ஒருவருக்கு நியமிக்கபட்டவரை தவிர்த்து வேறு ஒருவரை திருமணம் செய்யலாமா? அதாவது ஒரு பெண் தனக்கு நியமிக்கப்பட்ட ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் முடிக்கலாமா?(நியமிக்கப்பட்டவர் உடன் அநேக பிரச்சினைகள் ஏட்படுவதால் ஒரு புரிந்துணர்வு இல்லாததால் இந்த தீர்மானத்துக்கு போகலாமா? )
ஒருவர் இந்த இரண்டு பிரச்சினையிலும் இருப்பதால் அவருக்கு என்ன ஆலோசனை சொல்வது எண்டு எனக்கு சரியாக தெரியவில்லை..
மேலும் தாய் தகப்பன் விருப்பத்தை மீறி பிள்ளைகள் திருமணம் முடிக்கலாமா?
தேவன் பார்வையில் இவைகள் எப்படி இருக்கும்?
இவர்களுக்கான பதிலை கர்த்தருக்குள் தரும்படி கேட்டு கொள்கிறேன்
மேலும் தாய் தகப்பன் விருப்பத்தை மீறி பிள்ளைகள் திருமணம் முடிக்கலாமா?
தேவன் பார்வையில் இவைகள் எப்படி இருக்கும்?
இவர்களுக்கான பதிலை கர்த்தருக்குள் தரும்படி கேட்டு கொள்கிறேன்
தகப்பனையும் தாயையும் கணம் பண்ணி அவர்கள் கருத்துக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்.
நீதிமொழிகள் 1:8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
ஆகினும் பெற்றோர் விருப்பம் என்பதைவிட தேவ சித்தம் செய்வதே மேல்! அனால் தேவ சித்தம் இருந்தால் அங்கு பெற்றோர் சம்மதம் நிச்சயம் இருக்கும் என்பது என் அனுபவ உண்மை.
தேவ சித்தத்தை அறிய விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு சம மன நிலையில் விட்டுக்கொடுத்து ஜெபிக்க வேண்டும். எதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு தேவ சித்தத்துக்கு நான் ஒப்புக்கொடுத்தேன் என்று சொல்லி பெற்றோர் சொல்வதை நிராகரிப்பது ஏற்றது அல்ல.
தகப்பன் தாயைவிட தேவன் பெரியவர் ஆனால்:
நீதிமொழிகள் 16:7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
எனவே சற்று பொறுமையோடு இருந்து ஜெபித்தால் கர்த்தர் நிச்சயம் மனா மாற்றத்தை ஏற்படுத்துவார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///ஒருவருக்கு நியமிக்கபட்டவரை தவிர்த்து வேறு ஒருவரை திருமணம் செய்யலாமா? அதாவது ஒரு பெண் தனக்கு நியமிக்கப்பட்ட ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் முடிக்கலாமா?(நியமிக்கப்பட்டவர் உடன் அநேக பிரச்சினைகள் ஏட்படுவதால் ஒரு புரிந்துணர்வு இல்லாததால் இந்த தீர்மானத்துக்கு போகலாமா? ) ///
புரிந்துணர்வு இல்லாதவர்கள் திருமணம் முடிப்பதற்கு முன்பு சரியான தீர்மானம் எடுத்து கொள்வது சிறப்பு. திருமணம் முடித்து விட்டால் விவாகரத்து செய்ய முடியாது. சிலவேளை தேவனே தடைபண்ண கூடும். அந்த சகோதரி அவருடைய குணாதிசயங்களை அறிவதற்காக தேவன் இப்படி பிரச்சனைகளை அனுமதிக்கலாம். ஒரு வேளை இது தேவனுடைய எச்சரிப்பாக கூட இருக்கலாம். கொஞ்சகாலம் பொறுத்திருப்பது சிறப்பு . தேவனுடைய வழிநடத்துதலுக்காக காத்திருக்க வேண்டும்...