இம்மாட்டும் தங்களின் தளத்திள் உலா வருவதறகு என்னை அனுமதித்ததற்கு நன்றி. தாங்கள் பிறருக்காக தான் அல்லது பிறரின் பேச்சிற்கு தான் தளம் நடத்துகிறீர்கள் என்று புரிந்துக்கோன்டேன். நீங்கள் invite செய்ததால் என் பதிவுகளை தந்தேன். அதை என்னால் முடிந்தவற்றை நீக்கி விட்டேன். இயேசு கிறிஸ்துவை பற்றியான ஒரு திரி தாங்கள் மூடி விட்டதால் நீக்க இயலவில்லை. தங்களின் கருத்துகளுக்கு ஆமாம் போடுவோருக்கு அதுவும் நிச்சயமாக இடறலாக இருக்கும். எனக்கு வேண்டியதை நான் காப்பி செய்துவிட்டேன். தாங்கள் அந்த இடறல் உண்டாக்கும் என் பதிவுகளை நீக்கி விடும் படி அனுமதிக்கிறேன்.
விடுமுறை நாட்களை நிம்மதியாக கழியுங்கள். என் நிமித்தம் யாரும் தங்களிடம் இனி குறை கூற அனுமதிக்க மாட்டேன். ஆனாலும் விவாத மேடை என்று ஒன்றை வைத்து விட்டுய் மற்ற பல கிறிஸ்தவ தளங்களை போல் ஓரவஞ்சகத்தோடு நடத்துவது எப்படி நல்லது என்று புரியவில்லை. கருத்துக்கு வசனத்துடன் ப்தில் பதிகிறேன். ஆனால் தங்களின் விசுவாசம் அந்த வசனங்களை அப்படி பார்க்க மறுக்கிறது.
ஏன் குறான் இன்னும் மூல பாஷையில் இருக்கிறது என்று புரிந்துக்கொள்ளுங்கள். தன் உண்மை அர்த்தங்களை அது இழந்து விடக்கூடாது என்று தான். வேதத்தை நாம் பட்டி தொட்டிக்கு கொண்டு செல்கிறோம் என்று அதன் மூலத்தனத்தை இழக்க செய்து விட்டன இந்த மொழிப்பெயர்ப்புகள்.
ஒரு நாள் அனைவருக்கும் இது வெளிச்சம் ஆகும். அந்த நாள் வெகு தூரம் இல்லை. அன்று நிச்சயம் இந்த வேத மாணவன் நினைவுக்கு வரட்டும்.
மீண்டும் நன்றிகளுடன்
இக்நேஷியஸ் இளங்கோ
இதை நான் தனி மடலாக கொடுக்காமல் அனைவரும் வாசிக்க வேண்டியே பதிகிறேன். இந்த பதிவும் பல ஊழியர்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டு இந்த தளத்திற்கு வருவார்கள், அவர்களுக்கு இடறலாக இருக்கலாம். படித்து விட்டு நீக்கி விட வேண்டும் என்றால் நீக்கி விடுங்கள்.
அது போல் என் தளம் நீங்கள் நினைக்கும் போல் மூடிவிடவில்லை. இன்னும் முதலாம் இடத்தில் தான் இருக்கிறது. விவாதிக்க மனம் இல்லாதவர்கள் தான் தங்களுக்கு என்று கூடுகள் தேடி பறந்து விட்டார்கள். பினம் எங்கேயோ கழுகுகள் அங்கே நிச்சயம் கூடும். கழுகுகள் காக்கா கூட்டம் போல் இல்லாமல் என்னிக்கையில் குறைவாக இருக்கும் ஆனால் திடமான ஆகாரத்தை தான் உன்னும். அது போல் தான் என் தளத்திற்கு வருகை தருவோரும்.
உங்கள் புரிதல்களுக்கும் எனது புரிதல்களுக்கும் என்றுமே ஒத்து போனதில்லை என்பது இருவரும் அறிந்ததுதான். "தீமையை விலக்கி நன்மை செய்" என்பதுதான் ஆதியில் இருந்து வேதம் சொல்லும் அடிப்படை கோட்பாடு அதையே தேவையில்லை என்று சொல்லும் உங்கள் கருத்தோடு எனது கருத்து ஒத்துபோவது மிகமிக கடினம்.
வேதம் இருபுறமும் பேசும்! இரண்டில் எது மேன்மையானது என்பதை ஆவியானவர் துணையுடன் ஆராய்ந்து செயல்படுவதுதான் நல்லது.
///தாங்கள் பிறருக்காக தான் அல்லது பிறரின் பேச்சிற்கு தான் தளம் நடத்துகிறீர்கள் என்று புரிந்துக்கோன்டேன்///
நான் யாருடைய பேச்சுக்கும் அடிபணியவில்லை யாருக்காகவும் தளம் நடத்தவில்லை. தவறாக ழுதியவர்களை நான் நிச்சயம் சுட்டிகாட்டியிருக்கிறேன்.
ஆண்டவருக்கு பிரியமில்லாத எந்த ஒரு பதிவும் எனது தளத்தில் இருக்க விரும்பவில்லை. அதனால்தான் ஆண்டவரிடம் பாரத்தோடு ஜெபித்தேன் நீங்களே உங்கள் பதிவுகளை நீக்கிவிட்டீர்கள். எனது தளத்தில் உள்ள பதிவால் யாருக்கும் இடறல் வரவேண்டாம்.
