நம் பரிசுத்த வேதாகமம் தேவனின் உயரிய குண நலன்கள் பற்றி அநேக வசனங்களில் வெளிப்படுத்தியுள்ளது. அவற்றுள் சில :
சங் 145:8. கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
9. கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
யோவேல் 2:13 அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
யாத்திராகமம் 34:6 கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
இந்த திரியில் அவரவர்கள் தாங்கள் அறிந்துகொண்டுள்ள அல்லது அனுபவித்துள்ள தேவனின் உயரிய பண்புகளை குண நலன்களை பதிவிட ஊக்குவிக்கிறேன். அது பலருக்கு தேவனை அறிந்துகொள்ள பயனுள்ளதாக அமையும்.
எனது அனுபவம்:
கடந்த நாளில் ஒரு குறிப்பிடட நேரத்தில் என் இருதயத்தை தேவன் தன்னுடைய அன்பினால் நிறைத்தார். சுமார் அரை மணிநேரம் அந்த தேவ அன்பும் சமாதானமும் இருதயத்தில் அளவில்லாமல் பெருக்கெடுத்தது.
அந்நேரங்களில் நான் மிகவும் அழுதேன். ஏன் அழுதேன் என்பது எனக்கே தெரியாது. அழுது முடித்து அமர்ந்திருந்த போது. எனக்கு தெரிந்த ஒவ்வொரு மனுஷர்களாக என் இருதயத்தில் கொண்டுவந்து அவர்களிடத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை ஆராய்ந்தேன்.
ஆனால் இவர்களை பற்றியும் எந்த குறையும் எனக்கு தெரியவில்லை எல்லோருமே மிகவும் நல்லவர்களாகே எனக்கு தெரிந்தார்கள்.
ஆம் அன்பானவர்களே தேவன் நம் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளதால் நமது பாவங்கள் தவறுகள் எதுவுமே அவரின் கண்ணுக்கு தெரிவதே இல்லை.
ஆனால் பாவ மனுஷனாகிய நாம் மனுஷனான சுய நிலையில் இருந்து யோசித்து பார்த்தால் அநேகர் மேல் ஏதாவது தவறு இருப்பதுபோல தெரியும். ஆனால் பரிசுத்தராகிய தேவனுக்கு எல்லோரும் நல்லவர்களாகவே தெரிவது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
இனி யாருடைய குறையையும் நினைத்து பார்த்து அவர்களை சற்றேனும் குறையுள்ளவர்களாக தீர்க்க கூடாது என்று முடிவெடுத்தேன்.
தேவனின் உயரிய குண நலன்களும் ஓன்று, அவர் மிகுந்த பரிசுத்தராக இருந்தும் பாவிகளை கூட பாவிகள் என்று சொல்ல விரும்பாத ஒரு உயர்ந்த அன்பான நிலையில் இருக்கிறார்.
தாங்களும் தாங்கள் அறிந்த/ அனுபவித்த தேவனின் பண்பு நலன்களை இங்கு எழுதலாம்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)