I moved one of your question posted under topic “Hindu religion” here, and I want to answer for that. I modified my answer for your question in my previous posting. Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering). I want to answer this question with Christian view and only to Christians. The question is about Narayana
The great indian rishis and sages perceived the nature, glory, greatness of true God and they recorded in some places of vedas, upanishads and in some puranas (story form) and based on their revealation they named the God. After that the true God is replaced with false gods and idol worship also came to practice.
Many Sanskrit names of God have meaning which gives the attributes oftrue God and one can use this names for trueGod. But at present who is there behind these names? It is not true God. For example a person named as Jesus after Jesus Christ, may be a great sinner in his life. So as far as name is concerned “Narayana”is correct and as for as image behind this concerned it is not correct.
I hope the answer for your question is available in bible verses
Ezekiel – 28 -1 to 19
After reading this you can identify one place and two creatures of God
The name of the place is : “Theeru” and persons are “AdiPati”
and raja
If anything revealed to you confirm with God otherwise leave it.
I also don’t know whether it is my assumption or God’s revelation.
And also read psalm 82 (1-8) in connection with the above verse
Do you have any contact with Mr.Alagan now? If you have contact convey this message.
-- Edited by இறைநேசன் on Friday 5th of February 2010 04:37:06 PM
//Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering).//
என்னுடைய பிரச்சினையை அழகான சிறியதொரு வாக்கியத்தினால் நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்; ஆம்,அநேக சமயங்களில் (எனக்கும்) இப்படித்தான் ஆகிவிடுகிறது;
இதுபோன்ற கலந்துரையாடல் தளத்தில் பதிலளிப்பது அல்லது ஒரு கருத்தை வெளியிடுவது புலி வாலைப் பிடித்த கதையாகி விடுகிறது; விடவும் முடியவில்லை,விட்டு ஓடவும் முடியவில்லை;அதுவும் 'நாயர் புலி வாலைப் பிடித்த கதை'யாக என்பார்கள்;அது என்ன என்று தெரியவில்லை;
இங்கே நண்பர் குறிப்பிட்ட வண்ணமாக இறைவனின் பொதுவான தன்மைகளை உணர்ந்தோர் அவரவர் வட்டார மொழிகளில் அவருக்கு பெயரிட்டு அழைத்து வழிபட்டிருக்கலாம்;
இதனை ஆதியாகமம்;4:26 லேயே வாசிக்கிறோம்,"சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்." {Gen 4:26 And to Seth, to him also there was born a son; and he called his name Enos: then began men to call upon the name of the LORD.
இதனைக் குறித்து ரோமருக்கு எழுதும்போது பவுல் இப்படியாகக் குறிப்பிடுகிறார், "தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.ரோமர்.1:19,20}"
"[Romans.1:19,20 "Because that which may be known of God is manifest in them; for God hath shewed it unto them.
For the invisible things of him from the creation of the world are clearly seen, being understood by the things that are made, even his eternal power and Godhead; so that they are without excuse:"]
அதுவரை யாரிடமும் வெளிப்பட்டிராத கர்த்தருடைய நாமத்தினை முதல் தலைமுறை மனிதர்கள் அறிந்திருந்து வழிபட்டது எப்படி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது; ஏனெனில் தேவன் தமது சிறப்பான பெயரையே மோசேக்குதான் முதன்முதலில் சொல்லுகிறார்;அப்படியானால் இங்கே யாரை (ஆதியாகமத்தை எழுதிய) மோசே குறிப்பிடுகிறார்?
