"சாயங்காலம் துணி துவைக்க கூடாது, இரவில் குப்பை கொட்ட கூடாது, இரவில் நகம் வெட்ட கூடாது" போன்ற பல்வேறு சம்பிரதாய செயல் ஏறக்குறைய எல்லோராலும் பின்பற்றப்படுகிறது!
ஒரு முறை நாங்கள் குடித்தனம் இருந்த வீட்டில், எனக்கு நேரம்தான் கொஞ்சம் பிரீ கிடப்பதால் இரவில் குப்பை கொட்டுவது வழக்கம். ஒருநாள் அந்த வீட்டில் ஒரு வயதானவர் இறந்துவிட்டார், உடனே அந்த வீட்டுக்காரர் "இரவில் நீங்கள் குப்பை கொட்டியதால்தான் இங்கு சாவு வந்தது" என்று சொல்லி வேறு எங்குமே சாவு இல்லாததுபோல் சண்டைக்கு வந்துவிட்டார்.
இதுபற்றி விபரம் அறிய ஓரிடத்தில் விசாரித்ததற்கு அவர்கள் "இரவில் துணி துவைத்தல் அழுக்கு போகாது எனவேதான் இந்த சம்பிரதாயம் வந்தது" என்று கூறினார்கள்.
ஆனால் அது சரியான காரணமா?
சாயங்காலம் துணி துவைப்பதை எந்த வீட்டுக்காரரும் அனுமதிப்பது இல்லை. அழுக்கு போகவில்லை என்றாலோ துணி காயவில்லை என்றாலோ அதனால் வீட்டுகாரருக்கு என்ன நஷ்டம்? துணி துவைப்பவருக்கல்லவா துன்பம்! வீட்டு காரர்களுக்கு நமது வீட்டில் உள்ளவர்கள் கஷ்டப்படகூடாது என்ற அக்கறையா? அவர்களுக்கு கோபம் ஏன் வருகிறது?
இந்த கொள்கைகள் எல்லாம் எங்கிருந்து வந்தது? ஏதாவது வேதங்களில் அப்படி எதுவும் இருக்கிறதா தெரிந்தால் தெரியப்படுத்தவும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எங்கள் வீட்டிலும் இது போல நிறைய சொல்வார்கள். எனக்கு இவற்றில் சிறுவயதிலேயே உடன்பாடு இல்லை. இந்து வேதங்களில் அப்படி எதுவும் இருக்கிறதா எனவும் தெரியவில்லை..
இவைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப் பட்டவை. ஆயினும், இவைகளுக்குப்பின் அறிவியற்பூர்வமான சில காரணங்கள் இருக்கின்றன. பலசெயல்கள் மூட நம்பிக்கையாகவும் இருக்கின்றன.
இவற்றைப் பிரித்துணர்த்துவது ஒரு நாளில் நடக்கும் வேலையல்ல..
ஆயினும் சகோதரர்கள் இவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக கூறினால் சமுதாய விழிப்புணர்வுக்கு உதவும்..
சமீபத்தில் நான் குடும்பத்தோடு ஊருக்கு போயிருந்த போது, பிரயாணத்தில் சாப்பிட தோசை செய்து கொண்டு சென்றிருந்தோம். அதில் சில தோசைகள் மீந்துவிட்டதால் அதை அப்படியே ஊருக்கு கொண்டுபோய் விட்டோம்.
எனது தாயார் அதற்காக எங்களை கடிந்துகொண்டார்கள்
ஏனெனில்
இட்டிலியை வேண்டுமானால் எந்த வீட்டுக்கும் கொண்டு போகலாமாம், தோசையை அவ்வாறு தனது வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு எடுத்து செல்லகூடாதாம்.
அதற்க்கு சரியான காரணம் தெரியவில்லை, எங்கிருந்து வந்ததோ இந்த சம்பிரதாயம்?!