இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் ஒரு கிறிஸ்த்தவனா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
நான் ஒரு கிறிஸ்த்தவனா?
Permalink  
 


நாலைந்து பெண்கள் நடு ரோட்டில் போகும்போது 
அங்கு நிற்கும் ஆண்கள் எல்லாம் "ஆ" வென்று பார்க்கும்போது  
நாலுபேர் பார்ப்பதுபோல் நானும் சேர்ந்து பார்த்தால் 
நானொரு கிறிஸ்த்தவனா?
.
பொய் சொல்லேல்  வாழ்வதறிதென்று  பூவுலகே சொல்லும்போது 
மெய் பேச முனையாமல், உள்ளதை சொல்ல விளையாமல்  
கள்ளமான வார்த்தைகளை துணிந்து நானும் பேசிவந்தால்  
நானொரு கிறிஸ்த்தவனா?    
.
பணம் பணம் என்று  பாரினில் பலரும் ஓடும்போது 
பணம்தான் மாயபேயென்று இனம்கண்டுகொள்ளாமல்
பணத்தின் பின்னால் பதுங்கி  நானும் செல்வேனாகில்  
நானொரு கிறிஸ்த்தவனா? 
.
கூட்டமாக சேர்ந்து பலர் கும்மாளம் அடிக்கும்போது 
ஆட்டம்போடும் மனதோடு அங்கே நானும் ஓடிசென்று  
அவர்களோடு சேர்ந்து அதிகமாய் அலப்புவேனாகில்  
நானொரு கிறிஸ்த்தவனா?
.
எனக்காக ஜீவன் தந்த இயேசுவை நான் நோக்காமல் 
அவர் வழியில் நடக்காமல் ஆவியில் நான் ஜெபிக்காமல்  
பூமியின் கிரியைகளில் மூழ்கி நான் திளைத்தால்
நான் ஒரு கிறிஸ்தவனா? மனமே  நீ சொல்மனமே!
 


-- Edited by SUNDAR on Monday 30th of July 2012 09:34:44 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

SUNDAR wrote:
நாலைந்து பெண்கள் நடு ரோட்டில் போகும்போது 
அங்கு நிற்கும் ஆண்கள் எல்லாம் "ஆ" வென்று பார்க்கும்போது  
நாலுபேர் பார்ப்பதுபோல் நானும் சேர்ந்து பார்த்தால் 
நானொரு கிறிஸ்த்தவனா?
.


 நல்ல வரிகள்

ஜீவன் தந்த இயேசுவை மறந்து
பெண்களை பார்த்து மயங்கி நின்று
கள்ளவார்த்தைகளை துணிந்து பேசி
பணத்தின் பின்னால் பதுங்கி சென்று
கூட்டத்தோடு கும்மாளம் அடிக்கும் போது......

மனமே நீ ஏன் எச்சரிக்க மறந்தாய்
நியாயத்தீர்ப்பு அருகில் உண்டு என்று



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard