In the emergency condition of job , instead of consoling him or healing him Why God gives detailed explanation about HIM and HIS creation to job? Is it the time to explain about HIS work?
This question will come to somebody’s mind while reading the book of Job. One can say it is because Job 33-8 to 11, 33-13, job 34-5,9 , job 35-2,3 the words spoken by Job about his sinless condition, God’s injustice on him, absence of God to reveal about his future (although he reveled it to him through dreams), and his thinking about God (“it is not good to follow God”)’
Through Eligoo God point out job’s incorrect words and explained about his greatness and make him to realize about his faulty words.
Even then God became so much angry about Job and start explaining about his creation. Why?
This is because the words spoken by job on verse job 28-1 to 11
(I request moderator to post these verses here in tamil) One can find nothing wrong in these verses but it is the word spoken by job outside and the words which he not spoken and came to his mind was,
“One day our humans will find cure for all sufferings like which I am experiencing. On that day there is no need for me to ask God and to depend on Him. Because of my sufferings unnecessarily my relation with God gets spoiled. But on that day there is no need for that”
Job represents humanity and through Job, Humanity challenging God about its technology, science and its achievement.
From Job 36-27 to 41 God explaining about Himself , His greatness and about his creation then he asks Job “is it possible by you” the word “you” here indicates the scientist, people, technology who are all proud about their achievement and by this refusing the God’s power.
God challenging humanity on its achievement, science and technology
In the book of Job we can find that
God challenged satan and humanity
Satan challenged God and humanity
Humanity challenged God and satan
The result of this challenge is
God is the winner on both sides
Satan is the loser on both sides
Man is the winner over satan and become loser by God.
-- Edited by இறைநேசன் on Friday 5th of February 2010 05:45:58 PM
-- Edited by இறைநேசன் on Tuesday 9th of February 2010 03:34:47 PM
Man is the winner over satan and become loser by God.
மிக அருமையான ஆராய்ச்சி கருத்தை கூறியுள்ளீர்கள் சந்தோஷ் அவர்களே! உலகின் நிலை மற்றும் இறுதி முடிவு என்னவென்பதை அன்றே யோபு புத்தகம் தெளிவாக விளக்கியிருக்கிறது. உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் யோபுவின் பாடுகளை தியானித்து தனியாக ஒரு புத்தகமே எழுதலாம் போல் இருக்கிறது.
உங்கள் கோணத்தில் யாரும் சிந்தித்ததாக இதுவரை நான் கேள்விப்படவில்லை.
உங்கள் கருத்துக்கள் எல்லாமே மிகுந்த அறிவுபூர்வமாக வேறுபட்ட கோணத்தில் இருப்பதை அறியமுடிகிறது
1 வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு. 2 இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும். 3 மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான். 4 கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான். 5 பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினதுபோலிருக்கும். 6 அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும். 7 ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை; 8 துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை. 9 அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான். 10 கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும். 11 ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
இங்கு தேவன் தனுடைய வல்லமையை சொல்லி யோபுவை பார்த்து கேட்கும் கேள்வி
4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. 5 அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. 6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?
என்பதில் ஆரம்பித்து
1 பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக: 2 சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்
அவரது பதிவில் உள்ள கருத்தை சுருக்கமாக சொன்னால்
இறைவன் மனிதன் சாத்தான் இந்த மூன்று சக்திகளுக்கும் இடையில் நடக்கும் மும்முனை போராட்டத்தை குறிப்பதுதான் யோபுவின் சரித்திரம்
சாத்தான் தனது சக்தியால் மனிதனுக்கும் கடவுளுக்கும் சவால் விடுகிறான்
மனிதஇனம் தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளால் கடவுளுக்கும் சாத்தானுக்கும் சவால் விடுகிறது கடவுள் சாத்தனுக்கும் மனிதனுக்கும் சவால் விடுகிறார்
இப்போராட்டத்தின் இறுதி முடிவு
கடவுள் மனிதன் மற்றும் சாத்தான் இரண்டையுமே ஜெயிக்கிறார்
யோபுவின் சரித்திரத்தை நன்கு ஆராய்ந்து சிறந்த கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள், பாரட்டுக்கள்.
