என்னை பொறுத்தவரை "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவரில் வார்த்தைப்படி எந்த மதம் சொல்லும் கருத்தானாலும் அதை ஆராய்ந்தரித்து நல்லவைகளை எடுத்துக்கொள்வது மேன்மை என்று கருதுபவன்.
இவ்வாறு திருக்குரானை ஆராய்ந்தபோது எனக்கு எழுந்த ஒரு பெரிய சந்தேகத்தை இங்கு பதிகிறேன். இதற்க்கு தகுந்த பதில் தெரிந்தவர்கள் கொஞ்சம் எனக்கு விளக்குங்களேன்!
பைபிள் சொல்லம் வசனப்படி "தேவன் தன் ஒரே பேரான குமரனை விசுவசிப்பவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை (இயேசுவை) தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்றும்,
பாதாள, நரகஅக்கினியில் இருந்து மனிதனை தப்புவிக்கவே இயேசு மனிதனாக பிறந்து நமது பாவத்துக்காக மரித்தார் என்றும் எடுத்துரைத்து, அன்பின் எல்லையாகிய அடுத்தவர்களுக்காக தன் ஜீவனையே கொடுக்கும் பெரியதோர் அன்பை விளக்குகிறது இதை ஏற்பதில் சிரமம் இல்லை!
ஆனால் திருக்குர்ரான் 7வது அத்யாயம் 179வது வசனம் இப்படி சொல்கிறது.
"நிச்சயமாக நாம் ஜிங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்துகேன்றே படைத்துள்ளோம்: அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்........."
இப்படி ஒரு வசனத்தை இறைவன் சொல்வதாக திருக்குரானில் வாசிக்க நேர்ந்தது.
அதாவது இறைவன் படைக்கும் போதே அநேகரை நரகத்துக்காக படைத்துவிட்டார். அத்தோடு இடுகிறார் "இவர்களுக்கு இதயம் உண்டு ஆனால் அவற்றை கொண்டு உணர்ந்து நல்லுணர்வே பெற மாட்டர்கள்" என்று சாபமும் இடுகிறார். இப்படி இறைவனே படைத்து சாபம் விட்டபிறகு அவர்கள் நரகம் போவது நிச்சயத்திலும் நிச்சயம் அல்லவா?
இறைவன் ஏன் சில மனிதர்களை நரகத்துக்காக படைத்தார்?
இந்த கேள்வியை தமிழ் இஸ்லாம் தளத்தில் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில் "இறைவன் நல்லது எது கேட்டது என்று சொல்லி விட்டார் அதை உணர்ந்து நடக்காதவர்கள் நரகம் போவார்கள்" என்பதுதான்.
ஆனால் இந்த பதில் அந்த வசனத்துக்கு ஏற்ப்புடைய ஒன்றா?
அதாவது மேல் கண்ட வசனத்தில் இரண்டு காரியம் அடங்கியுள்ளது
1. மனிதனை இறைவன் படைத்தல் 2. மனிதன் தவறு செய்து நரகம் போகுதல்
இரண்டில் முதலில் செய்தது யார்?
இறைவன் மனிதர்களை படைத்ததுதான்
அவர் நிச்சயமாகவே நரகத்துகேன்று மனிதர்களை படைத்துவிட்டார். பிறகு மனிதன் அவர் படைத்தது போலவே தவறு செய்து நரகம் போகிறான் இதில் மனிதனின் தவறு என்ன இருக்கிறது
நான் கேட்கும் கேள்வி சர்வவல்ல எல்லோரையும் படைத்த இறைவனே தான் படைக்கும் போது "நிச்சயமாக இவன் நரகத்துக்குத்தான் போவான்" என்ற நல்ல எண்ணத்தோடு படைத்துவிட்டால் பிறகு யார் அவர்களை காப்பாத்த முடியும்? அவனால் எப்படி உணர்ந்து மனம் திரும்ப முடியும்?
நரகத்துக்கேன்றே மனிதர்களை படைக்கும் ஒரு கொடியவரா இறைவன்? இறைவன் எல்லோரையும்விட மிகுந்த இரக்கமுள்ளவர் அவர் யாரையும் நரகம்போகவேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.
எது உண்மை அறிந்தவர் விளக்கவும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)