வேதத்தில் உள்ள பலவிதமான காரியங்களை குறித்து கிறிஸ்தவத்தில் நாம் வாதிட்டு வருகிறாம். இதற்க்கு ஒரு முடிவே இல்லை! இவையெல்லாம் எவ்வளவுதூரம் நமக்கு பயனுள்ளதாக அமையும் என்று அனுமானிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அனேக சகோதரர்கள் தாங்கள் கொண்டிருக்கும் கொள்கையில் ஒரு சிறிய மாற்றம்கூட செய்ய முன்வருவதில்லை. அப்படியிருக்க அனேக விவாதங்கள் விழலுக்கு இழைத்த நீராகவே போகலாம் என்றே நான் கருதுகிறேன். ஆகினும் சிலருக்கு மனதில் எழும் சந்தேகங்கள் தீரவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது!
ஆனால் எல்லோருக்கும் மிகவும் முக்கியமான ஒரு செய்தியை நான் இங்கு பதிவிட விரும்புகிறேன் அதுதான் சாத்தானால் செய்யமுடியாதது என்னவென்பது!
"பிசாசின் கிரியைகளை அழிக்கவே இயேசு வந்தார்" என்பது அனைவரும் அறிந்ததே அந்த பிசாசால் எதை செய்ய முடியாது? பிசாசின் தூண்டுதலால் நாம் செய்யும் தவறுகளை விட்டு வெளியே வந்து, இயேசுவின் சாயலை நாம் தரித்திருக்கிரோமா என்பதைதான் நாம் முக்கியமாக ஆராயவேண்டும்.
சாத்தானால் திரித்துவம் உண்டு என்றோ இல்லை என்றோ வாதிட முடியாதா?
சாத்தானால் ஞானஸ்தானம் எடுக்க முடியாதா?
சாத்தானால் அந்நிய பாஷை என்ற பெயரில் "ரீகபலபா ஷீகபலபா" என்று பேச முடியாதா?
சாத்தானால் சுவிசேஷம் சொல்ல முடியாதா?
சாத்தானால் உபவாசம் இருக்க முடியாதா?
சாத்தானால் வாரம் தவறாமல் சர்ச்சுக்கு போக முடியாதா?
சாத்தானால் காணிக்கை போடமுடியாதா
சாத்தானால் வேத வசனங்களை எடுத்து போதிக்க முடியாதா?
இவை எல்லாமே சாத்தானால் செய்யமுடியும்! இன்னும் எத்தனையோ கூட அவனால் செய்ய முடியும்! அவனால் அவனால் செய்யமுடியாதது ஒன்றே ஒன்றுதான்! அதுதான் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடப்பது!
ஆதியில் இருந்து ஆண்டவரின் வார்த்தைக்கு அவன் எதிரியாக இருப்பதால். அதை மட்டும்தான் அவனால் செய்யமுடியாது. செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுப்பதுதான் அவனின் முக்கிய பணி. அப்படி அவன் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்துவிட்டால் பிறகு அவன் பெயர் சாத்தான் இல்லை!
எனவே அன்பானவர்களே மேலே பட்டியலிட்ட எந்த ஒன்றையும் செய்வது நல்லதுதான் ஆனால் செய்வதால் பெரிய காரியம் எதுவும் நடந்துவிடபோவது இல்லை! ஆண்டவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சரியாக அறிந்து அதன் அடிப்படையில் உங்கள் நடைமுறை வாழ்க்கையை அமையுங்கள். சாத்தானின் கிரியைகளை அழியுங்கள்! இயேசுவை உங்களில் பிரதிபலியுங்கள்! அது ஒன்றே தேவன் நம்மிடம் ஆசிக்கும் முக்கியமான எதிர்பார்ப்பு!
14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்
-- Edited by SUNDAR on Friday 29th of January 2010 11:07:04 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாத்தானால் திரித்துவம் உண்டு என்றோ இல்லை என்றோ வாதிட முடியாதா?
சாத்தானால் ஞானஸ்தானம் எடுக்க முடியாதா?
சாத்தானால் அந்நிய பாஷை என்ற பெயரில் "ரீகபலபா ஷீகபலபா" என்று பேச முடியாதா?
சாத்தானால் சுவிசேஷம் சொல்ல முடியாதா?
சாத்தானால் உபவாசம் இருக்க முடியாதா?
சாத்தானால் வாரம் தவறாமல் சர்ச்சுக்கு போக முடியாதா?
சாத்தானால் காணிக்கை போடமுடியாதா சாத்தானால் வேத வசனங்களை எடுத்து போதிக்க முடியாதா?
இது குறித்து நான் கவனித்து பார்த்தபோது, இங்கே பட்டியலிடப்பட்டுள்ள பல செயல்களை செய்ய மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கும் பலர் வேத வார்த்தைகள்படி தேவனுக்கு கீழ்படிந்து வாழ்வதற்கு எந்த ஜாக்கிரதையும் இல்லாமல் இருப்பது உண்மையே.
மிகப்பெரிய ஊழியக்காரர் என்று தங்களை சொல்லி கொள்பவர்கள் பொய் சொல்வதைகூட விட்டொழிக்க பிரயாசம் எடுக்காமல் இருப்பதை நாம் பார்க்கலாம்.
"எல்லா மனுஷர்களும் வழிவிலக ஏகமாய் கெட்டு போனார்கள்" என்று வேதம் சொல்வதால், ஒருவேளை சாத்தானால் செய்ய முடியாததை கெட்டுபோன மனுஷனாலும் செய்யமுடியாதோ என்னவோ?
சாத்தானால் திரித்துவம் உண்டு என்றோ இல்லை என்றோ வாதிட முடியாதா?
சாத்தானால் ஞானஸ்தானம் எடுக்க முடியாதா?
சாத்தானால் அந்நிய பாஷை என்ற பெயரில் "ரீகபலபா ஷீகபலபா" என்று பேச முடியாதா?
சாத்தானால் சுவிசேஷம் சொல்ல முடியாதா?
சாத்தானால் உபவாசம் இருக்க முடியாதா?
சாத்தானால் வாரம் தவறாமல் சர்ச்சுக்கு போக முடியாதா?
சாத்தானால் காணிக்கை போடமுடியாதா சாத்தானால் வேத வசனங்களை எடுத்து போதிக்க முடியாதா?
"இவை எல்லாமே சாத்தானால் செய்யமுடியும்! இன்னும் எத்தனையோ கூட அவனால் செய்ய முடியும்"
இந்த காரியங்களை குறித்து வேத ஆதாரத்துடன் விளக்குங்களேன் சகோதரர்களே
சகோதரர் அவர்களே!
சாத்தானை பற்றி வேதம் சொல்லும்போது இவ்வாறு சொல்கிறது
யோவான் 8:44சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன்பொய்யனும்பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
அதாவது சாத்தான் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்
இங்கு யார் பொய்யன்? என்று பார்த்தால்
I யோவான் 2:4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடையகற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
இந்நிலையில் இயேசுவின் வார்த்தைகளை கேட்டும்/அறிந்திருந்தும்
அவைகளின்படி செய்யாதவன் அல்லது செய்ய எந்த முயற்ச்சியும் எடுக்காத எல்லோருமே பொய்யன் என்றும் அவன் சாத்தானின் கையாள் என்றும் பொருள் ஆகிவிடுகிறது.
இந்நிலையில் நான் பார்க்கும் அனேக கிறிஸ்தவர்கள் ஞானஸ்தானம் பெற்றுவிட்டு மேலே நான் பட்டியலிட்டுள்ள அந்நிய பாஷை பேசுதல்,
திரித்துவத்தை நம்புதல்/சபைக்கு போகுதல்/ உபவாசம் இருத்தல்/ வசனத்தை எடுத்து போதித்தல் போன்ற காரியங்களை எல்லாம் செய்து கொண்டு, இயேசுவின் வார்த்தைகள்படி வாழ முயலாமல் அட்லீஸ்ட் பொய் பேசுவதைகூட விட்டொழிக்க முடியாமல், உள்ளதை உள்ளது என்றுகூட சொல்லாமல் கிறிஸ்த்தவ வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்கள் எல்லோருமே வேத வசனத்தின் அடிப்படையில் பொய்யர்கள் அல்லது சாத்தானின் காரியத்தை செய்பவர்கள் என்றே தீர்மானிக்க முடியும். இப்படிபட்டவர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அவை எல்லாம் சாத்தானால் செய்ய முடிந்த காரியங்கள் என்றே பொருள்படும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாத்தானை பற்றி வேதம் சொல்லும்போது இவ்வாறு சொல்கிறது
யோவான் 8:44சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன்பொய்யனும்பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
அதாவது சாத்தான் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்
இங்கு யார் பொய்யன்? என்று பார்த்தால்
I யோவான் 2:4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடையகற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
இந்நிலையில் இயேசுவின் வார்த்தைகளை கேட்டும்/அறிந்திருந்தும்
அவைகளின்படி செய்யாதவன் அல்லது செய்ய எந்த முயற்ச்சியும் எடுக்காத எல்லோருமே பொய்யன் என்றும் அவன் சாத்தானின் கையாள் என்றும் பொருள் ஆகிவிடுகிறது.
இந்நிலையில் நான் பார்க்கும் அனேக கிறிஸ்தவர்கள் ஞானஸ்தானம் பெற்றுவிட்டு மேலே நான் பட்டியலிட்டுள்ள அந்நிய பாஷை பேசுதல்,
திரித்துவத்தை நம்புதல்/சபைக்கு போகுதல்/ உபவாசம் இருத்தல்/ வசனத்தை எடுத்து போதித்தல் போன்ற காரியங்களை எல்லாம் செய்து கொண்டு, இயேசுவின் வார்த்தைகள்படி வாழ முயலாமல் அட்லீஸ்ட் பொய் பேசுவதைகூட விட்டொழிக்க முடியாமல், உள்ளதை உள்ளது என்றுகூட சொல்லாமல் கிறிஸ்த்தவ வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்கள் எல்லோருமே வேத வசனத்தின் அடிப்படையில் பொய்யர்கள் அல்லது சாத்தானின் காரியத்தை செய்பவர்கள் என்றே தீர்மானிக்க முடியும். இப்படிபட்டவர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அவை எல்லாம் சாத்தானால் செய்ய முடிந்த காரியங்கள் என்றே பொருள்படும்.
நன்றி சகோதரரே மிக சரியான சாட்டையடி பதில் நான் உங்களை குற்றப்படுத்த கேட்கவில்லை நான் வளர்ந்துவரும் விசுவாசி ஆகையால் தெரிந்து கொள்ளவே கேட்டேன்.