எனவே நாம் அறிவதென்ன, இறைவனின் பொதுவான குணாதிசயம் அல்லது தன்மையின் அடிபடையில் அவரையறிந்தோர் வழிபட்ட முறையினையே வேதம் குறிப்பிடுகிறது;
இப்படி அவரவர் இஷ்டத்துக்கு அவரவர் மொழியில் தான் தோன்றித்தனமாக இறைவனை வழிபட்டாலும் அவர்கள் தேவனை அறியமுடியவில்லை என்கிறார்,பவுல்;
ஏனெனில் தேவன் பொதுவான தன்மையுடையவராக இருந்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் சிலருடன் இடைபட்டிருந்தார்; (உதாரணத்துக்கு நோவா,ஆபிரகாம்...)சிலருடைய தனிப்பட்ட அனுபவத்தினை பெரும்பான்மையோர் ஏற்கவில்லை; இதில் தேவனுடைய அனந்த ஞானம் வெளிப்பட்டது;
இதைக் குறித்து தீர்க்கனாகிய ஏசாயா இப்படி கேட்கிறார்,"எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?"(ஏசாயா.53:1)
பிரச்சினை என்னவென்றால் அநேகர் சொல்வதுபோல சர்வ வல்ல ஏக இறைவனின் தன்மையின் அடிப்படையிலும் பிரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான மொழிகளின் அடிப்படையிலும் இறைவனுக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழங்குவதும் அதன் பொருள் ஒன்றாகவே இருப்பது போலவும் தோன்றினாலும் தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுபவர்களுக்காகக் கொடுத்துள்ள அவருடைய விசேஷித்த நாமத்தை அறிந்து அதன் பெயரில் தொழுதுகொள்ளுவதே சாலச் சிறந்தது;
மற்றபடி இந்த சமுதாயத்தில் வழங்கப்படும் மற்ற பெயர்களுடன் நம்முடைய தேவனை ஒப்பிடுவோமானால் அவர்கள் சொல்லுவார்கள்,"நாம் வழிபடும் தேவன் ஒருவரே என்றால் எங்களுடைய கோவிலுக்கும் வந்து வழிபடுங்களேன்,நாங்களும் உங்கள் ஆலயத்துக்கு வருகிறோம்" என்பதாக;அப்போது வேறுபாடுகள் களையப்பட்ட ஒரே சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட்டுவிடும்;ஆனாலும் இதனால் தேவனுடைய சித்தம் பூரணப்படுமா என்பது மாபெரும் கேள்விக்குறியாகும்.
i hope the answer for your question is available in bible verses
Ezekiel – 28 -1 to 19
After reading this you can identify one place and two creatures of God
The name of the place is : “Theeru” and persons are “AdiPati”
and rajaIf anything revealed to you confirm with God otherwise leave it.I also don’t know whether it is my assumption or God’s revelation.
And also read psalm 82 (1-8) in connection with the above verse
Do you have any contact with Mr.Alagan now? If you have contact convey this message.
சகோதரர் சந்தோஷ் அவர்களே "வானத்திலும் பூமியிலும் தேவர்கள் எனப்படுபவர்கள் உண்டு" என்று பவுல் குறிப்பிடும் தேவர்களின் அடிப்படையில் தேவன் எனக்கு தெரியப்படுத்திய சில காரியங்களும்
சங்கீதகாரன் சொல்லும் மிக ஆழமான வசனமான
1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்
என்ற சங்கீதமும் மற்றும் தாங்கள் குறிப்பிட்ட எசேக்கியேல் இவைகளில் இருந்து, இந்து சாமிகளைபற்றியும் அவர்கள் அடைந்த நியாயதீர்ப்பு பற்றியும் பைபிள் மறைமுகமாக பல இடங்களில் விளக்குகிறது என்பதை தேவன் எனக்கு மற்றும் பல வசனங்களின் மூலம் விளக்கியுள்ளார். உங்களுக்கும் அதைபற்றிய வெளிப்பாடு இருப்பது எனக்கு புரிய வருகிறது.
அவர்கள் தேவர்களாக இருந்து மனுஷர்கள் போல ஆகிபோனவர்கள் என்றும் தொடர்ந்து வரும் வசனம் விளக்குகிறது. மேலும் நமது கர்த்தர் எல்லா தேவர்களிலும் உயர்ந்தவர் என்றும் மிகவும் பயப்படத்தக்கவர் என்றும் வசனங்கள் குறிப்பிடுகின்றன.
அதை அடிப்படையாக கொண்டு சில கருத்துக்களை வெளியிடலாம் என்று கருதியே அந்த திரியை ஆரம்பித்தேன் ஆனால் தற்பொழுது அவற்றை எழுதாமல் தவிர்ப்பது நலம் என்றே கருதுகிறேன்.
இதுவரை எனக்குள்ள இந்த வெளிப்பாடுகள் யாருக்கும் இல்லையே, யாரும் நமது கருத்துடன் ஒத்துபோவதில்லையே ஒருவேளை அது தவறாக இருக்குமோ என்ற கருத்தில் இருந்தேன் ஆனால் ஆண்டவர் உங்களுக்கும் அதைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை அறியும்போது அது உண்மைதான் என்பதை அறியமுடிகிறது.
