ஏசாயா 11 : 6 ... முதல் துக்கமில்லா எரிச்சல் பொறாமையில்லா ஒரு நிலையயை பற்றி சொல்லுகிறது.. இது வர போகிற காலத்தை குறித்தா? அதாவது இந்த உலகத்தில் சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு வரப்போகிற காலத்தை குறிக்கிறதா?
மற்றும் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "என் பரிசுத்த பர்வதமெங்கும்" என்று ஆண்டவர் எதை குறிப்பிடுகிறார்? பரலோகத்தையா? அல்லது சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு இருக்கும் உலகத்தை குறித்தா?
ஏசாயா 11 :9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வசனத்திலேயே கடைசியியல் "பூமி" என்கிற வார்த்தை வருகிறபடியால் அது நிச்சயமாக இந்த பூமியில் நடக்கப்போகும் காரியத்தை குறிக்கிறது என்பது எனது கருத்து,
"கர்த்தருடைய பரிசுத்த பர்வதம்" என்பது இந்த பூமிதான். இங்கு இருக்கும் சந்துருவை வெளியேற்றிய பிறகு பூமி முந்திய சீருக்கு திரும்பும்.
அங்கு தீங்கு செய்ய கேடு செய்ய ஆள இருக்காது எல்லோரும் கர்த்தரை அறிந்திருப்பார்கள் என்பதே.
எரேமியா 31:34இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
இவை எல்லாம் நடக்கும் முன் சத்துருவானவன் மனுஷர்களுள் தங்கும் அதிகாரத்தை இழந்து, பாதாளத்தில் அடைக்கப்பட வேண்டும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)