ஒரு தாய்க்கு எத்தனையோ தேவைகள் வேலைகள் பிரச்சனைகள் துன்பங்கள் இருந்தாலும் தன் பிள்ளைகளை கருத்துடன் பாதுகாப்பதைதான் தனது முதல் கடமையாக கொள்வாள். பிள்ளைகளின் தேவையை பூர்த்திசய்வதிலும் பிள்ளைகளை கருத்துடன் கண்காணிப்பதிலும் தாயிக்கு ஈடுஇணை யாரும் இல்லை எனலாம்!
ஆனால் நமது ஆண்டவர் "உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என் உள்ளங்கையில் உன்னை வரைத்திருக்கிறேன்" என்ற மேலான வார்த்தை ஒன்றை சொல்லி பெற்றதாயைவிட மனித குலத்தின்மேல் அவர் மிகுந்த கரிசனை உள்ளவர் என்பதை நமக்கு தெரிவிக்கிறார்.
இப்படி நம்மேல் மிகுத்த கரிசனையுள்ள தேவன் உலகில் என்ன காரியங்களை செய்தாலும் அது எல்லோருடைய நன்மைக்காகத்தான் இருக்கும் என்பதை நாம் மனதார அறியவேண்டும்.
ஒருநாள் ஞாயிற்று கிழமை தூத்துக்குடியில் உள்ள மாரநாத சபையில் வார ஆராதனைக்கு செல்ல நேர்ந்தது. அந்த நாட்களில் வங்ககடலில் கடுமையான புயல் ஓன்று உருவாகி அது தூத்துக்குடி பக்கம் கரையை கடக்கபோவதாக வானிலை எச்சரிக்கை இருந்தது. சபையில் கூட்டம் நடந்துகோண்டிருக்கும்போது வானம் மிகவும் இருட்டிக்கொண்டு கடுமையான காற்று வீச ஆரம்பித்தது.
அதைபார்த்த சபை பாஸ்டர் உடனே, "ஆண்டவரே இந்த புயல் வீசுவதை தடுக்க வேண்டும் என்றும் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது" என்றும் ஜெபிக்க ஆரம்பிக்க எல்லா விசுவாசிகளும் அதற்காக ஜெபிக்க ஆரம்பித்தனர்.
அப்பொழுது ஆண்டவர் என்னிடம் இந்த ஜனங்கள் செய்யும்செயலை பார்த்தாயா? எந்த ஒரு செயலை நான் நடப்பிக்க நினைத்தாலும் அது நடக்கவேண்டாம் என்று போராடி ஜெபிக்கின்றனர் அப்படி செய்தால் என் சித்தம் நிறைவேறுவ தெப்படி என்று வருந்தினார்!
"ஒருவரும் கெட்டுபோவது தேவனின் சித்தம் அல்ல" என்றும் "துன்மார்க்கனின் சாவை நான் விரும்புவதில்லை என்றும்" சொல்லும் தேவன், எல்லோரும் மீட்கப்படவேண்டும் என்ற நோக்கத்திலேயே நீடிய சாந்தத்தோடு கார்த்திருக்கிறார் என்றே வேதம் சொல்கிறது.
அனால் இன்று கிறிஸ்த்தவ வட்டாரங்களில் அநேகர் தாங்கள்தான் மனுகுலத்தை இரட்சிக்கவந்த மகாபரிசுத்தர் போன்று நடந்துகொள்வதை பல இடங்களில் பார்க்கமுடியும். அவர்கள் பண்ணும் ஜெபங்களும் வேண்டுதல்களும் ஆண்டவருக்கு கட்டளை இடுவதைப்போல் இருப்பதை அறியமுடியும். தாங்கள் பிடித்த காரியங்கள் நிறைவேறுவதற்காக உபவாசஜெபம், மற்றாட்டு ஜெபம் என்று விதவிதமான ஜெபங்களை நடத்துகின்றனர்.
