நித்திய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும் என்று தன்னிடம் வந்து கேட்ட ஒருவருக்கு ஆண்டவர் "இறுதியான ஒரு குறை" என்று சொல்லி சுட்டிக்காட்டியது என்னவென்றால்
மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு:நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
இந்த வார்த்தை மத்தேயு மார்க்கு லூக்கா ஆகிய மூன்று சுவிசேஷ நூலிலும் இடம்பெற்றுள்ளது. எனவே இது மிக முக்கியமான வார்த்தையாக நான் கருதுகிறேன்.
இயேசுவின் வாயால் சொல்லப்பட இந்த வார்த்தைக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது?
ஆதி கிறிஸ்த்தவர்கள் சலத்தையும் விற்று அப்போஸ்த்தலர்
பாதததில் வைத்து பொதுவாக அனுபவித்தனர் என்று அறிய முடிகிறது. நாளடைவில் அது மாறிப்போனது தற்சமயம் அந்த நிலைமை இல்லை!
பரலோகத்தில் பங்கடைய காத்திருக்கும் விசுவாசிகளுக்கு என் கேள்வி என்னவென்றால்:
நாளை இறுதி நியாயத்தீர்ப்பின்போது, நான் சொன்ன இந்த வசனத்தின் அடிப்படையில் நீ நடந்தாயா? என்று உங்களிடம் கேட்க்கப்படடால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
அவன் சொத்து வைத்திருக்கிறான் இவன் சொத்து வைத்திருக்கிறான்
அதனால் நானும் சேர்த்து வைத்தேன் என்று அடுத்தவர்மேல் பழி போட்டு ஆண்டவரிடம் தப்பித்துவிட முடியாது.
லாசருவின் அருகில் வாழ்ந்த ஐஸ்வர்யவான் எந்த தவறும் செய்ததாக வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவன் ஐஸ்வர்யவானாக இருந்த ஒரே காரணத்துக்காக பாதாளம் சென்றான் என்பதுபோல் உள்ளது
எனவே நாம் சேர்த்துவைத்திருக்கும் பணம் மட்டுமே நம்மை பாதாளத்துக்கு கொண்டுபோய் சேர்த்துவிடும் என்பதுபோல் பொருள்கொள்ள முடிகிறது
இதை கருத்தில் கொண்டே இயேசு "பூமியில் உங்களுக்கு பொக்கிஷத்தை சேர்க்கவேண்டாம்" என்றும் "உனக்கு உண்டானவற்றை விற்று தரித்திரருக்கு கொடு" என்றும் "உன்னிடம் கடன் கேட்பவனுக்கு மனம் கோணாதே அவன் திருப்பி தருவான் என்று நினைத்து கடன் கொடாதே" என்றும் ஆண்டவர் கூறியிருக்கிறார்.
எனவே பூமியில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அனைவரும் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் என்பதை இன்றே யோசித்து வைத்துக் கொள்வது நல்லது அல்லவா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒவ்வொரு விசுவாசியும் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விதான் இது. நாம் இந்த பூமியில் வாழும் வரை தேவையான அடிப்படை, அத்தியாவசிய பொருள்களை தவிர, மற்ற எல்லாம் நாம் பரலோகத்தில் தான் சேர்க்க வேண்டும். உன்னை போல் பிறரை நேசி என்ற ராஜரீக பிரமாணத்தை பின்பற்ற அழைக்கப்பட்டுளோம். மிகுந்த ஆஸ்தியுள்ளவர்கள், ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க விரும்பமாட்டார்கள். உலகத்தை வெறுத்து பரலோகத்தை நேசிப்பவர்களால் தான் அது முடியும். பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க ஆண்டவர் எனக்கு கிருபை பாராட்டி வருகிறார். பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துக்கும் துதியும், கணமும், மகிமையும் சதாகாலமும் உண்டாவதாக.
ஒவ்வொரு விசுவாசியும் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விதான் இது. நாம் இந்த பூமியில் வாழும் வரை தேவையான அடிப்படை, அத்தியாவசிய பொருள்களை தவிர, மற்ற எல்லாம் நாம் பரலோகத்தில் தான் சேர்க்க வேண்டும். உன்னை போல் பிறரை நேசி என்ற ராஜரீக பிரமாணத்தை பின்பற்ற அழைக்கப்பட்டுளோம். மிகுந்த ஆஸ்தியுள்ளவர்கள், ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க விரும்பமாட்டார்கள். உலகத்தை வெறுத்து பரலோகத்தை நேசிப்பவர்களால் தான் அது முடியும். பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க ஆண்டவர் எனக்கு கிருபை பாராட்டி வருகிறார். பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துக்கும் துதியும், கணமும், மகிமையும் சதாகாலமும் உண்டாவதாக.
