தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் சுத்தர் எழுதிய கவிதை மீள்பதிவு
விரக்தியின் விளிம்பில் நிற்கிறேன் நான் வீணான வாழ்க்கையை வெறுக்கிறேன் நான் அனுதினம் நெருக்கும் ஆயிரம் பிரச்சனையால் அமைதியே இல்லாமல் தவிக்கிறேன் நான்!
சுமைகளை சுமந்து நான் இளைத்துவிட்டேன் சுகமான வாழ்வை என்றோ தொலைத்துவிட்டேன் மரணம் ஒன்றே முடிவு என்று நெருங்கிவிட்டேன் மாய்த்துகொள்ள நானும் துணிந்துவிட்டேன்
எவ்வளவோ முயன்றும் வாழ வழியுமில்லை என்னை விசாரிக்க இங்கு யாரும் இல்லை எந்த சாமியும் என்னை காக்கவில்லை யாரை நம்பியும் எந்த பயனுமில்லை
என்னை தேற்றுவார் இங்கு யாருண்டு? என்று அக்கலாய்க்கும் அருமை அன்பனே! உன்னை விசாரிக்கும் ஒருவர் உண்டு! உனக்காய் பரிதபிக்கும் அவரே ஆண்டவர் இயேசு!
தன்னையே உனக்காய் தந்தவர் அவர் தரணியை காத்திட உதித்தவர் அவர் பாவத்தின் கூரை முறித்தவர் அவர் சாப சங்கிலியை தகர்த்தவர் அவர்
மரணக்கட்டுகளை அவிழ்த்தவர் அவர் மனதுருக்கம் நிறைத்த மகத்தானவர் அவர் அரணான கோட்டைபோல் காப்பவர் அவர் ஆபத்து காலத்தில் அடைக்கலம் அவர்
கசந்த வாழ்வை அவர் மதுரமாகுவார் கண்ணீரெல்லாம் தன் கரத்தாலே துடைப்பார் புதியதோர் வாழ்வை உனக்கு தந்திடுவார் புன்னகை பூக்கள் மீண்டும் மலர செய்வார்
வாசல்படியில் நின்றே உன்னை பார்க்கிறார் வரலாமா என்றே உன் உள்ளத்திடம் கேட்கிறார் ஏற்றுக்கொண்டால் போதும் எல்லாமே புதிதாகும் விட்டுவிட்டால் உனக்கு விரக்திதான் மிஞ்சும்
என்னை நோக்கி பாரென்று ஏக்கத்தோடு கெஞ்சும் என்நேசர் இயேசுவிடம் ஓடிவா எனதருமை அன்பனே அன்பின் காரத்தால் அணைத்துன்னை ஏற்று ஆறுதல் தந்தே தினம் தேற்றுவார் உன்னை!