மத்தேயு 13:44பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
மத்தேயு 13:46அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
இரட்சிக்கப்பட்ட எல்லோருக்குமே பரலோக ராஜ்ஜியம் அடையவேண்டும் என்ற வாஞ்சை இருப்பதை நாம் பார்க்க முடிகிறது
அதிலலும் சிலர் நாங்கள மட்டும்தான் போவோம் எங்கள் சபையார் மட்டும்தான் பரலோகம் போவார்கள் என்று சொந்தம் கொண்டாடி மார் தட்டி கொள்கிறார்கள். இருக்கட்டும் நல்லது!
ஆனால் அவர்கள் எல்லோரும் "தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று" அதை அடைய பிரயாசப்படுகிறார்களா? என்று கேள்வியை நாம் கேட்டு பார்க்கலாமே!
ஆண்டவர் எனக்கு உணர்த்திய ஒரு கருத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன்!
I கொரிந்தியர் 2:9எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை
ஆகினும் அது எப்படி இருக்கும் என்பது ஒரு அனுமானத்தின் அடிப்படையில் யூகித்து வைத்திருக்கிறோம்.
அங்கு எவ்வாறு இருக்கும் என்பதை சில வேத வசனங்களும் நமக்கு போதிக்கிறது
1. பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
2. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
3. இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
4. அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
5. அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய
கர்த்தரே
அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
சுருங்க சொல்லப்போனால் கவலை கண்ணீர் /துன்பம் துயரம் வேதனை இல்லாத தீமையே இல்லாத ஒரு மேன்மையான அதுவும் நித்தியமான ஒரு இடம் என்று யூகித்துகொள்ளலாம்.
இப்படிபடட ஒரு மேன்மையான இடத்தை அடைய நாம் இந்த உலகத்தில் உள்ள அழிந்துபோகக்கூடிய அற்ப உடமைகளை விற்றுக் கொடுக்க திறந்த வாசல் இருந்தும் இன்னமும் நாம் தாமதித்துக்கொண்டே இருக்கிறோமே ஏன்?
நாளை நியாயதீர்ப்பு நாளில் ஆண்டவர் எல்லோருக்கும் பரலோக ராஜ்யத்தின் மேன்மையை ஒருவிசை காண்பித்து, இதன் உள்ளே பிரவேசிக்க விரும்புகிறவன் தன்னுடையவைகளை எல்லாம் விற்று கொடுத்துவிட்டு உள்ளே வரக்கடவன் என்று சொல்வராகில்
அன்று என்ன நடக்கும்?
உங்கள் சொத்துக்களை கொள்வார் யாரும் இருக்கமாடடார்கள் என்பதை காதுள்ளவர்கள் கேட்டுக்கொள்ள கடவர்கள்!
அந்நேரத்தில் தங்கள் வெள்ளியையும் பொன்னையும் தெருவில் எரிந்துபோடுவார்கள் அதை எடுக்க யாரும் விரும்பமாடடார்கள்
எசேக்கியேல் 7:19தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.
அந்நேரத்தில் எல்லோருமே தங்கள் தங்கள் சொத்துக்களை விற்க விரும்புவார்கள். கொள்வதற்க்கோ யாரும் முன்வரமாடடார்கள். எனவே உங்களால் பரலோக ராஜத்துக்குள் பிரவேசிக்க முடியாமல் போகலாம் எனவே இப்பொழுதே ஆயத்தமாகுங்கள்
மேலும் முக்கியமான ஒரு காரியத்தை கவனித்து கொள்ளுங்கள்!
இந்த கடைசி காலத்தில் பூமியில் அநேக சொத்துக்களை சேர்த்து வைப்பவர்கள் அது தங்கள் பிள்ளைகளுக்கு தேவைப்படும் என்றும் தங்கள் பிள்ளைகள் பிற்காலத்தில் நிம்மதியாக வாழும் என்றும் நினைக்கிறார்கள்
அது பெரிய தவறு!
அவர்கள் உண்மையில் செய்வது என்னவென்றால் தங்கள் பிள்ளைகள் பரலோகத்துக்குள் போக முடியாதபடி கதவை இறுக்கமாக பூட்டி வைக்கிறார்கள் என்பதே உண்மை!
தேவ ஆவியின் உதவியுடன் நான் எழுதுவதை சற்று சிந்தித்து பாருங்கள். இதில் உள்ள உண்மை புரியும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)