இறை மார்க்கம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை குழப்பம் நிறைந்ததாகவும், எளிதில் புரியாத ஒன்றாகவும் பல்வேறு பிரிவுகள் நிறைந்ததாகவும் காணப்பட்டுகிறது!
உண்மையான மார்க்கம் எது என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிராகமே இருக்கிறது. ஒவ்வொரு மதமும் பிற மதங்கள் மீது எண்ணற்ற குறைகளை கூறிக்கொண்டு இருக்கின்றன. சகோதர மதங்கள் என்று சொல்லப்படும் கிறிஸ்த்தவ, யூத, இஸ்லாம் மதங்களுக்கிடையே கூட போட்டி விரோதம் மற்றும் எதிர் கருத்துக்கள் ஏராளம் நிறைந்துவிட்டன!
மேலும் தற்காலங்களில் அறிவியலின் அபார வளர்ச்சியின் காரணமாக இறைவன் இல்லை என்று வாதிடும் அநேகர் புதிதாக உலகெங்கிலும் உருவாகி வளர்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே!
கடவுளைபற்றி பேசினாலே பிடிக்காத பலர் கடவுள் மேல் மிகுந்த கோபத்தோடு இருப்பவர் அவர் கிடைத்தால் பல்வேறு கேள்விகள் கேட்க துடிக்கும் பலர் என்று, இன்று உலகம் எங்கிலும் இறை எதிர்ப்பு என்பது மிகவும் வலுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே!
இறைவனுக்கு எவ்வளவுதான் எதிர்ப்பாளிகள் இருந்தாலும் இறைவன் மீது எல்லையற்ற அன்புகொண்ட, ஆன்மீகத்தின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டுள்ள அனேக அன்பர்களும் இறையடியார்களும் உலகெங்கும் இன்றும் வாழ்ந்துவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை!
இறைவனின் பெருமை பற்றி பேச பேச நம்மில் எல்லையில்லா இன்பம் பெருக்கெடுத்து ஓடுவதை உணர முடியும்!
இறைவழியை பொறுத்தவரை இவ்வுலகில் பதில் இல்லாத கேள்வி என்று ஒன்றுமே இல்லை!
எல்லா கேள்விக்கும் பதிலை இறைவன் யாரவது ஒருவருக்கு நிச்சயம் தெரிவித்திருப்பார்! எதையும் நடுநிலையுடன் ஆராயும்போது எல்லா கேள்வுக்கும் பதிலை நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்!
என்னை பொறுத்தவரை இறைவன் என்பவர் ஒருவரே! காலத்துக்கு தகுந்தால்போல் இறைவன் தனது கட்டளைகளில் சில மாற்றங்கள் செய்தார் ஆனால் மனிதன் ஒவ்வொன்றையும் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு புதிய மதமாக்கிவிட்டான் அவ்வளவுதான்!
ஒவ்வொரு மதத்தில் உள்ள கருத்துக்களையும் ஊன்றி ஆராய்வதன் மூலம் உண்மையை அறிய முடியும் என்றே நான் கருதுகிறேன்! எனவே இங்கு வரும் ஆன்மீக அன்பர்கள் தயவு செய்து தங்கள் எதிர்ப்புகளையோ அல்லது தாங்கள் அறிந்தவற்றயோ அல்லது தங்கள் கேள்விகளையோ பதியும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
முடிந்த அளவு இறைவனிடம் மன்றாடி அதற்க்கு விடை காண முயற்சிக்கலாம்!