இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் எப்படி வேண்டுமாலும் செயல்படலாம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவன் எப்படி வேண்டுமாலும் செயல்படலாம்!
Permalink  
 


நாம்  சிறு  வயதில் தொப்பி வியாபாரியும் குரங்கும் என்றொரு கதையை படித்திருப்போம்.

தொப்பி வியாபாரி ஒரு மரத்தடியில் படுத்து தூங்கும்போது மரத்தில் உள்ள குரங்குகள் தொப்பியை தூக்கிக்கொண்டு மரத்தில் போய் அமர்ந்து கொள்ளும். வியாபாரி  விழித்து பார்த்து   தான் செய்யும் செயல்களை  எல்லாம் அந்த குரங்குகள் திருப்பி செய்வதை அறிந்து   சில செயல்களுக்கு பின்  தனது தொப்பியை கழற்றி தரையில்  வீச,  எல்லா குரங்கும் தொப்பியை கழற்றி தரையில் வீசிவிடும்.  இது சிறு வயது கதை!
 
அனேக நாட்களுக்கு பிறகு அந்த தொப்பி வியாபாரியின் பேரன் ஒருவன் அனேக தொப்பிகளை மூட்டையாக கண்டிகொண்டு வியாபாரத்துக்கு புறப்பட்டான். மதிய நேரம் அதிக சோர்வு அடையவே ஒரு மரத்தின் கீழ் படுத்து தூங்கிவிட்டானாம். அந்த மரத்தில் அனேக குரங்குகள் இருந்தனவாம்  அவைகள் எல்லாம்  இறங்கி வந்து ஆளுக்கொரு தொப்பியை எடுத்து தங்கள் தலைகளில் வைத்துகொண்டு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டன. 
 
விளித்து பார்த்த வியாபாரி தொப்பி எல்லாம் குரங்கு தலையில் இருப்பதாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனினும்  அவனது  தாத்தா (அதுதான் அந்த  பழைய தொப்பி வியாபாரி)  சொன்ன  "குரங்குகள் எல்லாம் நாம் என்ன செய்கிறோமோ அதையே திருப்பி செய்யும்" என்ற அவரது  அனுபவ வார்த்தை  நியாபகத்துக்கு வந்தது.        
 
உடனே வியாபாரி குரங்குகளை பார்த்து பல்லை கடித்தான் அவைகளும் பதிலிக்கு பல்லை கடித்தது பின்பு பல்லை ஈ என்று காட்டி பார்த்தான் அவைகளும் தங்கள் பல்லை காட்டின  பல செயல்களை செய்து பார்த்தார் அவைகளும் அப்படியே செய்தன இறுதியாக இதுதான் சமயம் என்று கருதி  தனது தலையில் உள்ள தொப்பியை கழற்றி கீழே வீசினான் ஆனால் எதிர்பாராத விதமாக,  ஒரு குரங்கு வேக வேகமாக மரத்தில் இருந்து இறங்கி வந்து அந்த தொப்பியையும் எடுத்துகொண்டு மேலே போய்விட்டது.
 
தொப்பி வியாபாரிக்கு அதிர்ச்சி! அந்த குரங்கு   சொன்னது " முட்டாள் வியாபாரியே உனக்குத்தான் தத்தா இருக்கிறாரா, எனக்கும் தாத்தா உண்டு" என்று நக்கலாக கூறிவிட்டு சென்றது.
 
இந்த கதை பலபேருக்கு தெரிந்திருக்கலாம் ஆகினும் இதை இங்கு நான் பதிக்கும் நோக்கம் என்னவென்றால்.
 
ஒரு நேரம் நடந்து முடிந்த காரியத்தை அடிப்படையாக கொண்டோ   அல்லது  இன்னொருவர் அனுபவத்தை வைத்தோ நாம் தேவ காரியங்களை ஜெயித்துவிடலாம் என்று கருதினால் நிச்சயமாக முடியாது!         
 
ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய பெட்டியுடன் யோர்தானில் யோர்தானில் கால்வைத்தவுடன் அந்த தண்ணீரே வழிவிட்டு எல்லோரும் அக்கரைபட்டனர்.

அதை அடிப்படையாக கொண்டு 

இஸ்ரவேல் பெலிஸ்த்தியருடன்  போரிட்டபோது கர்த்தரின் பெட்டியை பாளையத்துக்கு கொண்டு வந்தனர் ஆனால் நடந்ததோ நேர் எதிரான செயல்.      
 
ஒருமுறை கர்த்தர் மோசேயிடம் கன்மலை அடி அது தன்னில் உள்ள தண்ணீரை தரும் என்று கூறு அதுபோல் அடித்து தண்ணீர் வர எல்லோரும் தாகம் தீர்ந்தனர்.
அடுத்தமுரையோ 
கர்த்தர் கன்மலையை பார்த்து பேசு என்றார் ஆனால் மோசே பழைய செயலைபோல அடித்தான் இங்கு அது குற்றமாக கருதப்பட்டு கானானில்
பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்தான்.

ஆயியை பதிவிடை வைத்து பிடிக்க வைத்த தேவன்  எரிகோ கோட்டையை எழுமுறை சுற்றிவர சொல்லை பிடித்தார்.
 
இப்படி அனேக காரியங்களை வேதத்தில் இருந்து  சொல்லலாம். இதற்க்கெல்லாம் காரணம் என்ன? 
 
மோசே கோலை தரையில் போட்ட போது, எகிப்திய மந்திர வாதிகளும் எப்படி கோலை போட்டு பாம்பாக்கினார்களோ அதுபோல் ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சியை சாத்தான் பார்த்து "ஒ"இதுதானா அடுத்த முறை நான் பார்த்துகொள்கிறேன் அவர் செய்வதுபோல நானும் செய்து ஜனங்களை ஏமாற்றுவேன்  "ஆவியில் நிறைந்தது கீழே விளவைப்ப்துபோல விழ வைப்பேன்" என்று  சந்தோசத்தில்  இருப்பான் ஆனால் அடுத்த முறை அவர் வித்யாசமான  காரியமாக  பேனை வரவைக்கும்போது சாத்தான் அதை செய்வதறியாமல்    என்னசெய்வதென்று    திகைப்பான்   தேவனை  சரியாக அறியாத உண்மையிள்ளதவர்கள் எல்லாம்   இங்கு இடறிப்போவார்கள்  
 
இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு தேவனிடம் மோசேயின் கொலுக்கோ, உடன்படிக்கை பெட்டிக்கோ அலது மனிதனின் மூளையால் உருவாகும் திட்டத்துக்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை!  எல்லாம் தேவன் கையில் இருக்கிறது என்பதை மனிதர்கள் புரியவேண்டும் என்பதர்க்க்காகவும்தான்.
 
இங்கு நான் இறுதியாக சொல்லும் வார்த்தை என்னவென்றால் எல்லா திட்டத்தையும்  தேவன் வார்த்தையாக எழுதிகொடுத்துவிட்டார்  என்பது உண்மைதான்! அதற்காக அடுத்து எதுவும் புதிதாக  செய்யவேமாட்டார் என்ற கருத்தில் இருக்கவேண்டாம்!
 
நம் தேவன் ஜீவனுள்ளவர்! அவர் எல்லாம் வல்லவர்! 
அவர் எதுவேண்டுமாலும்
  எப்பொழுது வேண்டுமானாலும்   செய்வார்!   
 
          


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

தேவன் எப்படி வேண்டுமானாலும் செயல்படுவாரென்பது கருத்தளவில்
ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும் வேதத்தின் பிரமாணத்துக்குட்பட்டே
அவரது செயல்பாடுகள் இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்;

ஏனெனில் தமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் வார்த்தையையே
மகிமைப்படுத்தியிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது;

http://chillsam.activeboard.com/

http://chillsam.wordpress.com/


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

chillsam wrote:

தேவன் எப்படி வேண்டுமானாலும் செயல்படுவாரென்பது கருத்தளவில்
ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும் வேதத்தின் பிரமாணத்துக்குட்பட்டே
அவரது செயல்பாடுகள் இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்;

ஏனெனில் தமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் வார்த்தையையே
மகிமைப்படுத்தியிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது;


நல்லது சகோதரரே!

அவரின் வார்த்தை மகிமை வாய்ந்ததுதான் அதக்காக அதற்குள் மற்றும் வேதபிரமாணத்துக்குள்   கட்டுப்பட்டுதான் நீர் நடக்கவேண்டும் என்று அவருக்கு கட்டளையிட யாரால்முடியும்?
 
அவருக்கு இஸ்டமானத்தை  அவர் செய்ய யாரை அவர் கேட்கவேண்டும்.
  
"இதோ புதிய காரியத்தை செய்கிறேன்" என்ற வார்த்தை வேதத்தில் இருக்கிறது அதன் அடிப்படையில் எந்த புதிய காரியத்தையும் அவர் செய்யமுடியுமே!    

அவருக்கு ஆலோசனைகாரனாக யார் இருக்கமுடியும்?
 

 



-- Edited by SUNDAR on Monday 25th of January 2010 09:30:39 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard