Anbu wrotes: ////எனக்குத் தெரிந்தவரை யோபு மட்டுமே வியாதியால் சோதிக்கப்பட்டார்///
ஐயா யோபுவுக்கு வந்ததுபோல் வியாதி யாருக்கும் வரவில்லை என்பது சரி! ஆனால் ஆபிரகாமுக்கும் வந்ததுபோல் பெற்ற பிள்ளையை பலியிடசொல்லும் சோதனையும் யோசேப்புக்கு வந்த எகிப்த்தின் சிறை தண்டனயும்கூட யாருக்கும் வரவில்லைதான். ஒவ்வொருவரின் பாடுகளும் தனித்தன்மை வாய்ந்தது என்றே நான் கூற வருகிறேன்.
Anbu wrotes: ///மனிதனின் பாவம்தான் அவனது ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் எனும் எண்ணம் உங்கள் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது. எனவேதான் எப்படியாவது யோபுவின் செயலில் குற்றம்பிடிக்க முயலுகிறீர்கள்.////
எனது நோக்கம் அதுவல்ல சகோதரரே. தேவன் எவரையும் நியாயமான காரணமின்றி வேதனையால் சோதிப்பது இல்லை என்பதுதான் என் மனதில் வலுவாக பதிந்துள்ள கருத்து. அதற்க்கு ஆதாரம கீழ்க்கண்ட வசனம்தான்.
13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. 14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
அதில் மொழிபெயர்ப்பு பிழை என்று கூறிவிட்டீர்கள். எனக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதனாய் பிறந்தவன் எல்லோரும் பாவத்தில் பிறக்கிறான் பாவமில்லாதவன் எவனும் இல்லை. அவனுக்கு எதாவது ஒன்றின்மேல் இச்சை நிச்சயம் இருக்கும். அந்த இச்சையே அவன் சோதனைக்குள்ளாக வழி செய்கிறது இங்கு யோபு பல விஷயத்தில் உத்தமனாக இருக்கிறார் ஆனால் அவன் அனேக சம்பத்துக்களை செர்த்துவைதிருநததால் அதன் மேல் அவனுக்கு இச்சை இருந்திருக்கலாம் அல்லது இருக்கிறதா என்பதை அறிய அதன் அடிப்படையிலேயே சோதனை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன்.
தேவன் யாரையும் சோதிப்பது இல்லை என்பது எனது வாதம் அல்ல! அவர் சோதிப்பதற்கு ஒரு அடிப்படை நீதியான காரணம் இருக்கும் என்பதுதான் எனது வாதம். தங்க நகைகளை வியாபாரியிடம் கொடுத்தால் நல்ல அனுபவம் உள்ள வியாபாரி சில நகைகளை பார்த்தவுடன் அப்படியே எடுத்துகொள்வார். சில நகைகளை கல்லை எடுத்து உரசிப்பார்ப்பார். அதுபோலத்தான் சந்தேகம் வந்தால்தான் சோதனை.
Anbu wrotes: /////தேவனுடைய ஆசீர்வாதத்தால் அவரது மந்தை பெருகியது, வேலைக்காரர்கள் பெருகினார்கள், செல்வாக்கு பெருகியது என்பதே யோபுவைக் குறித்து வேதாகமம் கூறும் தகவல். மற்றபடி அவர் மிகுந்த ஆஸ்தியை சேர்த்து வைத்திருந்தார் என்பதற்கு ஆதாரமான வசனம் எதுவும் இல்லை////.
அதாவது வசனத்தை இப்படி இருக்கலாம் என்று அனுமானித்து இல்லை என்பதற்கு வசனம் வேண்டும் என்று கேட்டால் எப்படி?
அவனுக்கு 7000௦ ஆடுகள் இருந்தன ஐநூறு ஏர்மாடுகள் இருந்தன
இன்றைய மதிப்புக்கு ஒரு ஆடு 1000௦௦௦ ரூபாய் என்றாலும் 7000x1000௦௦௦ = 70 லட்சம் ரூபாய் ஆகிறது ௦
ஏர்மாடு ஒன்றின் விலை 2000 x 500 = 10 லட்சம் ரூபாய் ஆகிறது ௦
இது ஒரு சாதாரண தொகையா?இன்னும் ஒட்டகம் கழுதை எல்லாம்.
மேலும் ஐநூறு ஏற்மாடுகளையும் வேலைக்காரகளையம் வைத்து அவர் வாடகைக்கா விட்டிருப்பார்? நிச்சயம் அவருக்கு அனேக நிலம் இருந்திருக்கும் அப்படியே வாடகைக்கு விட்டிருந்தாலும் ஒருநாள் வருமானம் எவ்வளவு இருக்கும். எனவே அவனுக்கு விலைமதிப்புள்ள பொருட்கள் இருந்திருக்கிறது அதன் பெயர் சொத்துதான்.
Anbu wrotes: //////ஆனால், மத்தேயு 19-ல் கூறப்படும் ஐசுவரிய வாலிபனின் ஆஸ்தியைக் குறிக்கின்ற மூலபாஷை வார்த்தையின் அர்த்தம், estate என அகராதி கூறுகிறது. அதாவது அந்த வாலிபனின் ஆஸ்தி ஏராளமான நிலபுலங்களாகும். அந்த நிலபுலங்கள் யாருக்கும் பயன்படாத வகையில் இருந்திருக்கவேண்டும். எனவேதான் அவற்றை விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி இயேசு சொன்னார்.////
அதாவது வேதம் எந்த ஆஸ்தியை பற்றி சொல்கிறதோ அந்த ஆஸ்தியை மட்டும் கொடுத்துவிடால் போதும், மற்றபடி வேதம் அந்த காலத்தில் சொல்லாத விலையுயர்ந்த பிளாட்டினம் நகை வாங்கி வைத்தாலோ அல்லது பங்கு பத்திரங்கள் வாங்கி வைத்தாலோ அது தவறாகாது அப்படியா?
Anbu wrotes: ////யோபுவைப் பொறுத்தவரை அவர் தரித்திரர் மீது கரிசனையாயிருந்தார். தனது மந்தையின் பெருக்கத்தால் கிடைத்த பலன்கள் மூலம் அவர் தரித்திரர்களை போஷித்தார். எனவே யோபுவின் ஆஸ்தியையும் (மந்தைப் பெருக்கம்) ஐசுவரிய வாலிபனின் ஆஸ்தியையும் (நிலபுலங்கள்) ஒப்பிடுவது சரியல்ல///
ஐஸ்வர்ய வாலிபன் அப்படி செய்யவில்லை என்று வேதம் எங்கும் சொல்லவில்லையே. அப்படி அவன் தவறு செய்திருந்தால் இயேசு அவனிடம் நீ தரித்திரரை நன்றாக கவனிக்கவேண்டும் இல்லை என்றால் எல்லாவற்றையும் விற்று கொடுக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும். ஆனால் இயேசு அவன்மீது வேறு எந்த குறையும் சொல்லவில்லையே!
Anbu wrotes: ////தனக்கு தேவனால் கிடைத்த ஆசீர்வாதத்தின் பலன்களை எளியோருக்காக யோபு பயன்படுத்திக் கொண்டேவந்தார். யோபுவின் ஆஸ்தி சாத்தானால் வந்ததுமல்ல, அந்த ஆஸ்தியை அவர் தனக்காக ஒதுக்கி அல்லது சேர்த்து வைக்கவுமில்லை////
"யோபுவுக்கு இதெல்லாம் இருந்தன" "அவனது சம்பத்து பெருகிற்று" என்ற வார்த்தைகள் அவனிடம் சேர்ந்த செல்வத்தை குறிக்கவில்லையா? அது அவனுடையது என்று எண்ணாமல் எல்லாவற்றையும் வேலைக்காரருக்கு எழுதி கொடுத்திருந்தால் "அவனுக்கு இருந்தது" என்று வேதம் குறிப்பிடாது! அல்லது அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் எளியவருக்கு கொடுத்திருந்தான் என்று நிச்சயம் குறிப்பிட்டிருக்கும்.
