ஒரு கிறிஸ்த்தவ சபையில் ஆராதனை வேளை முடிந்து எல்லோரும் வெளியே போய்கொண்டு இருந்தனர். ஆனால் ஒரே ஒரு அம்மா மட்டும் வீட்டுக்கு கிளம்பாமல் தனியே நின்று பாரத்துடன் ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் போனபின்னும் அந்த அம்மா கிளம்பியபாடு இல்லை! மிகவும் மன்றாடி பிராத்தனை செய்துகொண்டு இருந்தார்கள்.
சபை உழியர்கள் சபையை மூடுவதர்க்காக காத்திருந்தனர். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது பொறுமையிழந்த சபையின் பொருப்புதாரர் அந்த அம்மாவின் அவர்கள் அருகில் சென்று அவர்கள் என்ன ஜெபிக்கிறார்கள் என்பதை கேட்டபோது, அந்த அம்மா "எடுத்து போடும் கர்த்தாவே, எடுத்து போடும் கர்த்தாவே" என்று ஒரே வார்த்தைகளை மட்டும் சொல்லி ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள்.
உடனே அந்த உழியர் மற்ற சகஉழியர்களிடம் சென்று, அந்த அம்மாவுக்கு எதோ மிகபெரிய வேதனை அல்லது பிரச்சனை இருக்கும்போல் இருக்கிறது, இப்படி "எடுத்து போடும் கர்த்தாவே" என்று சொல்லி தொடர்ந்து ஜெபம் பண்ணுகிறார்கள், வாருங்கள் நாம் எல்லோரும் போய் அவர்களுக்காக ஜெபிப்போம் என்று அருகில் வந்து, அந்த அம்மாவிடம் "அம்மா உங்கள் பிரச்சனை என்ன? எந்த வேதனையை எடுத்து போட சொல்கிறீர்கள்" நாங்களும் சேர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிரோன் என்று கேட்டார்கள்.
அந்த அம்மாள் சொன்னது
"எனது இடுப்பில் மூக்குபொடி டப்பி வைத்துள்ளேன் அதை எடுத்து போடும்படி கர்த்தரிடம் தொடர்ந்து ஜெபிக்கிறேன்" என்றார்களாம்.
அன்பானவர்களே இதேபோல் தான் இன்று அனேக மக்கள் உலகில் வாழ்கின்றனர்! பாவத்தை விட்டு விலக மனம் இல்லாமல், பாவத்தை தூக்கி தூரபோட மனதில்லாமல், இயேசு பாவத்துக்காக மரித்துவிட்டார் இனி நான் எதற்கும் கீழ்படிந்து நடக்கவேண்டிய தேவையில்லை, பாவம் செய்யாத பரிசுத்தர் எவரும் இல்லை, எனவே இறைவனிடம் வேண்டிக்கொண்டால் போதும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் அநேகர் கிறிஸ்த்தவ வாழ்க்கை வாழ்கின்றனர்
அனால் அது முற்றிலும் தவறு
"ஒருவன் அன்பாயிருந்தால் என் வார்த்தைகளை கைகொள்வான்" என்பது இயேசுவின் வாக்கு! இறைவன் நம்மை கைக்கொண்டு வாழ சொன்ன வாழ்க்கை நெறிமுறைகளின்படி வாழ முடியாது என்றும் பொய் பேசாமல்/ திருடாமல் இருக்க முடியாது என்றும் எதிர்மறை எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் எந்த பயனும் இல்லை
முதலில் மூக்கு பொடி டப்பியாகிய விடமுடியாத பாவத்தை நீங்களே வெளியே தூக்கிபோடுங்கள், பிறகு "இறைவனே எனக்கு மீண்டும் அதை தொடாமல் இருக்க பெலன் தாருங்கள்" என்று பிரார்த்தனை செய்யுங்கள் அப்பொழுது இறைவன் உங்களுக்கு அந்த பாவத்தை மேற்கொள்ள பெலன் தருவார். மற்றபடி அந்த மூக்குபொடி டப்பியாகிய பாவத்தை கர்த்தர் வந்து எடுத்துபோடுவார் என்று எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்து போவது நிச்சயம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)