தேவனுடைய கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்கள் தொகுப்பை தர முடியுமா?
வேதத்தில் ஒவ்வொரு கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்கள் ஒவ்வொரு இடங்களில் உள்ளது அவைகளை தொகுப்பாக தர முடியுமா ?
அப்படியொரு தொகுப்பை எழுதி தருவது கொஞ்சம் கடினம் சிஸ்ட்டர்.
ஏனெனில் அது வேதாகத்தின் எல்லா பகுதியிலும் அடங்கியிருக்கிறது
உதாரணமாக
ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசாரிக்க வேண்டும் என்று கடடளை சொல்கிறது
உபாகமம் 5:13ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.14. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடையஓய்வுநாள்; அதிலேநீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்
அதன் தொடர்ச்சியாக ஓய்வுநாளை எப்படி ஆசாரிக்க வேண்டும் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார்
ஏசாயா 58:13என்பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடையபரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
எனவே நாமே தேவ ஆவியின் துணையோடு வேதத்தை ஆராய்ந்து அறிவதே சிறந்தது . அதில் சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் கேட்க்கலாம். மற்றபடி அப்படியொரு தொகுப்பை நான் உருவாக்கவில்லை. கர்த்தருக்கு சித்தமானால் முயற்சிக்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)