகின்றனர்
1. மரித்தோர் - அதாவது இறந்து போன்றவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் போவதுபோல தேவன் சொல்லும் இந்த மரித்தவர்களால் தேவனுக்கு எந்த பயனும் ஒருநாளும் கிடைக்க வாய்ப்பே இல்லை எனவே இவர்களை தேவன் மரித்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
மத்தேயு 8:22அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
2. ஜீவனுள்ளோர் : உயிருள்ள ஒருவனால் இன்னொருவருக்கு ஏதாவது பயன் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா அதுபோல் இந்த ஜீவனுள்ள ஒருவனால் தேவ சித்தம் நிறைவேற ஏதாவது பயன் உண்டாக வாய்ப்பு இருக்கிறது இவர்களை தேவன் ஜீவன் உள்ளவர்கள் என்கிறார்
இங்கு தங்கள் கேள்வி "தேவன் மரித்தோருக்கு தேவனாய் இராமல் ஜீவனுள்ளோருக்கு தேவனாய் இருக்கிறார்" என்ற வசனம் என்ன பொருளில் இயேசு சொல்கிறார் என்பதுதான்.
மரித்தவர்கள் தேவனை தேவனாக ஏற்றுக்கொண்டது இல்லை எனவே அவர்களுக்கு தேவன் தேவனல்ல. மேலும் மரித்தவர்களுக்கு தேவன் தேவனாக இருந்தோ இல்லாமலோ யாருக்கும் எந்த பயன்பாடும் கிடையாது எனவே அவர்களுக்கு தேவனாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை குறிப்பிடவே இயேசு இவ்வாறு கூறுகிறார்.
ஆனால் மரித்தோறால் தேவனுக்கு எந்த பயன்பாடும் இல்லை என்றாலும் தேவனின் செயல்பாடுகளில் மரித்தோருக்கு தயை செய்யும் காரியமும் அடங்கியிருக்கிறது. அதாவது மரித்தவர்களின் நலனுக்காகவும் தேவன் செயல்படுகினார் எனவேதான் நகோமி இவ்வாறு கூறுகிறார்.
20. அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற
கர்த்தராலே
அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்;
அதாவது மரித்தவர்களையும் தேவன் உயிரோடு எழுப்பி அவரவர் கிரியைக்கு தக்க பலனை கொடுப்பார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)