குறிப்பாக பின்வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.
//In the book of Job we can find that
1. God challenged satan and humanity 2. Satan challenged God and humanity 3. Humanity challenged God and satan
The result of this challenge is
1. God is the winner on both sides 2. Satan is the loser on both sides 3. Man is the winner over satan and become loser by God.//
உங்களின் இக்கருத்துகளில், மனிதன் தேவனிடம் சவால் விடுகிறான் எனும் கருத்துக்கு ஆதாரமாக யோபு 28:1-11 வசனங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள், நல்லது. ஆனால், அவற்றைத் தொடர்ந்து யோபு கூறுவதையும் சற்று படியுங்கள்.
யோபு 28:12-16,20,21,23,24 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.
ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது. ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும். அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
யோபுவைப் பொறுத்தவரை அவர் மனித ஞானத்தால் தேவனுக்கு சவால் விடவில்லை. “மனித ஞானம் தேவனுக்கு சவால் விடக்கூடியதாக இருப்பதுபோல் தோன்றுகிறது, ஆனால் மனித ஞானத்தால் தேவனிடம் சவால் விட முடியாது” என்பதே யோபுவின் தீர்ப்பு. மேலும், “மனிதனால் அறியமுடியாத அனைத்து விஷயங்களையும் தேவன் அறிவார்” என்பதும் யோபுவின் தீர்ப்பாக உள்ளது.
நான் அறிந்தவரை யோபுவிடம் இருந்த ஒரே குறை, தனது நீதி நியாயங்களைச் சொல்லி தனது நண்பர்களுடன் போராடியதன் மூலம், மறைமுகமாக தேவனோடு அவர் வழக்காடியதுதான்.
தனது உபத்திரவங்களுக்கு, தான் அறியாத ஒரு காரணம் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என விட்டுவிடாமல், எப்படியாவது அதற்கான காரணத்தை அறிந்தேயாக வேண்டும் என முயற்சித்து, தன் முயற்சியால் அக்காரணத்தை அறியமுடியாமற்போனதும், காரணமின்றி தேவன் தன்னை உபத்திரவப்படுத்துகிறார் என நினைத்ததுதான் அவரது குறை.
ஆனால், அவரை இவ்வாறு நினைக்கத் தூண்டியவர்கள், அவரது நண்பர்களே.
யோபுவின் சரித்திரத்தைப் படிக்கிற நமக்கு, சாத்தானின் சவால்தான் யோபுவின் உபத்திரவங்களுக்குக் காரணம் என்பதை அறியமுடிகிறது. ஆனால் யோபுவால் இதைக் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. அவரது நிலை நிச்சயம் பரிதாபமான ஒன்றுதான்.
எனவேதான் யோபுவின் அறிவுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் உண்டு என்றும், அம்மாதிரி விஷயங்களை அறிந்தேயாக வேண்டும் என அவர் போரடவேண்டியதில்லை என்றும் சொல்லி யோபுவுக்குப் புத்திபுகட்டிய தேவன், யோபுவுக்கு தண்டனையளிக்காமல், அவரை மேலும் அதிகமாக ஆசீர்வதித்தார்.
சந்தோஷ் அவர்களே! நீங்கள் கூறியபடி, மனிதன் தேவனிடம் சவால் விடுகிறான் என்பது மெய்தான்; ஆனால் யோபு தேவனிடம் சவால் விடவில்லை.
சாத்தானிடமும் யோபு நேரடியாக சவால் விடவில்லை. சொல்லப்போனால், சாத்தானைத் தவிர வேறு யாரும் யாரிடமும் சவால் விடவில்லை. யோபுவைப் பகடைக் காயாக்கி, சாத்தான் தேவனிடம் சவால் விட்டான் என்பது மட்டுமே உண்மை. யோபுவைக் குறித்து தேவன் சொன்னதை பொய்யாக்க வேண்டும் என்பதே சாத்தானின் நோக்கம்.
சாத்தானின் சவாலை தேவன் ஏற்றுக்கொண்டார். ஆம், யோபுவைக் குறித்து தேவன் சொன்னது சொன்னதுதான். அதை மாற்ற சாத்தான் என்ன முயன்றாலும் நடவாது என்பதை யோபுவின் சரித்திர முடிவில் நாம் அறிகிறோம்.
யோபுவின் பாடுகளுக்கு யோபுவே காரணம் எனக் கூறும் சகோ.சுந்தர் அவர்களே! இவ்வசனத்தைப் படியுங்கள்.
யோபு 2:3 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
கவனிக்க: முகாந்தரமில்லாமல், அதாவது யோபுவை உபத்திரவப்படுத்த காரணம் எதுவும் இல்லாமல்.
//யோபுவின் பாடுகளுக்கு யோபுவே காரணம் எனக் கூறும் சகோ.சுந்தர் அவர்களே! இவ்வசனத்தைப் படியுங்கள்.
யோபு 2:3 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
கவனிக்க: முகாந்தரமில்லாமல், அதாவது யோபுவை உபத்திரவப்படுத்த காரணம் எதுவும் இல்லாமல்.//..........
அன்பு அவர்களே'
யோபுவின் பாடுகளுக்கு யோபுவே காரணம் 1 . யோபு- 9 - 19 , பெலத்தை பார்த்தல் அவரே பெலத்தவர், நியாயத்தை பார்த்தல் என் பட்ச்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார் ?
2 . யோபு-40 - 8 நி என் நியாயத்தை அவமாக்குவாயோ? நி உன்னை நிதிமானாய் அக்கிகொள்ளும் படிக்கி என்மேல் குற்றம் சுமத்துவாயோ?
இந்த வசனத்தின் மூலம் யோபுவின் தவறு என்ன - தன் பார்வைக்கு நிதிமானாய் இருந்தது தான் அதன் கரணம்
நீதிமொழிகளில் கூட ஒரு வசனம் குறபட்டுள்ளது மிஞ்சின நீதிமானாய் இராதே என்று மிஞ்சின நீதிமான என்றால் - தேவன் பேரில் குற்றம் பிடிகிறவனும் தன்பார்வைகு நீதிமானாய் இருபவனே தான் மிஞ்சின நீதிமான்
என்னுடைய கருது படி யோபு பாடுகளுக்கு அவன்தான் காரணம் (தன் பார்வைக்கு நிதிமானாய் இருந்தது ) என்பது என்னுடைய கருத்து
தேவன் ஒருவனையும் போல்லாகினால் சோதிப்பவர் அல்ல
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
/// முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.////
முகாந்திரம் இல்லாமல்தான் சாத்தான் யோபுவை சோதிக்கும்படி ஏவினான்என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் கர்த்தர் அவனை முகாதிரம் இல்லாமல் சோதித்தார் என்று வசனம் சொல்லவில்லை.
"நீ என்னை முகாந்திரம் இல்லாமல் சோதிக்க எவினாய், ஆனால் அவன் தன உத்த மத்தில் உறுதியாய் இருக்கிறான்"
இங்கு தேவன் அவனை முகாந்திரம் இல்லாமல் சோதித்தார் என்று பொருள்கொள்ள முடியாது!
இங்கு எனது கருத்து என்னவென்றால் தேவன் செய்யும் எவ்வித செயலுக்கும் ஒரு அடிப்படை காரியம் ஒன்று இருக்கும் என்பதுதான். இரண்டாவது தேவன் செய்யும் செயல் எல்லாவற்றிலுமே எவ்விதத்திலும் குற்றமற்றவர். அவரிடம் சென்று நம் நடந்த துன்பத்துக்கு காரணம் கேட்போமாயின் நிச்சயம் நீதியான காரணம் கிடைக்கும். "சாத்தான் சோதிக்க சொன்னான் நான் சோதித்துவிட்டேன்" என்பது போன்ற பதிலை அவர் ஒருநாளும் தரமாட்டார். நடக்கும் எந்த செயலுக்கும் சாத்தான் பொறுப்பே அல்ல! சாத்தானை சோதிக்க அனுமதித்த தேவனே பொறுப்பு. அவ்வாறு அவர் அனுமதித்தற்கு நிச்சயம் நீதியான காரணம் இருக்கும் ஏனெனில் அவர் மகாநீதிபரர்! சர்வலோக நியாயாதிபதி! அவரிடத்தில் நியாயகேடு இல்லை!
நம்மை எடுத்துகொள்வோம், நாம் இதுபோல் செய்வோமா? நம் எதிரி ஒருவன் வந்து "எந்த ஒரு காரணமும் இல்லாமல் உன் பிள்ளையை கொடு நான் பிரம்பை வைத்து அடிக்கிறேன் அவன் உன்னை திட்டுகிறான இல்லையா பார்" என்று கேட்டால் உடனே கொடுப்போமா?
நாமே கொடுக்கமாட்டோம். அப்படியிருக்கையில் தாய் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று சொன்ன நமது தேவன் காரணகாரியம் இல்லாமல் எதிரியாகிய சாத்தான் கையில் கொடுத்திருக்கமாடார் என்பதே எனது கருத்து!
பூமியில் ஒருவன் மனிதனாக பிறந்துவிட்டாலே அவன் பாவிதான் எல்லோரும் பாவம் செய்து ஏகமாய் கெட்டுப்போம், ஒரு பாவமும் செய்யாத நீதிமான் ஒருவரும் இல்லை என்ற வேதத்தின் கருத்து அடிப்படையிலும், யோபு எதோ ஒரு பாவத்துக்காகவே (அவன் குறிப்பிடுவதுபோல அது சிறுவயது பாவமாக கூட இருக்கலாம்) தண்டிக்கப்பட்டிருப்பான் என்றே நானும் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///////பூமியில் ஒருவன் மனிதனாக பிறந்துவிட்டாலே அவன் பாவிதான் எல்லோரும் பாவம் செய்து ஏகமாய் கெட்டுப்போம், ஒரு பாவமும் செய்யாத நீதிமான் ஒருவரும் இல்லை என்ற வேதத்தின் கருத்து அடிப்படையிலும், யோபு எதோ ஒரு பாவத்துக்காகவே (அவன் குறிப்பிடுவதுபோல அது சிறுவயது பாவமாக கூட இருக்கலாம்) தண்டிக்கப்பட்டிருப்பான் என்றே நானும் கருதுகிறேன். //////
யோபு - 32
1. யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
2. அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம் மூண்டது; யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது
யோபு - 33
8. நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
9. நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
10. இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்
யோபு 34
5. யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,
17. நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
மேலே குறிப்பிட்டு உள்ள வசனங்களின் படி பார்த்தால் அவனுடைய தவறு தெரிய வரும்
பவுல் கூட தன் வாக்கியத்தில் என்னிடத்தில் நான் யாதொரு குற்றமும் காணவில்லை
ஆனாலும் என்னை நியாம் விசாரிக்கிறவர் கர்த்தரே என்று கூறினார்
தேவன் யோபுவிடம் பேசும் பொழுது கூட
. யோபு-40 - 8 நி என் நியாயத்தை அவமாக்குவாயோ? நி உன்னை நிதிமானாய் அக்கிகொள்ளும் படிக்கி என்மேல் குற்றம் சுமத்துவாயோ?
தன் பார்வைக்கு நீதிமானாய் இருந்ததே அதன் காரணம்
மிஞ்சின நீதிமானாய் இருந்ததே அவன் பாடுகளுக்கு காரணம்
தேவன் நீதியும் நியாயமும் முள்ளவர்
தீங்குக்கு மனஸ்தாபம் படுகிற கர்த்தர் அவர் .................................
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 4th of March 2010 08:33:25 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)