நீங்கள் என்னுடன் ஒரே ஒரு கருத்தில் மாறுபட்டிருந்தால் நிச்சயம் விவாதிக்கலாம் ஆனால் எல்லா கருத்திலும் முரண்படும்போது தை விவாதித்து தீர்க்க முடியாது. உங்கள் தளத்தில் நான் கேட்ட பல கேள்விகளுக்கு எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை.
சுவிஷேசம் சொல்லவேண்டிய தேவையில்லை இது அறுவடை காலம் என்கிறீர்கள் ஆனால் கடைசி நாட்களில் கூட கத்தரை தொழுதுகொள்பவர்கள்கூட இரட்சிக்கபடுவார்கள் என்று வேதம் சொல்கிறது!
நேர்மையாக நடக்கவேண்டிய தேவையில்லை ஏனெனில் யாருமே முழு பரிசுத்தமாக இருக்க முடியாது என்கிறீர்கள். ஆனால் வேதம் "நான் பரிசுத்தர் எனவே நீங்கள் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது.
தகப்பன் தன் பிள்ளையிடம் "டேய் நன்றாக படிடா" என்று சொன்னானாம். உடனே அந்த பிள்ளை அப்பா நான் அப்படி படிக்கவேண்டிய தேவையே இல்லை என்று கூறினானாம். ஏன் அப்படி சொல்கிறாய் என்று கேட்டபோது "இந்தனை காலம் எல்லோரும் எஸ்எஸ்எல் பரிட்சை எழுதியிருக்கிறார்கள் யாராவது 500௦/500 ௦ மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களா? ஒருவரும் இல்லையே பிறகு படித்து என்னத்தை சாதிக்கபோகிறோம் என்றானாம்!.
அதுபோல் இருக்கிறது உங்கள் வார்த்தைகள்! ஒருவரும் சரியாக நடக்கவில்லை எனவே நாமும் நடக்கவேண்டாம்.
///ஏன் குறான் இன்னும் மூல பாஷையில் இருக்கிறது என்று புரிந்துக்கொள்ளுங்கள். தன் உண்மை அர்த்தங்களை அது இழந்து விடக்கூடாது என்று தான். வேதத்தை நாம் பட்டி தொட்டிக்கு கொண்டு செல்கிறோம் என்று அதன் மூலத்தனத்தை இழக்க செய்து விட்டன இந்த மொழிப்பெயர்ப்புகள்.///
சகோதரர் அவர்களே! திருக்குரானை ஆராய்வதுபோல் வேதாகமத்தையும் நீங்கள் ஆராய்வதால்தான் இத்தனை குழப்பமுமே. திருகுர்ரனுக்கு விளக்கம் கொடுக்க பரிசுத்த ஆவியானவர் வாக்கு பண்ணப்படவில்லை! எனவே அவர்கள் மனித மூளையால்தான் அதை ஆராயவேண்டும். மேலும் குரான் காட்டும் இறைவன், ஒரு தவறு நடந்தால் உடனடியாக அதை திருத்த வரமாட்டார். இறுதிநாளில்தான் நியாயம் தீர்ப்பார்.
ஆனால் வேதாகமம் காட்டும் இறைவன் ஜீவனுள்ளவர்! அவர் இன்றும் ஆவியானவர் என்ற வடிவில் செயல்பட்டுகொண்டுதான் இருக்கிறார் எனவே வேதாகமத்தில் ஒரு வார்த்தை தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும் அதை ஆவியானவர் துணையுடன் வாசித்தால் நிச்சயம் சரியான பொருளை அறியமுடியும். நீங்கள் அதையும் நம்பமாட்டீர்கள் அவர் அப்போஸ்தலருக்கு மட்டும்தான் வெளிப்பாடு கொடுப்பார் மற்றவர்களை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார் என்பீர்கள். (அதற்க்கெல்லாம் எந்த வசன ஆதாரமும் கிடையாது) கொடுக்கமாட்டார் என்று அவிசுவாசம் இருந்தால் எப்படி அவரை அறியமுடியும்?
எல்லாவற்றிக்குமே உலகில் டூப்ளிகேட் இருப்பதுபோல ஆவியானவருக்கும் ஒரு டூப்ளிகேட் ஒன்றை சாத்தான் உருவாக்கி வைத்துள்ளான். அதுவும் உலகில் கிடந்தது குழப்புவதால் உண்மை ஆவியானவரை பலர் அடையாளம் காட்டுவதில்லை. இவ்விஷயத்தில் சிலரை இடற செய்து அவன் நிச்சயம் வெற்றி பெற்றுக்கிறான். மற்றபடி நீங்கள் கருதுவதுபோல் சிலர் தவறாக சொல்கிறார்கள் என்று ஆவியானவர் வெளிப்பாடே இல்லை என்ற முடிவுக்கு வருவது நியாயமல்ல.
யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்தஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து என்று இயேசு சொல்லியிருக்கிறார் அது நிச்சயம் நிறைவேறும் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே நான் முடிவெடுக்கிறேன் எனவே வெறும் மூளை அறிவால் அறிவியல் புத்தகத்தை ஆராயலாம் ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை ஆராய்து வரும் போதனை நிச்சயம் இடறுத்தலுக்கே வழிவகுக்கும்.
முதலில் ஆதி சபையில் ஒருமனப்பட்டு ஜெபித்ததுபோல் ஜெபித்து பரிசுத்த ஆவியானவரை பெறுங்கள் பிறகு வேதத்தை ஆராயுங்கள் எல்லாமே புதியதாக தெரியும்.
நன்றி!
-- Edited by SUNDAR on Thursday 28th of January 2010 03:42:56 PM
-- Edited by SUNDAR on Thursday 28th of January 2010 03:50:29 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)