இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட மேலான அதிகாரம் ஓன்று நிச்சயம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை!
குழந்தைக்கு தாய் தகப்பன், மனைவிக்கு கணவன், தொழிலாளிக்கு முதலாளி, அலுவலருக்கு மேலாளர் போன்று ஒவ்வொரு தொழிலிலும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கபடுகிறது! ஜெயலலிதாவிற்கு ஒரு சசிகாலா மன்மோகன் சிங்கிற்கு ஒரு சோனியா காந்தி என்பது முதல் ஒபாமாவுக்கு தலைவலி கொடுக்க ஒரு பின்லேடன்/ ஜலால் தலபானி போன்றோர் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்!
அலுவலகத்தில் வேலை செய்வோர் பலருக்கு அவர்கள் மேலதிகாரிகளோ அல்லது முதலாளியோ கொடுக்கும் தொல்லை தாங்கமுடிவதில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும் மேலதிகாரிகள் தரம்கெட்ட வார்த்தைகளால் திட்டும் முதலாளிகளால் அவதிப்படும் சாமான்யர்கள் தங்கள் வேதனையை மன குமுறலை சக உளியர்களிடம் பகிர்ந்து சமாதானமடைவதுண்டு! சில வேளைகளில் இந்த சகஊழியர் மேலிடத்தில் பற்றவைத்துவிட பிறகு தங்கள் வேலைக்கும் தாங்களே உலை வைத்ததுபோல் ஆகிவிடும்!
இதுபோல் துன்பங்களை அனுபவித்து மனம் குமுரிக்கிடக்கும் அன்பர்களுக்கு ஒரு அருமையான ஆலோசனையை இங்கு தருகிறேன் சற்று கடினம்தான் அனால் முயன்றால் வெற்றி நிச்சயம்!
உலகில் யாரையுமே இவர் எந்த ஒரு நல்ல குணமும் இல்லாத தீயவர் என்று சொல்லிவிடமே முடியாது! எல்லோருக்குள்ளுமே நல்லகுணம் கெட்டகுணம் இரண்டும் கலந்தே இருக்கும் என்பது மாற்ற முடியாத நியதி. இல்லை, ஒருவரிடம் நல்ல குணம் என்று சொல்ல எதுவுமில்லை என்று நீங்கள் கருதினால் உங்கள் பார்வையில் நிச்சயம் தவறு இருக்கிறது என்றே நான் சொல்லுவேன்.
எனவே இங்கு அடிப்படை பார்முலா என்னவெனில்
"நம்மை விட எதோ ஒரு பண்பில் உயர்ந்தவராக இருக்கும் ஒருவர்தான் நம்மை திட்டவோ அடிக்கவோ குடைச்சல் கொடுக்கவோ முடியும்" என்பதுதான்.
எனவே மனநோகடிப்பவரை திட்டி தீர்ப்பதை விட அவரிடம் உள்ள தீய குணங்களை எல்லாம் விட்டுவிட்டு, அவரிடம் உங்களுக்கு தெரிந்த நல்ல குணங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அடுத்து அவரின் நல்ல குணங்களில் உங்களிடம் இல்லாத நல்ல குணங்கள் என்னவென்பதை கண்டுபிடியுங்கள் பின்பு உங்களிடம் இல்லாத அந்த நல்ல குணத்தை அப்பியாசப்படு உங்கள் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள் அதன்பின் அவரால் உங்களை திட்டவே முடியாது!
உதாரணமாக உங்கள் மேலதிகாரியிடம்,
வார்த்தை தவறாமை உண்மை பேசுதல் பிறர் பொருள் மேல் ஆசையின்மை தாராள மனம் நேரம் தவறாமை புறம் கூறாமை
போன்ற நல்ல குணங்கள் இருக்கிறது என்று வைத்துகொள்வோம் உஙகளிடம் நேரம் தவறுதல் மற்றும் புறங்கூறுதல் போன்ற குணங்கள் இருக்குமாயின் அதனை கைவிட முயற்சிக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் அவரை விட எல்லா குணத்திலும் நல்லவராக மாறிவிட்டால் அவரால் உங்களை எக்காரணத்தை கொண்டும் திட்ட முடியாமல் போய்விடும்! அல்லது உங்களுக்கு நல்ல ஒரு பதவி உயர்வோ அல்லது வேறு வேலையோ கிடைத்து அவரின் முகத்தை விட்டு தூர போய்விடுவீர்கள் என்பது மறுக்க முடியாத அனுபவ உண்மை!
இந்த நல்ல வழியை விட்டு நமது மேலதிகாரிகளை பலர் முன்னால் திட்டுவதாலோ அவரை பழி தீர்த்துக்கொள்ள நினைப்பதுவோ வம்பிலதான் கொண்டுபோய் விடும்! மேலும் வேறுவழியில் முயன்று நாம் இடத்தை விட்டு ஓடிவிடவோ அல்லது வேறு எங்காவது வேலைக்கு சேர்ந்துவிடவோ முயற்ச்சித்தால், அங்கு இவரைவிட மோசமானவர் ஒருவர் உங்களுக்காக காத்திருக்கலாம்!!
