பைபிள் என்னும் வேதாகமத்தில் உள்ள அனேக வார்த்தைகள் பல தேவ மனிதர்களுக்குள் இறைஆவி இறங்கி வந்து அவர்கள் மூலம் மனிதனை நோக்கி இறைவன் பேசுவது போல் வார்த்தைகள் உள்ளது (சில இடங்களில் மட்டும் கர்த்தர் தன் தூதனை அனுப்பி பேசியதாகவும் சில இடங்களில் தேவனே இறங்கிவந்து மோசேயிடம் கட்டளைகளை கொடுத்ததாகவும் உள்ளது.)
பைபிளில் உள்ள வார்த்தைகளின் அமைப்பு கீழ்கண்டவாறு உள்ளது"
"கர்த்தர் என்னை நோக்கி"
"கர்த்தருடைய வாய் இதை சொல்லிற்று"
"கர்த்தராகிய ஆண்டவர் உரைப்பது என்னவென்றால்"
"கர்த்தர் சொல்வது என்னவென்றல்"
"கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி"
"கர்த்தர் கட்டளை இட்டார்"
போன்ற வார்த்தைகள் இறைவன் மனிதனை நோக்கி நேரடியாக பேசும் விதத்தில் உள்ளது.
ஆனால்
குர்ரான் என்பது முழுவதும் இறைதூதனால் முகமது நபிக்கு சொல்லப்படு அவர் மூலம் மனிதனுக்கு சொல்ல கட்டளையிடுவது போல உள்ளது(2.97)
உதாரணம்:
(நபியே) அவர்களுக்கு சொல்லும்
(நபியே) நீர் கேட்பீராக
(நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக
(நபியே) இவை அல்லாஹின் வசனங்களாகும்
(நபியே) நீர் கவனித்தீரா
இறைவனின் நேரடி வார்த்தைகளா? அல்லது
இறைதூதன் மூலம் சொல்லப்பட்ட வார்த்தைகளா? எது மேன்மையானது?
அப்படி இறைதூதன் ஒருவேளை சொல்லியிருந்தாலும் ஒருமுறையாவது இறைவன் நேரடியாக இன்னொருவர்க்கோ அல்லது முகமதுவுக்கோ கூட ஏதாவது ஒரு வஹியை இறக்கி இது எனது உண்மை வேதம்தான் என்று சொல்லியிருக்கலாமே!
"இயேசுவை பற்றி குறிப்பிடும்போது இரண்டு முறை தேவன் "இதோ என் நேசகுமாரன் இவருக்கு செவிகொடுங்கள்" என்று வானத்திலிருந்து பேசியதாக விவிலியம் குறிப்பிடுகிறது.
ஆனால் திருக்குர்ஆன் ஏன் ஒரு முறைகூட இறைவன் நேரடியாக பேசியதாக உறுதிபடுத்தப்படவில்லை?
ஏன் இறைவன் நேரடியாக மனிதனிடம் பேச மாட்டாரா?
முந்தய நபிகளாகிய மூஸா நபி போன்றோருடன் இறைவன் நேரடியாக பேசி இருக்கும் போது, உலக திருமறை என்றும் என்று சொல்லப்படும் எல்லோரும் கட்டாயம் கைகொள்ள வேண்டிய முக்கியமான இறைவார்த்தைகளை ஏன் இறைவன் ஒரே தூதன் மூலம் சொல்லி அனுப்பினார்?
ஏற்கெனவே இப்லீஸ் என்னும் ஒரு தூதன் இறைவனுக்கு கீழ்படியாமல் சாத்தானாக மாறி இருக்கும் போது இந்த தூதன் சொல்வதை மட்டும் எப்படி இறை வார்த்தைகள் என எடுத்துக்கொள்ள முடியும். ஏன் இறைவன் நேரடியாக நபியுடன் பேசி திருக்குர்ரானை வழங்கவில்லை?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)