பரிசுத்த வேதாகமம் என்னும் பைபிளில் யோவான் எழுதிய சுவுஷேச்த்தில் இயேசு இவ்வாறு குறிப்பிடுவதாக உள்ளது:
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;
இந்த இரு வசனத்திலும் மிக தெளிவாக இயேசுவின் வார்த்தையை ஒருவர் கைகொண்டால் அவர் மரணத்தை காண்பதில்லை என்று இயேசு கூறுவதாக அமர்ந்துள்ளது.
இயேசுவின் மரணத்துக்கு பிறகு சுமார் 1975௦௦௦ வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எத்தனையோபேர் இயேசுவை உயிருக்குயிராய் பின்பற்றிய சரித்திரத்தை கேட்டிருக்கிறோம். இதில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு மரித்திருக்கின்றனர் பலர் சாதாரண மரணத்தை அடைந்துள்ளனர் ஆனால் இன்று வரை யாரும் மரிக்காமல் வாழ்ந்ததாக நாம் கேள்விப்படவில்லை.
எல்லோரும் மரித்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிறகு வசனம் இவ்வாறு கூற காரணம் என்ன?
இயேசு தவறாக சொல்லிவிட்டாரா? அல்லது மனிதர்கள் யாரும் அவர் வார்த்தையை சரியாக கைகொள்ள வில்லையா?
விபரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தன் மரணத்தை யாரும் கானமுடியாது என்று வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளாம் ஆனால் மரணத்தையே ருசிக்காத மனிதன் இருக்கவே முடியாது.
சகோதரர் அவர்களே!
நான் வசனத்தை ஆதாரம்காட்டிதான் பதிவிட்டிருக்கிறேன். அது இருக்கமுடியாது என எப்படி நீஙகள் கூற முடியும். இயேசு இல்லாத நடக்க முடியாத ஒன்றயா சொன்னார்?
மேலும்
"நீதியின் பாதயில் ஜீவன் உண்டு அஙகே மரணம் இல்லை" எனவும் "தேவனாகிய கர்த்தரால் மரண்த்துக்கு நீன்கும் வழிகளும் உண்டு"
எனவும் வேதம் பல இடஙகலில் போதிக்கிறடதே அதெல்லாம் எப்படி நடக்கும்?
vedamanavan wrote: ////நீ சாகவே சாவாய்" என்று தேவன் சொன்னது அனைவரின் வாழ்விலும் நடந்தே தீற வேண்டிய ஒரு விஷயம். மற்றபடி, மாற்று கருத்துகளுக்கு பஞ்சமே இல்லை.////
ஆம்! நிச்சயம் நடக்கும் ஆனால் சாகவே சாவாய் என்ற தேவனே "பிழைக்கவே பிழைப்பாய்" என்வும் சொல்லியிருக்கிரார் அதுவும் நிச்சயம் நடக்குமல்லவா? அது இவ்வசனஙளில் முலம் நிரைவேறலாம் அல்லவா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். "
இந்த வசனம் உயிர்த்தெழுதலுக்கு பிறகு நடைபெறும் காரியம். இயேசு கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழுபவர்கள் அவர் தரித்துக்கொண்ட சாவாமையை தரித்துக்கொள்வார்கள் என்பதை விளக்க தான் இயேசு கிறிஸ்து இப்படி சொல்லியிருக்கிறார். இல்லாவிட்டால் பவுல் போன்ற வேதத்தில் சொல்லப்பட்ட உண்மையான ஊழியக்காரர்களோ, அப்போஸ்தலர்களோ மரிக்க வேண்டியதே இல்லையே. இப்படி தேவனின் சாயலில் உயிர்த்தெழுபவருக்கு கொடுக்கப்பட்ட வசனம் தான் இந்த வசனம்.
சுந்தரின் அடுத்த வசனம்: "யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; "
இந்த வசனம் இயேசு கிறிஸ்துவை தெரியாமல் மரித்த, தெரிந்து பின் பற்றாமல் மரித்த கோடா கோடி ஜனங்கள் உயிர்த்தெழுந்த பிறகு பூமில் நடக்கும் காரியமாகும். உயிர்த்தெழுந்த பின் ஏசா 9:11ல் சொல்லப்ப்[அட்ட படி, பூமி தேவனை அறிகிற அறிவால் நிறம்பியிருக்கும் என்று சொல்லப்பட்டது போல் நடந்து முடிந்த பின் அவர்களுக்கும் மரணம் இல்லை.
இந்த பரலோக நிலை, பூமிக்குரிய நிலை, இரண்டிலும் மரணம் இல்லை, ஆனால் வித்தியாசம் உண்டு, பரலோகத்தில் இருப்பவர்கள், இயேசு கிறிஸ்துவின் சாயலில் இருப்பார்கள், பூமியில் உயிர்த்தெழுபவர்கள் அந்த தகுதியை இழந்தவர்களாக இருப்பார்கள்.
