கடந்த நாளில் நான் மும்பை சென்றுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டு இருந்தேன். இரவு 12.05 க்கு நான் ரிசெர்வேசன் செய்து வைத்திருந்த சிலீப்பர் கிளாஸ் பெட்டியில் ஏறினேன். அப்பொழுதே அங்கே ஒரேவாக்குவாதம் நடந்துகொண்டு இருந்தது. மூன்று மராட்டி இளைஞர்கள் நான்கு வயதான மராட்டி தாயார்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் மிகுந்த அசதியில் தூங்கிவிடடேன்.
காலையில் 7 மணிக்குமேல் எழுந்து பார்த்தால் மீண்டும் ஒரு சத்தம்,. என்னவென்று விசாரித்தால் அந்த தாய்மார்களின் இரண்டு பேருக்கு எங்கள் பெட்டியிலும் மற்ற இரண்டு பேருக்கு பக்கத்து பெட்டியிலும் இடம் இருந்தது. பக்கத்து பெட்டியில் உள்ளவர்கள் எழுந்துவந்து இங்குள்ளவர்களுடன் சேர்ந்துகொண்டு எதோ கதை பேச ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் நடு படுக்கையில் படுத்திருந்த அந்த இரண்டு இளைஞர்கள் 8 மணி பக்கம் ஆகியும் எழுந்து அவர்கள் உட்க்கார இடம்கொடுக்காமல் அடம்பிடித்து கொண்டு சும்மா படுத்துக்கொண்டு இருந்தனர்.
இந்த தாய்மார்கள் எவ்வளவோ சத்தம் போட்டும், அவர்கள் வேண்டுமென்றே நடு படுக்கையில் படுத்துக்கொண்டு எழுந்திருக்க மறுத்தனர்.
அதை கவனித்த நான், .அந்த இளைஞர்களிடம் அதே இடத்தில் மேலேயுள்ள ஸீட் ஆளில்லாமல் காலியாக இருக்கிறது ஒருவராவது எழுந்து மேலேயுள்ள இருக்கைக்கு போனால் என்ன? ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்று கேட்ட்டேன்.
உடனே ஒருவன் அவர்கள் இரண்டு பேருக்குத்தான் இங்கு இடம் மற்றவர்களுக்கு வேறு பெட்டியில் இடம், நான் எழுந்தாள் நான்கு பெரும் உட்க்காந்து கொள்வார்கள் என்றான்.. நான் உட்க்காந்துவிட்டு போகட்டுமே நீ படுத்துதானே கிடக்கிறாய் மேலேயுள்ள படுக்கையில் படுக்க வேண்டியதுதானே என்றேன்.
உடனே இன்னொருவன், உங்களுக்கு வசதியாக இருக்கை இருப்பதால் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் இடத்தை எனக்கு தாருங்கள் நான் எழுந்துகொள்கிறேன் என்றான். (நான் ஓரத்தில் உள்ள மேல் படுக்கை கேட்டு வாங்கியிருந்தாதால் அதில் ரொம்ப வசதியாக படுத்துக்கொண்டிருந்தேன்.)
உடனே நான், வா வந்து என் இடத்தை எடுத்துக்கொள் எனக்கு இடம் இல்லை என்றால்கூட பரவாயில்லை அந்த வயதானவர்கள் ஓன்றாக அமர்ந்து பேசிவிட்டு போகட்டும் என்று சொல்லி என் இருக்கையை விட்டு இறங்கி அவனுக்கு அதை கொடுத்துவிட்டு. நடுவில் உள்ள படுக்கையை இறக்கி அவர்கள் எல்லோரையும் ஒன்றாக அமரவைத்தேன். (ஆனால் அவர்களோயாரும் எனக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை அதை நான் எதிர்பாக்கவும் இல்லை.)
அப்பொழுது நான் அறிந்துகொண்டது / ஆண்டவர் உணர்த்தியது இதுதான் . "அடுத்தவருக்கு புத்திமதி/அறிவுரை சொல்லும் நாம், நம் சொகுசான இடத்தை பிறருக்கு விட்டுக்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறோமா? என்பதை நாம் ஆராய்ந்து பார்த்துக்கொள்வது நல்லது.
நீங்களும் உங்கள் சொகுசான வாழ்க்கையை / வீடடை / இடத்தை பிறருக்கு விட்டுக்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறீர்களா? உங்கள் இருதயம் அதற்க்கு தயாராக இருக்கிறதா என்பதை சற்று யோசித்து பாருங்கள்.
நீங்கள் எதை பெரியதாகவும் / சொகுசாகவும் / முக்கியமானதாகவும் நினைத்து, இதை யாருக்கும் கொடுக்கமாடடேன் என்று பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு விக்கிரகம்.
எதிரியானவன் சோதிக்கும்போது எந்த எதிர்ப்பும் இல்லாமல், இருக்கும் அனைத்தையும் இழக்க துணியாவிடடால் நீங்கள் விக்கிரக ஆராதனையில் இருக்கிறீர்கள் உங்களை வைத்து தேவனை ஒன்றையும் செய்யமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(ஒரு குறிப்பிடட இடத்தில் ரயில் வந்தபோது அந்த நான்கு தாயார்களும்இறங்கி வண்டி காலியாக இருந்தது அப்பொழுது அந்த இளைஞர்கள் எங்கே போகிறார்கள் என்று விசாரித்தபோது திருப்பதிக்கு மொடடை போட போகிறார்களாம்.
சாமியை கும்பிட போகும் நீ, வயதான பெண்மணிகளுக்கு அவர்கள் விரும்பும் இடத்தைகூட கொடுக்காமல் இடும்புப்பிடித்து, நீ சாமிக்கு போய் மொடடை போடுவதால் உனக்கு என்ன பயன் என்று கேட்ட்டேன்..அவர்கள் தங்கள் தவறை சற்று உணர்ந்தவர்கள் போல் தெரிந்தது) .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)