ஆதியாகமத்தில் அவர் உன் தலையை நசுக்குவார் என்று முன்னறிவிக்கப்பட்டது. இயேசுசிலுவையில் அதை செய்து முடித்தார் என்று நம்புகிறோம். ஆனால் இந்த வசனத்தில் இப்படி உள்ளதே?
ரோமர்16:20. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
-- Edited by t dinesh on Saturday 1st of July 2023 10:46:05 PM

பிரதர் இன்றுதான் உங்கள் பதிவை காண நேர்ந்தது.
இங்கு அநேகருடைய கிறிஸ்த்தவ நம்பிக்கை தவறானதாக இருக்கிறது. ஒரு காரியத்தின் உண்மைத்தன்மை அறியாமல் எதையம் விசுவாசிப்பதில் பயனேதும் இல்லை.
இயேசு சாத்தானின் தலையை சிலுவையில் நசுக்கினார் என்று எங்கும் வசனம் இல்லை. அநேகர் விசுவாசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
நான் அறிந்தபடி, இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் சாத்தானை ஜெயிப்பதற்காக, மனுஷனுக்குள் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவரை ஒரு கூடுதல் பெலனாக பெற்றுக்கொடுத்துள்ளார்.
காரணம் தேவ பெலன் இல்லாமல் சாத்தானை ஜெயிப்பது கூடாத காரியம்.
தேவன் தன்னுடைய பக்கத்தில் இருந்து செய்யவேண்டியாயததை எல்லாம் செய்து முடித்ததன காரணமாகவே இயேசு "எல்லாம் முடிந்தது" என்று சொன்னார்.
பிசாசு தலை நசுக்கப்பட்டுவிட்ட்து என்றால் இன்று உலகத்தில் நடக்கும் அதி பயங்கர கொடூரங்களுக்கு யார் காரணம்?
இயேசு மரித்தபின் இன்றுவரை எந்த கொடூரமும் சற்றும் குறையவில்லையே மாறாக அன்றாடம் கூடிக்கொண்டே போகிறதே.
எனவே பிசாசின் தலை இன்னும் நசுக்கப்படவில்லை. தேவனே அதை சீக்கிரமாக செய்வார் என்றே பவுல் குறிப்பிடுகிறார். அதற்க்கு முன்னர் பிசாசானவன் பாதாளத்தில் தள்ளி முத்திரை போடப்பட வேண்டும்
வெளி 20:2பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்
இங்கே என்ன தலை நசுக்கப்படட பாம்பையா பாதாளத்தில் தள்ளினான் என்று வசனம் உள்ளது? நிச்சயமாக இல்லை.
அதை பாதாளத்தில் அடைப்பதற்கு முன்னர் ஒரு காரியம் நடைபெற வேண்டும் அது நடந்தால்தான் அதை பாதாளத்தில் அடைக்கவே முடியும்.
அது நிறைவேறும் நாடகளில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)