சகோதரர் அவர்களுக்கு கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த வசனத்தை பார்த்தால் “ஐசுவரியவான்கள் பரலோகத்துக்கு போக முடியாது” என்ற ஒரு கருத்தை நேரடியாக இயேசு கூறுவது போல காணப்படும். இவ்வசனம் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் காணப்படும் போதிலும், மாற்கு நூலில்தான் இதற்குரிய சரியான விளக்கத்தை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மாற்கு 10ம் அதிகாரம் 22 தொடக்கம் 25ம் வசனம் வரை வாசித்து பார்த்தால் இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். முதலில் இயேசு “ஐசுவரியவான்கள் தேவனுடைய ராட்சியத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது” என்று சொல்கிறார். அப்போது சீடர்கள் அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆச்சரியப்படுகிறதைக் கண்டவுடன், அதை அவர்களுக்கு விளக்குமுகமாக “ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் தேவனுடைய ராட்சியத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது” என்று கூறினார்.
அதாவது இங்கே இயேசு கூறவருவது யாதெனில், ஐசுவரியவான்களல்ல, தங்கள் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் ஐசுவரியவான்களே பரலோகத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்.
அது மட்டுமல்ல ஐசுவரியவான்கள் பரலோகம் போக மாட்டார்கள் என்னும் கருத்தை இயேசு கூறியிருக்க மாட்டார். ஏனெனில் விசுவாசிகளுக்கெல்லாம் முன்னோடியான ஆபிரகாம் கூட மிகுந்த ஆஸ்தியுள்ள ஐசுவரியவான். (ஆதியாகமம் 13:2 , ஆதியாகமம் 24:35) இயேசு கூறிய உவமையில் ஆபிரகாமின் மடியில் லாசரு தேற்றப்பட்டார். (லூக்கா 16:23) அப்படியானால் “ஆபிரகாம் நரகத்தில் இல்லை” என்பது இயேசுவின் கருத்து.
மேலும் “ஐஸ்வரியமும் கனமும் தேவனாலே வருகிறது” என வேதம் கூறுகிறது(Iநாளாகமம் 29:12) தேவனே ஐசுவரியத்தை கொடுத்து விட்டு, ஐசுவரியவானை நரகத்தில் தள்ளமாட்டார். தேவனை நம்பாமல் ஐசுவரியத்தை நம்புபவனே பரலோகம் போக முடியாது.
தங்கள் ஆஸ்திகளால் சில ஐசுவரியமுள்ள பெண்கள் இயேசுவுக்கு ஊழியம் செய்தார்கள். (லூக்கா 8:3) என வேதம் கூறுகிறது.
எனவே ஐசுவரியவானாய் இருப்பது பாவமல்ல. “ஐசுவரியவானாய் இருப்பவன் பரலோகம் போக முடியாது” என்பது பொய்யானதாகும். தன் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைப்பவனே பரலோகத்துக்கு போக முடியாது. இப்படிப்பட்டவன் பரலோகத்துக்கு போவதைக் காட்டிலும் ஒட்டகம் ஊசியின் துளைக்குள் நுழைவது இலகுவானது. ஊசியின் வாசல் என்று ஒரு வாசல் இருப்பதாக சொல்லப்படுவதெல்லாம் சும்மா கட்டுக் கதைகளாம்………
(இக்கட்டுரை 2013 ம் ஆண்டு என்னுடைய வலைத்தளத்தில் நான் எழுதியது. இங்கு பொருத்தமாயிருப்பதால் மீண்டும் பதிகிறேன்)
அப்படியெனில் இயேசுவின் இந்த வார்த்தைக்கு பொருள் என்னவென்பதை நான் அறிந்துகொள்ளலாமா?
மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
"உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று தரித்திரருக்கு கொடு" என்பதன் பொருள் என்னவாக இருக்கும்?
இரண்டாவது.
பழைய ஏற்பாடு என்பது உலக பிரகாரமான ஐச்வர்யம் வாக்குப்பண்ணப்படட ஒரு காலம் ஆனால் புதிய ஏற்பாட்டு காலம் சிலுவையை எடுத்துக்கொண்டு பின்செல்லவேண்டிய காலம். உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் போதுமானது என்று எண்ணி வாழ வேண்டிய காலம்.
தங்கள் ஆஸ்த்தியால் ஊழியம் செய்தவர்கள் பரலோகம் போனார்கள் என்று வேதத்தில் இல்லை அவர்கள் விசுவாசியாக இருந்து ஊழியம் செய்தார்கள் என்றுதான் உள்ளது. அவர்களுக்கான இறுதித்தீர்ப்பு என்னவென்பது முடிவாகவில்லையே பிரதர்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)