மாற்றமுடியாத பல்வேறு பிரச்சனைகளுக்கும், உலக சமாதானத்துக்கும், போர் மற்றும் இயற்க்கை பேரழிவுகளுக்காகவும் பாரத்தோடு ஜெபிக்கவேண்டியது தேவைதான், அது பிற மனிதர்கள்மேல் நமக்கிருக்கும் கரிசனையை காட்டுகிறது ! ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவே கூடாது என்றும் அதற்காக உபவாசியுங்கள் ஆண்டவர் பாதத்தில் விழுந்துகிடங்கள் என்றெல்லாம் போதிப்பது வேதத்துக்கு புறம்பானது என்றே நான் கருதுகிறேன்.
இய்சுவின் பாடுகள் மிகவும் கசப்பானதுதான் அதை அறிந்து அவர்மீதுள்ள கரிசனயில்தான் பேதுரு ஆண்டவரே இது உமக்கு சம்பவிக்ககூடாது என்று சொன்னான். ஆனால் அவனைப்பார்த்து இயேசு சொன்ன பதில் "அப்பாலே போ சாத்தானே " என்பதுதான்.
தேவனின் சித்தம் நிறைவேறுவதற்கு யார் யார் இடையூறாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே சாத்தான் தான்!
அவ்வகையில் பார்க்கும்போது இன்று அனேக போதகர்கள், உலக ச்மாதனத்துக்காகவும், நோய் நொடிகளில் இடுந்து விடுதலைக்காகவும், இயற்க்கை பேரழிவுகள் நடக்காமல் இருப்பதற்காகவும் தமிழ் நாடு செழிப்பதர்க்காகவும், நல்லாட்சி மலரவேண்டும், மது கடைகள் மூடவேண்டும் என்றும் இப்படி எத்தனையோ நல்ல காரியங்களுக்காக மற்றடி ஜெபித்து வருகின்றனர்.
இவையெல்லாம் நிச்சயம் நல்ல காரியங்கள்தான்
ஆனால் இன்னும் ஒன்றை நாம் கட்டாயம் செய்யவேண்டும் எந்த விதமான ஜெபமாக வேண்டுதலாக இருந்தாலும் அதை செய்து முடிக்கும்போது ஆண்டவரே இதெல்லாம் என்னுடைய அறிவுக்கு எட்டிய வேண்டுதல்கள், ஆகினும் உம்முடைய சித்தம் என்று ஓன்று நிறைவேற வேண்டியிருக்கறது, எனவே என்னுடைய வேண்டுதல்கள் எனக்கு பெரிதாக இருந்தாலும் உம்முடைய சித்தம்தான் நிறைவேறவேண்டும் என்று ஜெபித்து முடித்தால் தேவன் தனது திட்டத்தை நிறைவேற்ற அது வழிசெய்யும்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தனக்கு வரப்போகும் பாடுகள் குறித்து கலக்கமடைத்து
39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்;
என்று சொல்லி தனது வேண்டுகோளை தேவனிடம் வைக்கிறார் ஆகினும் இறுதியில்
ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது
என்று சொல்லி முடிக்கிறார்!
அவர் இவ்வாறு இறுதிமுடிவை தேவன் கையில் ஒப்படைத்ததால்தான் இன்று மனிதகுலமே பாவத்தில் இருந்து மாபெரும் இரட்சிப்பை பெரும் ஒரு பாக்கியத்தை பெற்றது.
எனவே அன்பானவர்களே! நீங்கள் என்ன வேண்டுமானாலும் ஜெபம் பண்ணுங்கள் உங்கள் இருதய நினைவுகளை எல்லாம் ஆண்டவர் பாதத்தில் ஊற்றுங்கள். ஆனால் இறுதியில் என்னுடைய வேடுதல்களை உமது முன் வைத்துவிட்டேன் ஆகினும் எனது சித்தப்படி அல்ல உம்முடைய சித்தமே ஆகக்கடவது என்று ஜெபித்து முடியுங்கள். அது தேவனின் சித்தம் விரைவில் நிறைவேர வழிசெய்யும்.
-- Edited by SUNDAR on Saturday 30th of January 2010 03:20:28 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)