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக!
ஆகினும் மாற்றுமத சகோதரர்கள் எவரிடமும் நமது பைபிள் சொல்லும் வசனத்தை வைத்து பேசமுடியாது. அதை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். எனவே அவர்களிடம் பேசும்போது, அவர்களின் வேதம் சொல்லும் கருத்து அடிப்படையிலேயே பேசமுடிகிறது. எனவேதான் நமது வேதம் சொல்வதை மறுக்காமல் சில கருத்துக்களை சொல்ல நேர்ந்தது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
chillsam wrote: /// "தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுவரை யாரிடமும் வெளிப்பட்டிராத கர்த்தருடைய நாமத்தினை முதல் தலைமுறை மனிதர்கள் அறிந்திருந்து வழிபட்டது எப்படி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது;
///
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து தனது பிரசங்கத்தின்போது
17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்.
இங்கு இயேசுமட்டும் அல்ல, பிதாவும் இதுவரை கிரியை செய்து வருகிறார் என்று குறிப்பிடுவதை கவனிக்க.
தேவன் தன்னை யாருக்கு வெளிப்படுத்த விரும்பினாலும் அவன் எந்த ஜாதிக்காரனாக மார்க்ககாரனாக இருந்தாலும் அவனுக்கு வெளிப்படுத்த முடியும்.
அந்நிய ஜாதிக்காரனான பாலாக்குடன் தேவன் நேரடியாக வந்து பேசினார் என்று வேதம் சொல்கிறது. அது எப்படி நீர் பேசமுடியும் என்று அவரிடம் கேட்க முடியுமா? அத்தோடு அவன் சொல்லும் வாக்கு அப்படியே நிறைவேறும் அளவுக்கு வல்லமையை தேவன் அவனுக்கு கொடுத்திருந்தார்.
இயேசுவை அறிவிப்பது என்பது எல்லாவிதத்திலும் மேன்மையானதுதான்! ஆனால் அதுமட்டும்தான் சரி நாம்தான் சரி நம்மை தவிர நமக்கு தெரிந்ததை தவிர வேறு கோணமே கிடையாது என்ற கருத்தில் பேசினால் அடுத்தவர்களை சாபமிட்டால், அவர்களுடன் விவாதிப்பதில் பயனில்லை.
தேவன் செயல்ப்படும்விதத்தை யாராலும் ஆராயமுடியாது. அப்படி செயல்பட அவருக்கு வல்லமை மகத்துவம் எல்லாம் இருக்கிறது.
chillsam wrote: /// பிரச்சினை என்னவென்றால் அநேகர் சொல்வதுபோல சர்வ வல்ல ஏக இறைவனின் தன்மையின் அடிப்படையிலும் பிரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான மொழிகளின் அடிப்படையிலும் இறைவனுக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழங்குவதும் அதன் பொருள் ஒன்றாகவே இருப்பது போலவும் தோன்றினாலும் தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுபவர்களுக்காகக் கொடுத்துள்ள அவருடைய விசேஷித்த நாமத்தை அறிந்து அதன் பெயரில் தொழுதுகொள்ளுவதே சாலச் சிறந்தது;////
நல்ல கருத்துதான் பெயரை ப்படியே சொல்வது மிகவும் நல்லதுதான் ஆனால் அந்தந்த மொழியில் உள்ளவர்களுக்கு அங்குள்ள வார்த்தைக்கு ஒத்தாற்போல் பெயர் இருந்தால்தானே புரியமுடியும். ஆங்கிலத்தில் ஜீசஸ் என்கிறோம் தமிழில் இயேசு என்கிறோம் ஹிந்தியில் அதை கொஞ்சம் மாற்றுகிறோம் இப்படி மாறி மூல மொழியில் உள்ள வார்த்தைக்கும் இதற்கும் அனேக வேறுபாடு ஆகிவிடுகிறது. அதற்காக தேவன் நீ எனது பெயரை மாற்றிவிட்டாய் உன்னை நான் கண்டுகொள்ளவே மாட்டேன் என்றா சொல்லுவார்?
