என்னை அழைத்து வந்த இரண்டு நண்பர்கள் ஒருவன் கொஞ்சம் கருப்பு ஒருவர் நல்ல சிகப்பு இரண்டு பேரும் என்னை நடுவில் உட்கார வைத்து நான் ஆட்டோவில் இருந்து குதித்துவிடக்கூடாது என்று என்னை இருக்க பிடித்து வைத்திருந்தனர். அப்பொழுது திடீர் என்று எனது ஒரு பக்கத்தில் இருந்த கருப்பு நண்பர் "பரமசிவனாகவும்" இன்னொருவர் இறைவனின் "விழுந்து போன தூதனாகவும்" என் கண்ணுக்கு தெரிந்தனர். இருவரும் சேர்ந்து என்னை கட்டாயப்படுத்தி பாதாளம் என்ற ஒரு முடிவில்லா குழிக்குள் தள்ள முயல்வதை அப்படியே பார்த்தேன். ஐயோ என்னை விடுங்கள் என்று சத்தம் போடவும் ஆட்டோ காரன் நின்றுவிட்டார். அது "செம்பூர் டையமண்ட கார்டன்" என்ற இடம். அங்கு இறங்கி விட்டோம் பின்பு என் நண்பர்களை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. (இதை பற்றி அனேக ரகசியங்களை இறைவன் எனக்கு பிறகு தெரியப்படுத்தினார் அதை இறைவனுக்கு சித்தமானால் இந்துக்களின் பகுதியில் எழுதுகிறேன்) . எனது நண்பர்கள் எனது சொந்த ஊருக்கு கடிதம் போட்டிருந்ததால் எனது கிறிஸ்த்தவ தம்பி என்னை தேடி மும்பை வந்து என்னை தூத்துக்குடி கூட்டிக்கொண்டு போனான் தூத்துக்குடி வந்ததும் எல்லாமே சரியாகி நார்மல் நிலைக்கு வந்து விட்டேன். .
இந்த நேரத்தில் எனக்கு "களக்காடு" என்னுக் உருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் பார்த்து பேசி முடித்தனர். அந்த பெண்ணின் அக்கா மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்ததால் இந்த திருமணம் பேசி நிச்சயமாகிவிட்டது.
அந்த நாடகளில் தேவனால் திறக்கப்படட என் கண்களால் நான் பார்த்ததை இன்றுவரை என்னால் மறக்கவும் முடியவில்லை நம்பவும் முடியவில்லை சிஸ்ட்டர். காரணம் இப்படியெல்லாம் மர்மம் இந்த உலகத்தில் இருக்கிறதா இதில் எதையும் அறியாமலா நாம் எல்லோரும் எதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று எண்ணி எண்ணி திகைக்கிறேன்.
நம் கண்களை மாத்திரம் தேவன் திறந்தால் போதும் இந்த உலகத்தில் எவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையின் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதை அறிய முடியும்.
தேவனிடத்தில் இருந்து விழுந்துபோன அந்த லூசிபர் என்னும் தூதன் இந்துக்களின் பிரதான தெய்வமாகிய அவருடான் கூட்டு அமைத்துகொண்டு எல்லோரையும் பாதாளம் என்ற ஒரு கொடூரமான இடத்துக்கு இழுத்து செல்லும் வேலையை செய்து வந்தனர்.
அதையே என் கண்களால் பார்த்தேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)