இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தன் வார்த்தைகளை நிறைவேற்ற ஆளுவோரின் இருதயங்களை ஏவும் தேவன்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தன் வார்த்தைகளை நிறைவேற்ற ஆளுவோரின் இருதயங்களை ஏவும் தேவன்!
Permalink  
 


இன்று இந்த உலகில் நடக்கும் பல சம்பவபங்களை  பார்க்கும்போது தேவன் சொன்னது எல்லாம் நிறைவேறுமா என்று அநேகருக்கு சந்தகங்கள் தோன்றலாம்.
 
ஏன் 
 
நம் வாழ்வில் கூட தேவனிடம் இருந்து பெற்ற சில வாக்குத்தத்தங்கள் நிறைவேற எந்த ஒரு முகாந்திரமும் இல்லாததுபோல் இருக்கலாம்.
 
ஆனால் தேவன் தான் சொன்னதை நிறைவேற்ற யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு சம்பவத்தை இங்கு நாம் பார்க்கலாம்.
 
இயேசுவானவர் எங்கே பிறப்பார் என்பதை இந்த வசனம் மூலம் தேவன் நெடு நாகளுக்கு முன்னவே முன்னறிவித்துவிடடார்.
 
மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. 
 
ஆனால் இயேசுவின் தாயார் இயேசுவை கருவுற்ற நாளில் இருந்து வாழ்ந்து வந்த இடமோ  பெத்தலஹேமில் இருந்து 150KM  தொலைவில் உள்ள நாசரேத்து என்னும் ஊர்.  
 
இந்நாடகளை போல் கார் வண்டிகளின் வசதி இல்லாத  அந்நாட்களில் சுமார் 35-40 மணி நேரம் நடந்தால்தான்பெத்தலகேமுக்கு போகமுடியும்.  
 
இச்சுழலில் நிறைமாத கர்ப்பிணியான மரியாளை யோசேப்பு பெத்தலகேமுக்கு அழைத்து செல்ல வாய்ப்பே இல்லாத ஒரு நிலையே அங்கு இருந்தது.
 
இந்நேரத்தில்தான்  
 
லூக்கா 2:1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
 
தேவன் தான் சொன்னதை நிறைவேற்ற அந்நாடகளில் ஆட்சியில் இருந்த அகஸ்துராயனையே பயன்படுத்துவதை இங்கு காணலாம்.
 
மேலும் அதுவே முதலாம் குடிமதிப்பு என்று வசனம் சொல்கிறது அப்படி ஒரு புதிய திடடத்தையே தேவன் தன வார்த்தைகளை நிறைவேற்ற உண்டாக்குகிறார்.   
 
வேறு வழியே இல்லாமல் யோசேப்பு தன நிறைமாத கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு தன சொந்த ஊராகிய பெத்தலஹேம் போகிறார் 
 
தேவன் சொன்னபடியே சொன்ன இடத்தில் இயேசு அங்கிருக்கும்போது பிறக்கிறார்.
 
    1. 3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.


    1. 4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,


    1. 5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.


  1. 6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
 
ஆ! என்ன ஆச்சார்யம். தேவன் தான் சொன்னதை நிறைவேற்ற யாரை வேண்டுமானாலும் ஏன்  எதிரியை கூட பயன்படுத்த முடியும் என்பதை  இதன் மூலம் நாம் அறிய முடியும்.
 
எனவே அன்பானவர்களே நம் முன்னால் இருக்கும் சூழ்நிலைகலை பார்த்து   நாம்  கலங்க வேண்டிய அவசியமே இல்லை. தேவன் தன இரட்சிப்பின் திட்டத்தை  யார் மூலமாவது    நிச்சயமாக நிறைவேற்றுவார்.  
 
அதற்க்கான காலம் வரும்வரை காத்திருப்போம்.
 
 
 








__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Amen.. Super Msg ..

Write more articles anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard