நம் உடம்பில் ஏதாவது பலகீனம் ஏற்ப்பட்டலோ அல்லது பரிசொதனைக்க்காகவோ தேவையான சமயங்களின் மருத்துவரை (டாக்டர்) அணுகுவது இயல்பு.
அப்படிப்பட்ட சமயங்களில், அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகள், மருந்து, டானிக் போன்றவற்றை நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர் சொன்ன நேரத்தில் சொன்னபடி சரியாக எடுக்க முயற்சிக்கிறோம்! இப்படி அவர் சொன்னதை சரியாக செய்ததால் டாக்டர் நமக்கு எதாவது வெகுமதி தரப்போவது இல்லை! மாறாக டாக்டர் சொன்ன அட்வைசுக்காக அவருக்குத்தான் நாம் பீஸ் கொடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவர் மனித உடம்பு செயல்படும் விதங்கள் பற்றியும் என்ன நோய்க்கு என்ன மருந்து என்பது பற்றியும் படித்து அறிந்திருக்கிறார். எனவே அவர் சொல்வது புரிந்தாலும் புரியாவிட்டாலும் காசுகொடுத்து அவர் அட்வைசை வாங்கி கடைபிடிக்கிறோம்! அதனால் நமக்குத்தான் நல்லது
அதுபோல்
நம்மை உருவாகிய நோக்கம் மற்றும் இந்த உலகில் நியதியை முழுமையாக அறிந்த இறைவன், மனிதன் இந்த உலகில் சமாதானமாக துன்பங்களை தவிர்த்து வழவேண்டும் என்ற நோக்கில், பொய் சொல்லாதே, திருடாதே, பிறரை ஏமாற்றாதே, தகாத உறவு வைக்காதே, லஞ்சம் வாங்காதே போன்ற பல்வேறு அட்வைஸ்களை பல்வேறு இறைவேதங்கள் மூலம் கூறியிருக்கிறார்! ஆனால் நாமோ, இவற்றையெல்லாம் கடைபிடித்து ஒரு இன்பமான வாழ்க்கை வாழ்வதைவிட, இறைவனிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்ற ஏக்கத்திலேயே அவரை தேடுகிறோம்!
இறைவனிட்ட கட்டளைகளை சரியாக கடைப்பிடித்து நடந்தால் நமக்குத்தான் நல்லதே தவிர, அவருக்கு எந்த பலனும் கிடைக்கபோவது இல்லை! காசு கொடுத்து கட்டளையை வாங்கி கடைப்பிடிக்கும் மனிதர்கள் இலவசமாக இறைவன் சொன்ன கட்டளைகளை கடைபிடிக்க கவனம் செலுத்துவதில்லை இதனால் கொடூர நோயிலும், குறையுள்ள வாழ்விலும், குற்றத்தின் பிடியிலும் அகப்பட்டு அல்லோலப்படுகின்றனர்.
இறைவனின் கட்டளைகளின் அறிந்து நடப்போம் இனிதான வாழ்க்கையை அமைப்போம்!