இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெபிக்கும் பொது தேவனுடைய வாக்குத்தத்தங்களை பயன்படுத்தி ஜெபிப்பது தேவை இல்லையா அது தவறா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 630
Date:
ஜெபிக்கும் பொது தேவனுடைய வாக்குத்தத்தங்களை பயன்படுத்தி ஜெபிப்பது தேவை இல்லையா அது தவறா?
Permalink  
 


ஜெபிக்கும் பொது தேவனுடைய வார்த்தைகளை பயன்படுத்தி ஜெபிப்பது தேவை இல்லையா அது தவறா? அதாவது அவருடைய வாக்குத்தத்தங்களை அவருக்கே நியாபகம் படுத்துவது போலாகுமா? அல்லது அவற்றை அறிக்கை செய்து நாம் ஜெபித்து அதை பெற்றுக்கொள்ளலாமா? 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2010
Date:
RE: ஜெபிக்கும் பொது தேவனுடைய வாக்குத்தத்தங்களை பயன்படுத்தி ஜெபிப்பது தேவை இல்லையா அது தவறா?
Permalink  
 


Debora wrote:

ஜெபிக்கும் பொது தேவனுடைய வார்த்தைகளை பயன்படுத்தி ஜெபிப்பது தேவை இல்லையா அது தவறா? அதாவது அவருடைய வாக்குத்தத்தங்களை அவருக்கே நியாபகம் படுத்துவது போலாகுமா? அல்லது அவற்றை அறிக்கை செய்து நாம் ஜெபித்து அதை பெற்றுக்கொள்ளலாமா? 


 சிலர் நீங்கள்  சொல்வதுபோல்  சொல்லத்தான் செய்கிறார்கள்.

 
ஆனால் அப்படி தேவனின் வாக்குத்தத்தங்களை சொல்லி ஜெபிப்பதில் எந்த தவறும் இல்லை அது தேவனுக்கு ஏற்றது என்பது எனது அபிப்ப்ராயம்.
 
வேதத்தில் பல பரிசுத்தவான்கள் இவ்வாறு ஆண்டவரின் வாக்குத்தத்தத்தை சொல்லி ஜெபித்திருக்கிறார்கள் அவர்களுக்கு தேவன் செவிகொடுத்தும் இருக்கிறார்.
 
    1. நெகேமியா  1:9. நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை
நினைத்தருளும்.
சங்கீதம் 74:20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்
   
எரேமியா 14:21 உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.
 
சங்கீதம் 119:49 நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
 
தேவனை முகமுகமாக அறிந்த மோசேயே இதுபோல் பலநேரம் தேவனுக்கு நினைப்பூட்டுவதுபோல் பேசியுள்ளார்.
   
    1. யாத 32: 13. உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.


    1. 14. அப்பொழுது 
கர்த்தர்
  1.  தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
 
கர்த்தருக்கு நினைத்தருள தெரியாதா? நாம் ஏன் நினைத்தருளும் என்று சொல்லி அவருக்கு ஞாபகமூடட  வேண்டும்  என கேட்க்க முடியாது.
 
 
காரணம், இப்படிபடட அநேக ஜெபங்களை கர்த்தர் கேட்டு பதிலளித்து இருக்கிறார்.
 
எனவே தவறு என்று சொல்பவர்கள் வாக்குத்தத்ததை சொல்லாமல் ஜெபித்துவிட்டு போகட்டும்.
 
வசனத்தை சொல்லி ஜெபிப்பதில் எந்த தவறும் இல்லை சிஸ்ட்டர்.  
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard