தளத்திற்கு புதியதாக வருகைதந்து பதிவிட்டிருக்கும் சகோதரர் சந்தோஷ்
அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில் வரவேற்கிறோம்.
தங்களைப்பற்றி ஒரு சிறு அறிமுகத்தை இங்கே பதிவிடவும்.
ஆங்கிலத்தில் எழுத இங்கு தடையில்லை. ஆகினும் நீங்கள் ஆலோசனை பகுதியில் சகோ. சில்சாம் அவர்கள் தமிழ் எழுத கொடுத்துள்ள சுட்டிகளில் எதாவது ஒன்றை தரவிறக்கம் செய்து தமிழ் எழுதி பழகலாம்
அல்லது கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி அங்கும் தமிழ் எழுதி பழகலாம்.
தமிழ் வேதாகமத்திலிருந்து வசனங்களை எவ்வாறு திரியில் சேர்ப்பது என்று யாராவது சொல்லவும். நான் இலவச தமிழ் வேதாகம மென்பொருள் உபயோகிக்கின்றேன். அதிலிருந்து எவ்வாறு வசனங்களை திரியில் சேர்ப்பது என்று யாராவது சொல்லவும்
சகோதரர் சந்தோஷ் அவர்களே எனக்கு இலவச வேதாகம மென்பொருள் பயன்படுத்தி பழக்கமில்லை ஆகினும் நான் வசனங்களை தமிழில் பதியும் முறையை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
sandosh wrote: //தமிழ் வேதாகமத்திலிருந்து வசனங்களை எவ்வாறு திரியில் சேர்ப்பது என்று யாராவது சொல்லவும். நான் இலவச தமிழ் வேதாகம மென்பொருள் உபயோகிக்கின்றேன். அதிலிருந்து எவ்வாறு வசனங்களை திரியில் சேர்ப்பது என்று யாராவது சொல்லவும்.//
அன்பான சகோதரரே!
பின்வரும் தொடுப்பினுள் சில வழிமுறைகளைக் கூறியுள்ளேன்; முயற்சித்துப் பார்க்கவும்.
ஒரு சில படங்களை போஸ்ட் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் முடியவில்லை. படங்களை போஸ்ட் செய்வது எப்படி என்று சொன்னால் நலமாயிருக்கும்
நமது அன்புக்குரிய சகோதரர் சில்சாம் அவர்கள் இவ்விஷயத்தில் ஞானம் பெற்றிருப்பதால் படத்தை இணைப்பது பற்றிய வழி முறைகளை நமக்கும் சற்று தெரிவிப்பார் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன்.
TAMIL-OFFLINE UNICODE BIBLE WITH SEARCH இந்த பைலை பற்றி வாசகர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லும்படி வேண்டுகிறேன். இதன் மூலமாக கட்டுரை எழுதுவதற்க்கு online இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நான் எழுதும் / எழுதின கட்டுரைகள் அனைத்தும் விவாதத்திற்க்கு உட்பட்டவையே. அது பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்கு நான் தயாராக உள்ளேன். சில கேள்விகளுக்கு பதில் சொல்லியும் உள்ளேன். சில சமயம் பதில் சொல்ல தாமதமாகலாம் (அந்த பதிலை விட முக்கியமென்று நான் நினைக்கும் கட்டுரைகளை நான் எழுத வேண்டியிருப்பதால்) ஆனாலும் பதில் சொல்ல நான் தயாராக உள்ளேன்.
அன்பு நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு "யௌவன ஜனம்" எனும் தளத்தைக் குறித்தும் சற்று ஞாபகம் இருக்கும் என்றெண்ணுகிறேன்;அதன் நிர்வாகியான நான் மேற்கொள்ளும் சில நடைமுறைகள் காரணமாக அனுதினமும் எனது தளத்தை அதிகமானோர் கவனித்து செல்லுகின்றனர்;
எனவே தங்களது மேலான கருத்துக்களை அதிகமானோரைச் சென்றடைய "யௌவன ஜனம்" தளத்திலும் எழுத அன்புடன் அழைக்கிறேன்;தங்கள் நண்பர்களுக்கும் நமது தளத்தை அறிமுகப்படுத்தவும் வேண்டுகிறேன்;
எனது இன்றைய சிந்தனையானது ,கிறித்தவ மார்க்க நம்பிக்கையாளர்களான நாம் தமிழர்களாக ஒன்றிணைக்கப்பட்டு நம்மை நோக்கி அதாவது நமது நம்பிக்கையைக் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சமரசமில்லாத விதத்தில் பதிலளிக்க ஆயத்தப்படவேண்டும்;
இன்னும் தளம் தொடர்பான தங்களது ஆலோசனைகளையும் ஆர்வத்துடன் வரவேற்கிறேன்;நன்றி..!
சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு, கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தாங்கள் எழுதியுள்ள கருத்துக்கள் மூலம் பல உண்மைகளை நான் அறிந்து கொண்டாலும், சில கருத்துக்களுக்கு எனக்கு எதிர் கருத்துக்கள் உண்டு.
தாங்கள் ஆரம்பித்த சில குறிப்பிட்ட திரிகள் முடிவடைந்தபின் அவற்றைப்பற்றி தனியாக விவாதபகுதியில் வைத்து விவாதிக்கலாம் என்று எண்ணியிருந்தேன் ஆகினும் எனக்கு விவாதம் செய்வதில் கொஞ்சமும் விருப்பமில்லை. நபுவோர் நம்புவோர் நம்பட்டும் நிராகரிப்போர் நிராகரிக்கட்டும். மற்றபடி விவாதிப்பது வீண் என்றே நான் கருதுகிறேன் ஏனெனில் அது பல நேரங்களில் பிடிவாதம் பிடிக்கவே வழி செய்கிறது.
எனவே தங்கள் கருத்துக்களை வசன ஆதாரத்தோடு தற்போது பதிவிடுவது போல் தனியாக கட்டுரையாக பதியுங்கள் நான் எனது தரப்பில் உள்ள கருத்துக்களை வசன ஆதராத்தொடு கட்டுரையாக பதிகிறேன். படிப்பவர்கள் எது உண்மையாக இருக்கும் என்று நிதானித்து அறிந்துகொள்ளட்டும். நம்பாதவர்கள் விட்டுவிட்டு போகட்டும்.
மேலும் சகோதரர் சில்சாமுக்கு தங்களின் கருத்துக்கள் அதிகமாக பிடித்திருப்பதால் நீங்கள் அவரது தளத்தில் சென்று வேண்டுமானாலும் பதிவுகளை கொடுங்கள். அது பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனின் கிருபையால் கிருஸ்துவர்களுக்கு உண்டான ஒரு தளத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். சில நாட்களுக்குள் இந்த பணி முடிவடையும். இது ஒரு வித்தியாசமான தளமாக இருந்து, இந்த தளத்தில் உறுப்பினராக சேருபவர்கள் தேவனிடம் இப்போது இருக்கும் நிலையை விட அதிகமாக நெருக்கம் கொள்ள வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தளத்தின் பெயர் சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
தேவனின் கிருபையால் கிருஸ்துவர்களுக்கு உண்டான ஒரு தளத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். சில நாட்களுக்குள் இந்த பணி முடிவடையும். ..... இந்த தளத்தின் பெயர் சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
வாழ்த்துக்கள் சகோதரரே!
தங்களின் வலைப்பூவின் மூலம் அனேக ஆத்துமாக்கள் நீதியின் பாதையை நோக்கி திரும்ப ஆண்டவர் கிருபை செய்வாராக.
என்னை சந்திக்க வந்த சில சகோதரர்கள் தங்களை சந்திக்க வாஞ்சித்து விசாரித்தார்கள் என்னால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை.
ஆண்டவரின் வார்த்தைகளை சொல்லும் அனேக வலைமலர்கள் பெருகி இணையத்தில் எங்கும் தேவ நாமம் மகிமைப்படுவதாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)