சரியாக சொன்னீர்கள் சுந்தர் அண்ணா ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தங்களுடைய ஆசைகளை சபை நிறைவேற்றி வைக்கவில்லை என்பதற்காகவும் சபைகளை விட்டு விலகி சபை மாறுவது முழுக்க முழுக்க சுயநலமாகும்.
ஒரு ஆவிக்குரிய பக்திவைராக்கியத்தை போதிக்கும் சபையை விட்டு செல்ல வேண்டிய காரணம் என்ன? தகுந்த காரணம் இல்லாமல் சபைகள் மாறுவதால் சபையின் ஒழுங்குகள் சீரழியும்.
சிறந்த விசுவாசத்தின் மேலும் தேவ வார்த்தையின் மேலும் கட்டப்படும் சபையை விட்டு ஒருவர் பிரிந்து செல்வாரேயானால் அவர் அப்படி பிரிந்து செல்வதற்கு அவருடைய தனிப்பட்ட அபிலாசைகள் நிறைவேறாமை மற்றும் போதகரின் கண்டிப்பை பொறுக்க முடியாமை என்பவை காரணமாக இருக்கலாம்.
இன்று பலர் சபையை விட்டு பிரிய நான் கண்ட காரணங்களை சொல்கிறேன்.
சபையில் பாஸ்டர் குத்தி காட்டி பேசி விட்டா். பாஸ்டர் வீட்டுக்கு வந்து என்னை பார்க்கவில்லை. இந்த சபையில் சேமக்காலை இல்லை. எனக்கு திருமணம் நடத்த மறுக்கப்பட்டது. பாஸ்டர் நேரடியாக கண்டிக்கிறார். பாஸ்டர் பட்சபாதம் பார்க்கிறார். இங்கே நகை போட மறுக்கிறார்கள். இங்கே களியாட்டம் பண்ண முடியாது. இங்கே சினிமா பார்க்க தடை.
இன்னும் பல…
இப்படி பலருடைய காரணம் பாஸ்டரை குறை சொல்வதாகவே இருக்கும். தலைவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். நீங்கள் எந்த சபைக்கு போனாலும் பூரண சற்குணமுள்ள பாஸ்டரை பார்க்க முடியாது.
தேவன் நமக்கு கொடுத்திருக்கும் பாஸ்டர் ஒரு கள்ளப் போதகராகவோ அல்லது தன்னுடைய ஊழியத்தை சரியாக நிறைவேற்றாதவராகவோ அல்லது வேதத்தை சரியாக போதிக்காதவராகவோ இருந்தாலன்றி சபையை விட்டு மாறுவது நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.
இத்துடன் நியாயமான வேறு காரியங்கள் இருந்தால் ஆவியானவரின் வழிநடத்தலை பெற்று வேறு ஒரு சரியான சபையை தெரிவு செய்வது சிறப்பு.
உதாரணமாக- ஒருவர் என்னிடம் கூறினார். தன்னுடைய சபையில் எந்த குறையும் இல்லை. பாஸ்டரும் நல்ல ஒரு தேவ மனிதன். ஆனால் அங்கு சபைக்கு வரும் ஒருவர் தன்னை பழைய பகையை வைத்து எடை போடுவதாகவும் பாஸ்டரும் தானும் எவ்வளவோ பேசியும் பயனில்லை என்றும் தான் மன்னிப்பு கேட்ட பின்பும் தன்னை குறித்து சபையில் அவதூறு பேசுவதாகவும் கூறினார். தான் அதை பொறுத்து கொண்டதாக கூறினார். ஆனால் கொஞ்ச நாட்களில் அந்த நபர் சபைக்கு வருவதை தவிர்த்ததால் நம்முயை இந்த சகோதரர் அவரை விசாரிக்க சென்ற போது நீ அந்த சபைக்கு வந்தால் நான் வர மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அவருடைய நன்மைக்காக தான் வேறு ஒரு சபைக்கு செல்வதாக தெரிவித்தார். அப்படி செய்வதால் அந்த மனிதன் சபைக்கு வருவார். அதனால் அவர் தொடப்பட வாய்ப்பு உண்டு.
அத்துடன் பெண்பிள்ளைகள் சபைகளுக்கு வரும் சில வாலிபர்களின் இம்சையை பொறுக்க முடியாமல் வேறு சபைகளுக்க செல்கிறார்கள்.
மற்றும் தூரப்பிரதேசத்திலிருந்து வரும் ஒருசிலர் நம்முடைய சபையில் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றாலும் காலப்போக்கில் தங்களுக்கு அருகிலுள்ள ஒரு ஆவிக்குரிய சபையை தெரிந்து கொள்ள எங்கள் போதகர் அவர்களை உற்சாகப்படுத்துகின்றார்.
இப்படியான நியாயமான காரணங்கள் உள்ளன.
ஆனால் ஒரே சபையில் நிலைத்திருந்து தேவன் தரும் ஒரே மேய்ப்பனின் கீழ் மேய்க்கப்பட்டால் அந்த மனுஷீக மேய்ப்பன் நம்மைப்பற்றி அதிகம் அறிந்தவராயிருந்து நம்மை நமக்கேற்றபடி நடத்த முடியும்..
ஒரு சபையில் நிலைத்திருப்பது நமது ஆவிக்குரிய வளர்ச்சியை இலகுவாக்கும்.