இந்த கருத்துக்கு தொடர்புடைய மேலும் சில கருத்துக்களையும் நாம் அறிந்து கொள்வது நல்லது!
முடிந்தவரை உங்களை விட பெரிய அதிகாரிகளிடமோ அல்லது வேலை ஸ்தலத்திலோ கடன் வாங்குவதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. நீங்கள் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால் அவர் உங்களை ஒரு அடிமைபோலவே பாவித்து நடத்துவார். உங்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாத நிலையே ஏற்ப்படும்.
அடுத்து வேலை ஸ்தலத்திலிருந்து எந்த ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ எக்காரணத்தை கொண்டும் எடுத்து சொந்தமாக பயன்படுத்த கூடாது. நீங்கள்யாருக்கும் தெரியாது என்று மறைவாக எடுத்து வைத்திருக்கும் பொருளோ, அல்லது பணமோ சாத்தனுக்கு நிச்சயம் தெரியும். அந்த சாத்தான் உங்கள் மேலதிகாரியினுள் புகுந்து உங்களை சிரமப்படுத்துவான்.
அடுத்து, வேலை ஸ்தலத்துக்கு நட்டத்தை ஏற்ப்படுத்தும் அல்லது வருமானத்தை
குறைக்கும் எந்த ஒரு செயலையும் தெரிந்து செய்யகூடாது. உதாரணமாக சொந்த
பயன்பாட்டுக்கு கணினியை/ தொலைபேசியை பயன்படுத்துவது வேலை நேரத்தில் சொந்த வேலைகளை செய்வது போன்றவற்றுக்கு நிச்சயம் முன் அனுமதி பெற வேண்டும். இல்லையேல் இவற்றை எல்லாம் கவனிக்கும் சாத்தான், மேலதிகாரிகள் மூலம் நமக்கு மனகஷ்டத்தை கொண்டு வருவான்.
அடுத்து, வேலை ஸ்தலத்தில் இருந்து செலவுக்கான பணங்களை பெறும்போது சரியான கணக்குகளை ஒப்புவித்து பணம் பெறவேண்டும். பஸ்ஸில் போய்விட்டு ஆட்டோவில் போனேன் என்று எழுதுவதோ. சாப்பிடாமல் சாப்பிட்டேன் என்று எழுதி பணம் வசூலிப்பது போன்ற காரியங்களுக்கு தகுந்த தண்டனையை சாத்தான் உயரதிகாரிகள் மூலம் தராமல் விடவேமாட்டன்.
மேலும் அதிகாரிகள் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ள காரியங்களை அவர் கண்ணை மறைத்து எவ்விதத்திலும் செய்யக்கூடாது! இதுபோன்ற அற்ப காரியங்கள் மூலம் சாத்தான் எல்லோரையுமே சோத்தித்து வருகிறான். அவ்வாறு
நாம் மறைத்து தடை செய்யபட்ட காரியங்களை செய்யும் பட்சத்தில் அதற்கு பிரதிபலனாக மேலதிகாரிகளிடம் நாம் வாங்கி கட்டவேண்டும்!
இவை எல்லாம் என் அனுபவ அறிவில் நான் அறிந்து சொல்லும் காரியங்கள்.
நம்முடய வாழ்வில் நாம் நேர்மையாக தேவனுக்கு பயந்து செயல்படும் நிலையில், எந்த ஒரு அதிகாரியும் நமது மனம் நோகும்படி ஒரு வார்த்தைகூட சொல்ல தேவன் அனுமதிக்கமாட்டார் என்பதை நான் அறுதியிட்டு சொல்லுவேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நம்முடய வாழ்வில் நாம் நேர்மையாக தேவனுக்கு பயந்து செயல்படும் நிலையில், எந்த ஒரு அதிகாரியும் நமது மனம் நோகும்படி ஒரு வார்த்தைகூட சொல்ல தேவன் அனுமதிக்கமாட்டார் என்பதை நான் அறுதியிட்டு சொல்லுவேன்.
பஸ்ஸில் போய் வந்து விட்டு ஆட்டோ என்று எழுதுவது உண்மைதான் சகோதரரே அவர்களுக்கு தெரியும் அவர்களே கொடுக்கும் பொழுது நமக்கென்ன என்று நான் விட்டு விடுவேன்
உண்மையாகவே பரிசுத்த ஆவியானவர் நேரில் வந்து கடிந்து கொண்டது போல இருந்தது உங்கள் வார்த்தை...
நன்றி சகோதரனே.... ----------------------------------------------------------------------------
அன்பு சகோதரர் எட்வின் அவர்களே,
இங்கு எழுதப்படும் அனேக காரியங்கள் "கடினமான உபதேசம்" என்று எண்ணப்பட்டு பலர் விலகிப்போகும் நிலையில், தாங்கள் இந்த கருத்துக்களை ஆவியானவரின் போதனையாக எடுத்து கொண்டதர்க்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
நான் அனுபவபூர்வமாக அறிந்த காரியத்தையே துணித்து இங்கு எழுதுகிறேன்! எனவே இதுபோன்ற வார்த்தைகளை கைகொள்ளுவதால் மிகுந்த பலன் உண்டு என்பதை தேவனுக்குள் நான் நிச்சயித்து அறிந்திருக்கிறேன்.