sundar wrote: //யோபு "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று கூறுவதை பார்த்தால், ஐயோ எனக்குள்ள எல்லாம் ஒருநாள் போய்விடுமோ என்று பயந்துகொண்டே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதல்லவா?// Anbu wrotes: தன் குமாரர்கள் பாவம் செய்திருக்கக்கூடும் அதன் விளைவாக ஏதேனும் ஆபத்து நேரக்கூடும் என்பதே யோபுவின் பயம் (யோபு 1:4,5).////
அதுவும் ஒரு பயம் அவனுக்கு இருந்ததுதான். ஆனால் அதைதான் இந்த வசனம் குறிப்பிடுகிறது என்பதை எப்படி சொல்கிறீர்கள்?
"நான் பயந்த காரியம் எனக்கு நேர்ந்தது" என்று யோபு சொல்கிறார். அவன் குமாரர் பாவம் செய்துவிட்டார்கள் என்றா வேதம் கூறுகிறது?
அவருக்கு நேரிட்ட காரியம் என்ன என்று வேதம் சொல்கிறது? "எல்லா செல்வமும் போனது மற்றும் துன்பம் வந்தது" அப்படிஎன்றால் இதற்குத்தான் அவர் பயந்திருப்பார் என்றுதானே பொருள் கொள்ளமுடியும்?
Anbu wrotes: ///யோபுவின் ஒவ்வொரு செயலும், நீதி நியாயத்தை நிதானிக்கும் அவரது சிந்தைக்கு வலுவூட்டுவதாகத்தான் உள்ளது. ஆனால் அவற்றை அவருக்குப் பாதகமானதாக நீங்கள் கருதுகிறீர்கள்///
யோபுவை குற்றவாளியாக தீர்ப்பது எனது நோக்கமல்ல தேவன் மகாநீதிபரர் நியாயமான அடிப்படை காரணமின்றி யாரையும் சோதனைகாரன் கையில் ஒப்புகொடுக்கமாட்டர் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.
Anbu wrotes: ////மனிதனின் பாவம்தான் அவனது ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் எனும் எண்ணம் உங்கள் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது..////
ஆம் ஐயா! இந்த எண்ணத்தில் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன். முதல் முதலில் மனிதனுக்கு துன்பம் வந்தது பாவத்தால்தான். தேவனின் வார்த்தையை மீறி ஆதாம் புசித்த கனியால்தான் துன்பம் என்பதே உலகினுள் புகுந்தது. அதனால் தொடர்ந்து வரும் எல்லா துன்பங்களுக்கும் நமது பாவமே காரணம்! துன்பத்தின் அடிப்படை தேவனுக்கு கீழ்படியாத பாவமே இதில் எந்த தவறும் இல்லை!
இதைஎல்லாம் உங்களுக்கு ஏற்க்க மனமில்லாமல் இருக்கலாம், ஆனால் யோபுவின் பாடுகளுக்கும் அவன்தான் பொறுப்பு என்ற எனது கருத்துக்கு சாதகமாக இறுதியாக யோபுவே தன் வாயால் சொல்லும் இன்னும் ஒரே ஒரு வசனத்தை நான் தருகிறேன்
26 மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்
என்ற வார்த்தைகளின்படி அவன் சிறுவயதில் அக்கிரமம் செய்திருக்கலாம் என்றும் அவனின் சிறுவயதுஅக்கிரமங்களே கூட யோபுவின் பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் சிரியவனோ பெரியவனோ தெரிந்து செய்கிறானோ தெரியாமல் செய்கிறானோ தன் பாவத்துக்கான தண்டனையை ஒருநாளில் அனுபவித்தே ஆகவேண்டும்.
இங்கு யோபுவுக்கு வந்த சொதனையாகிய பொருட்கள் இழப்பு என்பது அவனது சம்பத்து பெருக்கத்தால் வந்தது!
அவனுக்கு வியாதி என்னும் தண்டனை அவன் சிறுவயது அக்கிரமங்களுக்காக கிடைத்தது!