ஒரு முறை மரித்து அதற்கு பின்பு தான் இந்த வசனங்கள் நிறவேறுமெ தவிர, மரணத்தையே ருசிக்காத மனிதன் இருக்க முடியாது. இதற்காகத்தான் இயேசு கிறிஸ்து "மரித்து" உயிர்த்தெழுந்தாரே.
"யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். "
இந்த வசனம் உயிர்த்தெழுதலுக்கு பிறகு நடைபெறும் காரியம். . இல்லாவிட்டால் பவுல் போன்ற வேதத்தில் சொல்லப்பட்ட உண்மையான ஊழியக்காரர்களோ, அப்போஸ்தலர்களோ மரிக்க வேண்டியதே இல்லையே. சுந்தரின் அடுத்த வசனம்: "யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; "
இந்த வசனம் இயேசு கிறிஸ்துவை தெரியாமல் மரித்த, தெரிந்து பின் பற்றாமல் மரித்த கோடா கோடி ஜனங்கள் உயிர்த்தெழுந்த பிறகு பூமில் நடக்கும் காரியமாகும்.
சகோதரரே நான் "மரணமில்லாத வாழ்க்கைக்கு வேதம் வழி சொல்கிறது" என்பதை வலியுறுத்த எத்தனை வசனத்தை உதாரணம் காட்டினாலும் நீங்கள், அது இயேசுவுக்கு இது இஸ்ரவேலருக்கு அது ரோமானியருக்கு இது உயிர்த்தெழுதலுக்கு பிறகு இது ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகு என்று சொல்லிவிடுவீர்கள். ஏனெனில் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்கும் சரியாக தெரியாதல்லவா?
இல்லை என்றால் மொழிபெயர்ப்பு பிழை என்றாவது சொல்லிவிடுவீர்கள். அதாவது உங்கள் கருத்துக்கு ஏற்றாற்போல் வேதம் இருக்கவேண்டும் சிறிது மாற்றம் இருந்தால் அது எங்கோ பிழை நடந்துவிட்டது என்ற கருத்தில் நோக்கினால் அது அப்படித்தான் தோன்றும்.
பவுல் மரித்தார் மற்றும் எல்லோரும் மரிக்கிறார்கள் என்பதால் எல்லோரும் மரித்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நடைமுறை என்னவென்பதை பார்க்காதீர்கள் வேதம் என்ன சொல்கிரதேன்பதை பாருங்கள்
வேதம் தெளிவாக சொல்கிறது
"தேவனாகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு" என்று. அது எந்த மரணத்தை குறிக்கிறது என்று எங்கும் விளக்கம் இல்லை எனவே நீங்களாக அது உயிர்தெழுந்த பிறகு வரும் மரணம் என்று குறிப்பிட்டால் அது ஏற்புடையது அல்ல. இரண்டாம் மரணத்தை "இரண்டாம் மரணம்" என்று வேதம் தெளிவாக சொல்கிறேது. வெறும் மரணம் என்பது உலகில் நாம் மரணம் என்று எதை சொல்கிறோமோ அதைதான் குறிக்கும்.
எனவே "அவர்களை மரணத்துக்கு நீக்கி விடுவிப்பேன்" என்றும் " நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அங்கே மரணம் இல்லை" என்றும் வசனம் சொன்னால் அது உலக மரணத்தைதான் குறிக்கும்!
அது எப்படி நிறைவேறும் என்பதையும் வேதம் தெளிவாக சொல்கிறது.
பவுல் அவர்கள் 1 தெசே 4ல் இப்படி சொல்கிறார்
17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்" . இதில் உயிரோடு இருக்கும் நாமும் எடுத்துக்கொள்ளபடுவோம் என்று சொல்வது மரித்தா? அல்லது மரிக்காமலா? என்று பார்த்தால் கீழ் கண்ட வசனம் இப்படி சொல்கிறது . 53 For our dying bodies must be transformed into bodies that will never die
அதாவது நமது உடம்பு சாகாமையை தரித்துகொள்ளும் என்று. இங்கு என்ன நிகழும்? நமது மாமிசம் அப்படியே கீழே விழுந்து விடுமா, என்ன? இல்லை, அது அப்படியே சாகாத உடம்பாக மாறிவிடும்! என்பது தான் எனது வேதம் சொல்லும் கருத்து! அதாவது மனிதர்கள் சாவதுபோல சாவதில்லை ஆனால் நமது சரீரம் சாகாத உடம்பாக மாறிவிடும என்று நான் சொல்கிறேன்.
ஓன்று மாமிசத்தில் மரித்தவர்கள் சாகாத உடம்புடன் எழுந்திருப்பார்கள். இன்னொன்று உயிரோடு இருக்கும் சிலர் சாகாமலேயே சாகாத உடம்பாய் மாறிவிடுவேன். உங்கள் கருத்துக்களை கொஞ்சமும் மாற்ற விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள். முடியாது, நடக்காது என்று சொல்பவர்களுக்கு அது நிச்சயம் நடக்காது. நீங்கள் விசுவாசித்த படிதானே உங்களுக்கு நடக்கும்!
-- Edited by SUNDAR on Saturday 23rd of January 2010 04:43:00 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)