தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் உள்ள சுந்தரின் கவிதை மீள் பதிவு!
பாரிலுள்ள மனிதருக்காய் பரிந்து வந்த பரிசுத்தரை சிறிதேனும் ஈரமின்றி சிகப்பு துணியால் சுற்றிவைத்து சிரசிலே முள்வைத்து சிலுவையில் அடித்தபோதும் சித்திரவதை செய்தபோதும் சின்னாபின்னம் ஆக்கியபோதும்
இறைமகனாம் இயேசுநாதர் இவர்களுக்கு மன்னியுமென்று ஏங்கி அங்கே வேண்டிநிற்க என்னதான் காரணம் என்றே எத்தனயோ முறைகள் நானும் எண்ணித்தான் பார்த்ததுண்டு
வஞ்சகபேயின் வக்கிரபிடியில் வலுவிழந்த மனித குலம் அஞ்சாமல் அனுதினமும் அடிக்கின்ற அகோரகூத்து கொஞ்சமில்லை நஞ்சமில்லை வஞ்சத்துக்கு பஞ்சமில்லை
ஆண்டவராம் இயேசுவின் அதீத கண்ணுக்கு அம்மனிதர் தெரியவில்லை அவர்கள் மேல் குற்றமில்லை அனைவரையும் ஆட்டிவைத்த அகங்காரப்பேய் தெரிததாலே அவ்வாறு இயம்பினார் அனைவருக்கும் வேண்டினார்
சாத்தானின் பிடியிலிருந்து சக மனிதர் மீண்டுவிட்டால் சங்கடங்கள் தீர்ந்துவிடும் சகலமும் புதிதாகும் வான மண்டலத்தின் வாழ்ந்துவரும் பொல்லாத ஆவிகளை ஜெபித்து நாம் விரட்ட வேண்டும் எதிர்த்து தினம் நிற்க்கவேண்டும் சகலவித காவலோடும் சத்தியத்தை காக்கவேண்டும் சாவை வென்று மீண்டும் வந்த சத்தியரின் துணையோடு சகலத்தையும் மீட்கவேண்டும் சங்கடங்கள் தீரவேண்டும்! அன்புடன் SundarP