அதை எதிர்கொண்டு யோபு ஜெயித்தான்
அனால் எதற்கும் தேவன் பொருப்புதாரிகிடயாது.
துன்பத்தின் அடிப்படை காரணம் பாவமே!
-- Edited by SUNDAR on Thursday 28th of January 2010 10:49:26 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Dear brother Sundar and Anbu, I am sorry to come in between you. But I want to say my view about one verse sundar wrote:
//யோபு "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று கூறுவதை பார்த்தால், ஐயோ எனக்குள்ள எல்லாம் ஒருநாள் போய்விடுமோ என்று பயந்துகொண்டே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதல்லவா?//
From my view, Job also knew about the things that is going to happen in his life. Although it is not clear vision but he knew it as a shadow. This is the reason he told the above verse. Now i will explain
After job and his three friends finished their sayings, in job-32 eligoo, in job-38 God and in job-40 again God start speaking to job. In these eligoo represents the holy sprit (or son jesus? as per your wish take). So one can take these incidents as trinity God spoken to Job. (If you dont want to accept trinity then it is your wish). But eligoo spoke as representative of God. So God told to Job
13: "Why do you strive against him, because he doesn't give account of any of his matters?" Author: Job 33 Verses #: 13
14: "For God speaks once, yes twice, though man pays no attention." Author: Job 33 Verses #: 14
15: "In a dream, in a vision of the night, when deep sleep falls on men, in slumbering on the bed;" Author: Job 33 Verses #: 15
16: "Then he opens the ears of men, and seals their instruction," Author: Job 33 Verses #: 16
17: "That he may withdraw man from his purpose, and hide pride from man." Author: Job 33 Verses #: 17
18: "He keeps back his soul from the pit, and his life from perishing by the sword." Author: Job 33 Verses #: 18
19: "He is chastened also with pain on his bed, with continual strife in his bones;" Author: Job 33 Verses #: 19
20: "So that his life abhors bread, and his soul dainty food."
21: "His flesh is so consumed away, that it can't be seen. His bones that were not seen stick out." Author: Job 33 Verses #: 21
22: "Yes, his soul draws near to the pit, and his life to the destroyers."
Job-33 (13 to 22) From these verses we come to know that God revealed the future of job through his dream before the things going to start.
From my view, Job also knew about the things that is going to happen in his life. Although it is not clear vision but he knew it as a shadow. This is the reason he told the above verse.
ஆண்டவர் உங்களுக்கு ஒரு அருமையான வெளிப்பாடை கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
நீங்கள் சொல்வதில் நிச்சயம் உண்மை இருக்கிறது! எலிகூவின் வார்த்தைகள்படி யோபுவின் பாடுகள் அவனுக்கு முன்னறிவிக்கப்பட்டிருக்கலாம். அதை நினைத்து அவன் பயந்திருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளகூடிய கருத்தே.
ஆகினும் எனது கருத்தும் தவறு அல்ல என்பதையும் நான் விளக்க விரும்புகிறேன். தேவன் ஏன் அவ்வாறு துன்பத்தை கொண்டுவருகிறார் என்பதற்கும் அவனே காரணம் சொல்கிறான்
17 மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்
மேலும் எதற்க்காக தேவன் அவவாறு செயல்படுகிறார் என்பதற்கும் எலிகூவின் வார்த்தைகளில் பதில் இருக்கிறது
29 இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும், 30 அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
எனது அடிப்படை நம்பிக்கைக்கும் எலிகூவின் வார்த்தையில் பதில் இருக்கிறது
17 நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
தேவன் மகாநீதிபரர் அவர் நியாயமான காரணமின்றி யாரையும் சோதனைக்குட்படுத்த மாட்டார் என்பதே எனது அடிப்படை நம்பிக்கை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
In your previous discussions with anbu, i found some truth in your sayings as well as anbu sayings. Actually it is one of the most important topics for every Christian or non-Christians "What is the reason for sufferings for humans". I also want to write my view about this point but I want to present it in such a way that after reading that there will not be any questions arise in the readers mind. That means I myself ask the possible questions and i try to answer them. As it needs time I cannot write it immediately.