என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி தேவனுடைய ஆலயமாக நம் சரீரம் இருப்பதால் அதில் ஒன்றை எடுத்து தானமாக கொடுப்பது ஏற்றது அல்ல என்பதாகும்
வேத வசனத்தின்படி விளக்கம் தரவும்
-- Edited by Debora on Monday 23rd of January 2023 12:57:30 PM
இதற்கான பதிலை நான் இவ்வாறு பார்க்கிறேன்:
எசேக்கியேல் 37ம் அதிகாரம் - உலர்ந்த எலும்புகள் உயிரடைதல்
இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்ட்டதுபோல் பார்த்தால், அந்த பள்ளத்தாக்கில் பரவிக்கிடந்த அந்த எலும்புகளுக்கு சதையோ நரம்போ தோலோ இல்லை அதாவது மாம்ச சம்பந்தமான எந்த உறுப்புகளும் இல்லை. அவை எல்லாம் அழிந்து வெறும் எலும்புகளாக மட்டுமே இருந்தன ஆகினும் கர்த்தர் அந்த எலும்புகளின் மேல் மாமிசத்தையும் தோலையும் போர்த்தி ஜீவனை கொடுக்கிறார்
எசெக் 37: 6. நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
இங்கு நரம்பு தோல் மாம்சம் எல்லாம் கர்த்தரால் புதிதாக கொடுக்கப்படுவதால் மாம்ச சம்பந்தமான உறுப்புகளை தானம் செய்வதில் தவறில்லை அவர் புதியதாக நமக்கு கொடுப்பர் என்பது வசனத்தின் அடிப்படையில் தெளிவாகிறது.
ஆனால் எலும்புகளை யாரும் தானம் பெறுவது இல்லை, அதை கொடுக்கவும் கூடாது என்பது நாம் அறியவேண்டியது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அண்ணா உடல் உறுப்புக்களை தானம் பண்ணலாம் என்று எங்குமே வசனம் இருக்கிறதா? இரத்தம் தானம் பற்றி இருக்கிறதா? இல்லாத பட்சத்தில் எப்படி அது தவறில்லை என்று நாம் எடுத்துக்கொள்ள முடியும்.?
சிஸ்ட்டர் வசனம் செய்யக்கூடாது என்று சொல்வதை மாத்திரம் துணிந்து செய்யாமல் இருந்தால் அதுவே போதும்.
வசனம் கருத்து சொல்லாத ஒன்றை நாம் செய்யக்கூடாது என்று தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை
உதாரணமாக - வசனம் அரிசி சோறு சாப்பிடலாம் என்று எங்கும் சொல்லவில்லை நாம் அரிசி உணவை சாப்பிடுகிறோம் அல்லவா?
கணினியில் நீ எழுதலாம் என்று வசனம் எங்கும் சொல்லவில்லை ஆனால் நாம் அதில்தான் எழுதுகிறோம்.
ஆதாம் ஏவாளை' பார்த்து சகல கனியையும் புசிக்கலாம் என்று மொத்தமாக சொல்லிவிட்டு ஒரே ஒரு கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்று சொல்லி அந்த விருட்ச்சம் எங்கிருக்கிறது என்று சொன்னார்.
அதுபோல உலகத்தில் உள்ள தேவன் படைத்த எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரம் உண்டு ஆனால் தேவன் செய்யக்கூடாது என்று சொன்னதை மாத்திரம் நாம் துணிந்து செய்யாமல் இருப்போமாக.
ஆனால் மனுஷனோ அது பழைய ஏற்பாடு இது புதிய ஏற்பாடு என்று ஏதேதோ சொல்லி அவர் செய்யக்கூடாது என்று சொன்னதையும் செய்துகொண்டு அதற்க்கு நியாயம் கர்ப்பித்துக்கொண்டு இருக்கிறான்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)