மனதில் யாரை கருத்தில்கொண்டு அந்த வார்த்தைகளை உச்சரிக்கிறோம் என்பதை பொறுத்துதான் பலன் இருக்கிறது. "நாராயணர்" (தண்ணீர்மேல் அசைவடுபவர்) என்று சொல்லிக்கொண்டு "ஏதாவது ஒரு உருவத்தை கற்பனைபண்ணி தொழுதால் அதில் பயனுக்கு பதில் பாவம்தான் மிஞ்சும்.
-- Edited by SUNDAR on Friday 5th of February 2010 04:15:06 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
CHILLSAM WROTE: ////ஆனாலும் ஒரு உயர்ந்த பொருளை விளக்க அவர்களுடைய தெய்வத்தின் பெயரை நான் பயன்படுத்தினாலும் சிவன் உன்னை இரட்சிப்பான் என்று சொல்லமுடியுமா?
இப்படியாக ஒவ்வொரு தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடும்போதே அதனுடன் இணைத்து கூறப்பட்ட செய்திகள் மற்றும் ஓவியம் அல்லது விக்கிரகமே மனக்கண் முன் வருகிறது;
எப்படிப்பார்த்தாலும் இது சரியாக வரும்போல் தெரியவில்லை.////
சகோதரரே! நான் அந்த சகோதரனிடம், அந்த வார்த்தையின் பொருளை குறிப்பிட்டதற்கு காரணம் எல்லோரும் அடைய நினைப்பது ஒரே இறைவனாக இருக்கலாம், ஆனால் அவர் போகும் பாதை தவறு என்பதையும் நீங்களாக ஒரு பெயரை வைத்துகொண்டு
"கிறிஸ்த்தவர்களின் கருத்து தவறு என்று கூறுவதற்கு இங்கே இடமில்லை! "
என்பதை குறிப்பிடுவதர்க்காகத்தான் என்பதை அந்த பதிவை படித்தால் புரியமுடியும்!
அவர்கள் நாராயணன் என்று கூப்பிடுவதை நான் சரிஎன்று சொல்லவரவில்லை. அது ஒரு பண்பு பெயராக இருந்தாலும் அந்த பெயருக்கு பின்னால் ஒரு உருவம் ஏற்கெனவே நிர்மானிக்கப்பட்டுவிட்டது அதன் பிறகு அது குறிப்பிடும் பொருளைபார்த்து பயனில்லை. எனவே அப்பெயர் எவ்விதத்திலும் அநாதி தேவனுக்கு ஏற்புடையது அல்ல!
தமிழில் இயேசு என்னும் பெயருக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா என்று தெரியவில்லை! ஆனால் அந்த பெயரின் பின்னால் ஒரு உருவம் கொடுக்கப்பட்டு இயேசு என்று சொன்னதும் அந்த உருவம் ஞாபகம் வரும் அளவு இதயத்தில் பதிந்துவிட்டது, எனவே கொஞ்சம் பெயரை மாற்றினாலும் எல்லோரும் புரிந்துகொள்வர்.
அதுபோல் ஆதிதேவனை குறிக்கும் சொல்லுக்கு வேறொரு பெயர் வைத்துகொண்டு அதற்க்கு ஒரு உருவமும் கொடுத்து தவறான வழியில் போய்கொண்டு கிறிஸ்த்தவம் தவறு என்று கூறாதீர்கள் என்பதைத்தான் நான் கூற வந்தேநேயன்றி மற்றபடியல்ல!
சிலரை இரட்சிக்க "எல்லோருக்கும் எல்லாம் ஆனேன்" என்ற பவுலின் கூற்றுப்படி சில காரியங்களை அவர்கள் வழியில் சென்று பதிலளித்தால்தான் முடியும், என்ற கருத்திலேயே அவ்வாறு பதிவிட்டிருந்தேன். ஆனால் நமக்கு எங்காவது ஒருவன் தெரியாமல் இடறிவிட்டால் அவனை தாங்கி பிடிப்பதைவிட தள்ளிவிடுவதுதானே சிறந்த குணம்!
வசனத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு நான் பதிலளிக்க கடமைபட்டுள்ளேன். அனால் அதில் நமது வேதத்தில் சொல்லப்படாத இந்து வேத கருத்துக்கள் சில இடம்பெறும் என்பதால் மீண்டும் ஒரு தேவையற்ற விவாதம் வேண்டாம் என்று கருதி நிறுத்தி வைத்துள்ளேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)